ரெனோ டஸ்ட்டர், லாட்ஜி மீது, ரூ.1 லட்சம் வரை சிறப்புச் சலுகைகள்
ரெனோ நிறுவனத்தின் டஸ்ட்டர் மற்றும் லாட்ஜி மாடல்கள் மீது, 1 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகளுடன் வழங்கபடுகிறது.
ரெனோ நிறுவனம் சார்பாக வழங்கபடும் சலுகைகள் குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஆஃபர்கள் கிடைக்கும் மாடல்கள்;
ரெனோ நிறுவனம் சார்பாக தயாரிக்கபடும் ரெனோ டஸ்ட்டர் மற்றும் ரெனோ லாட்ஜி ஆகிய 2 மாடல்கள் மீது இந்த ஆஃபர்கள் வழங்கபடுகிறது.

சலுகைகள் வழங்கப்படுவதற்கான காரணம்;
இந்தியா முழுவதும் அறுவடை திருநாள் இந்த மாதத்தில் கொண்டாடபடுகிறது. தமிழ்நாட்டில் பொங்கல் என்றும், சில மாநிலங்களில் மகர சங்கராந்தி என்றும், வேறு சில மாநிலங்களில் லோஹ்ரி என்ற பெயரிலும் கொண்டாடபடுகிறது.
இந்த நிலையில், லோஹ்ரி பண்டிகையை முன்னிட்டு, இந்த சலுகைகள் வழங்கபடுவதாக ரெனோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆஃபர்கள் கிடைக்கும் காலம்;
ஃபிரான்ஸ் நாட்டை மையாக கொண்டு இயங்கும் நிறுவனமான ரெனோ சார்பாக வழங்கபடும் இந்த சலுகைகள், ஜனவரி 1 முதல் ஜனவரி 31-ஆம் தேதிக்கு இடையில் புக்கிங் மற்றும் டெலிவரி செய்யபட்டால் மட்டுமே கிடைக்கும்.

டஸ்ட்டர் மீதான ஆஃபர்கள்;
ரெனோ டஸ்ட்டர் மாடல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, அதிகப்படியாக 81,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள் வழங்கபடும்.
ஃபைனான்ஸ் ஆஃபர்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, 8.99 சதவிகிதம் என்ற சிறப்பு வட்டி விகிதத்தில் கடன் வழங்கபடுகிறது.
இந்தியா முழுவதும் கிடைக்கும் இந்த சலுகைகளில், பெட்ரோல் வேரியண்ட்கள் மற்றும் டீசல் வேரியண்ட்கள் ஆகிய இரண்டுமே சேர்க்கபட்டுள்ளது.

லாட்ஜி மீதான ஆஃபர்கள்;
ரெனோ லாட்ஜி எம்பிவி மீது அதிகப்படியாக 1 லட்சம் ரூபாய் வரையிலான ஆதாயங்கள் வழங்கபடுகிறது.
மேலும், லாட்ஜி மாடல்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்சேன்ஜ் ஆதாயங்களும் கூடுதலாக கிடைக்கிறது.
ரெனோ இந்தியா சார்பாக வழங்கபடும் இந்த அனைத்து ஆதாயஙகளும், லோஹ்ரி பண்டிகையின் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, லோஹ்ரி ஆஃபர் ஸ்கீம் என்ற பெயரில் வழங்கபடுகிறது.

பிற ஸ்கீம்கள்;
தற்போது வழங்கபடும் சலுகைகளோடு மட்டும் இல்லாமல், ரெனோ நிறுவனம் வழங்கும் பிஎஸ்யூ ஸ்கீம் மற்றும் கார்ப்பரேட் போனஸ் உள்ளிட்ட சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் உபயோகித்து கொள்ளலாம்.

பிற சலுகைகள்;
மேல் குறிப்பிட்டுள்ள சலுகைகளை தவிர்த்து, 6,000 ரூபாய் மதிப்புமிக்க ஆதாயங்களும் வழங்கப்பட உள்ளது.

ஸ்டாக் உள்ளவரை மட்டுமே;
ரெனோ இந்தியா சார்பாக வழங்கபடும் இந்த அனைத்து சலுகைகளும் குறிப்பிட்ட காலம் வரையிலும் மற்றும் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய அறிமுகங்கள்;
ரெனோ நிறுவனம், தங்களின் புதிய டஸ்ட்டர் மாடலை இந்த 2016-ஆம் ஆண்டின் போது மேம்படுத்தி வெளியிட உள்ளது.
மேம்படுத்தி வெளியிட உள்ள 2016 ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட உள்ளது.
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ நிறைவடைந்த உடன், 2016 ரெனோ டஸ்ட்டர் அறிமுகம் தொடர்பான ஏற்பாடுகள் துவங்கும் என தகவல்கள் வெளியாகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
புதிய ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவியின் உற்பத்தி, ஃபிப்ரவரி 2016 முதல் துவக்கம்
ரெனோ நிறுவனத்தின் புதிய டஸ்ட்டர், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபடும்
ரெனோ தொடர்பான செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்


Click it and Unblock the Notifications








