ரெனோ கேப்டர் அடிப்படையிலான புதிய 4x4 கிராஸ்ஓவர், இந்தியாவில் விரைவில் அறிமுகம்

By Ravichandran

ரெனோ நிறுவனம், கேப்டர் அடிப்படையிலான புதிய கிராஸ்ஓவர் வாகனத்தை இந்தியாவிற்குள் அறிமுகம் செய்ய உள்ளனர்.

இந்த கேப்டர் 4x4 கிராஸ்ஓவர், விரைவில் ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு அமைக்கபட்டுள்ள புதிய கிராஸ்ஓவர் கார் தான் இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட உள்ளது.

இந்த பெயிரடப்படாத புதிய கிராஸ்ஓவர், டஸ்டர் எஸ்யூவியை அடிப்படையாக கொண்டுள்ளது. 4.4 நீளம் கொண்ட இது, இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் போது, 5-ஸீட்டர் மற்றும் 7-ஸீட்டர் வடிவங்களில் கிடைக்கும். இந்த புதிய கிராஸ்ஓவர், டஸ்டர் எஸ்யூவிக்கு, மேலாக வகைப்படுத்தபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

Autocar நிறுவனத்தின் செய்திகளின் படி, இந்த புதிய கிராஸ்ஓவர், இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் கேப்டர் பேட்ஜ் கொண்டிருக்காது. டஸ்டர் எஸ்யூவியில் உபயோகிக்கப்படும் 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜினை காட்டிலும், இந்த புதிய கிராஸ்ஓவர் காரில் கூடுதல் திறன்மிக்க இஞ்ஜினின் வடிவம் பயன்படுத்தப்பட உள்ளது.

renault-bringing-kaptur-based-new-crossover-into-india

புதிய கிராஸ்ஓவர் காருக்கு, டஸ்டர் எஸ்யூவியில் உள்ள அதே 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஈஸி-ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் தொடரப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும், இந்த புதிய கிராஸ்ஓவர் கார், 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸும் கொண்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகிறது. இந்த புதிய கிராஸ்ஓவர் கார், இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் போது, ஏடபுள்யூடி எனப்படும் ஆல்-வீல் டிரைவ் தேர்வுடன் அறிமுகம் செய்யபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

கேப்டர் அடிப்படையிலான இந்த புதிய கிராஸ்ஓவர், இந்தியாவில் அறிமுகம் செய்யபடுவதற்கு முன்னதாக பிரேசிலில் அறிமுகம் செய்யபடும் என தகவல்கள் வெளியாகிறது.

Most Read Articles
English summary
Renault is in plans to bring a new crossover based on Kaptur 4x4 Crossover to India. Kaptur will soon be available in Russia. The new unnamed crossover is based on Duster SUV. New crossover shall be available in both 5 and 7 seater form and will be around 4.4 meters long. This new crossover is expected to be positioned above Duster in India. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X