ரெனோ மான்சூன் கேம்ப் ஜூலை 15 முதல் துவக்கம்

Written By:

ரெனோ இந்தியா நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்களுக்காக 'ரெனோ மான்சூன் கேம்ப்' என்ற பெயரில் மழைக்கால சர்வீஸ் கேம்ப்களை நடத்துகின்றனர். இந்தியா முழுவதும் நடைபெறும் இந்த சர்வீஸ் கேம்ப்பானது, ஜூலை 15 முதல் ஜூலை 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ரெனோ மான்சூன் கேம்ப்பின் போது ஏராளமான சலுகைகளும், தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன.

இந்தியா முழுதும் உள்ள 210 ரெனோ சேல்ஸ் மற்றும் சர்வீஸ் மையங்களிலும் இந்த ரெனோ மான்சூன் கேம்ப் நடத்தப்படுகிறது. ரெனோ நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்களுக்காக வழங்கும் விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் அனுபவங்களை மேலும் மேம்படுத்த விரும்புகிறது. சர்வீஸ் நடவடிக்கைகளை தாண்டி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ஈர்க்கும் வகையிலான நடவடிக்கைகளுக்கும் ரெனோ நிறுவனம் ஏற்பாடுகள் செய்துள்ளது.

renault-india-monsoon-camp-july-15-july-21-customers-all-over-india

ரெனோ இந்தியா நடத்தும் இந்த ரெனோ மான்சூன் கேம்ப் நடைபெறும் அனைத்து மையங்களிலும் பயிற்சி பெற்ற டெக்னீஷியன்கள் இருப்பார்கள் என அறிவிக்கபட்டுள்ளது. ரெனோ வாகன வாடிக்கையாளர்கள், இந்த ரெனோ செக்யூர் என்ற திட்டத்தை 10% சலுகையில் பெற்று கொள்ளலாம். இந்த ரெனோ செக்யூர் திட்டத்தில், நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் ஆர்எஸ்ஏ எனபப்டும் ரோட் சைட் அசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.

ரெனோ க்விட் வாடிக்கையாளர்களுக்கு, ஏசி ஃபில்டர்கள், 50% மதிப்பிலான தள்ளுபடியில் கிடைக்கிறது. மேலும், வைப்பர் பிளேட்கள் மற்றும் பிரேக் பாகங்கள் 20% தள்ளுபடியில் கிடைக்கும். கூடுதலாக, பிற வேல்யூ ஆட்டட் சர்வீஸ் எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள், ஆக்சஸரீஸ் மற்றும் லேபர் கட்டணங்கள் மீது 15% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

English summary
Renault India is organising its monsoon service camp called as 'Renault Monsoon Camp'. This Service camps are held from from July 15th to 21st across India. Several offers and discounts can be availed in this monsoon service camp organised by Renault. All 210 sales and service outlets from Renault organises this monsoon service camp. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark