ரெனோ நிறுவனம் உபயோகிக்கபட்ட கார் சந்தைகளில் பிரவேசித்துள்ளது

By Ravichandran

ரெனோ நிறுவனம், இந்தியாவில் உபயோகிக்கபட்ட கார் சந்தைகளில் பிரவேசம் செய்துள்ளது.

ஃபிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ரெனோ நிறுவனம், இந்தியாவில் ப்ரீ-ஓன்ட் கார் எனப்படும் உபயோகிக்கபட்ட கார் சந்தைகளில், ரெனோ செலக்ஷன் ('Renault selection') என்ற பிரான்ட் பெயருடன் நுழைந்துள்ளது.

ரெனோ நிறுவனம், தங்களின் முதல் ப்ரீ-ஓன்ட் கார் ஷோரூமை பெங்களூரூவில் திறந்துள்ளது. இந்த ரெனோ செலக்ஷன் ஷோரூமானது வைட்ஃபீல்ட் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த ரெனோ செலக்ஷன் ஷோரூம் 21,000 சாது அடி பரப்பளவில் பரவி உள்ளது. எந்த நேரத்திலும், இந்த ஷோரூமில் 100 நிறுத்தி வகையில் இட வசதி உள்ளது.

ரெனோ நிறுவனம், இத்தகைய ரெனோ செலக்ஷன் ஷோரூம்களை விரைவில் நாக்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் திறக்க உள்ளது. ரெனோ நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியா முழுவதும் சுமார் 20 ரெனோ செலக்ஷன் ஷோரூம்களையாவது திறந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளது.

ரெனோ செலக்ஷன் புரோகிராம் திட்டத்தின் கீழ், ரெனோ நிறுவனத்தின் தர எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வாகனங்கள், சர்டிஃபிகேஷன் மற்றும் வாரண்டியுடன் மற்றும் ஆர்எஸ்ஏ அல்லது 24 ஹவர்ஸ் ரோட் சைட் அசிஸ்டன்ஸ் (24 hours Road Side Assistance (RSA)) எனப்படும் 24 மணி நேர ரோட் சைட் அசிஸ்டன்ஸ் உள்ளிட்ட தர உறுதிகளுடன் வழங்கப்படுகிறது.

renault-enters-pre-owned-car-market-via-renault-selection-in-bangalore

வாரண்டி மற்றும் ஆர்எஸ்ஏ, ப்ரீ-ஓன்ட் ரெனோ கார்கள் மீது மட்டுமல்லாமல், பிற பிரான்ட்களான மாருதி, ஹுண்டாய், டாடா, ஹோண்டா, செவர்லே, ஹோண்டா மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களின் கார்கள் மீதும் வழங்கபடுகிறது. பல்வேறு பிரான்ட்களின் மீதான இந்த கேஷ்லஸ் வாரண்டி மற்றும் ஆர்எஸ்ஏ, 1 வருடம் அல்லது 20,000 கிலோமீட்டர் வரை, இந்தியா முழுவதும் 1,000 மையங்களில் வழங்கப்படுகிறது.

இந்த ரெனோ செலக்ஷன் ஷோரூம்கள், புதிய ரெனோ கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கும், புதிய ரெனோ கார்களுக்கு பழைய ரெனோ கார்களை எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்கும் உதவிகரமான சேவை வழங்குகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 26, 2016, 16:41 [IST]
English summary
French carmaker Renault has formally entered pre-owned car market in India with launch of its 'Renault selection' - pre-owned car brand. Renault has opened first Renault 'selection' showrooms for pre-owned cars in Bangalore. This showroom is located in Whitefield and spread over 21,000 square feet, which can accommodate 100 cars. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X