ஜூன் 5-ல் இந்தியா முழுவதும் ரெனோ நடத்தும் மாசு அளவு செக்-கப் கேம்ப் நடைபெறும்
ஜூன் 5-ஆம் தேதி ரெனோ இந்தியா நிறுவனம், பொல்யூஷன் செக்-கப் கேம்ப் (Pollution Check-Up Camp) எனப்படும் மாசு அளவு செக்-கப் கேம்ப்பை நடத்துகின்றனர்.
உலக சுற்றுசூழல் தினம், ஜூன் 5-ஆம் தேதி (நாளை) அனுசரிக்கப்படுகிறது. இதனை கொண்டாடும் விதமாக ஃபிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ரெனோ நிறுவனம், இந்தியா முழுவதும் இந்த பொல்யூஷன் செக்-கப் கேம்ப்பை நடத்துகின்றனர். இது, பசுமையான மற்றும் பாதுகாப்பான வருங்காலத்திற்காக இந்த நிறுவனம் காட்டும் அக்கறை மிகுந்த நடவடிக்கைகளில் ஒன்றாக உள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள ரெனோ டீலர்ஷிப்கள், இந்த மாசு அளவு செக்-கப் கேம்ப்பை இலவசமாக நடத்துக்கின்றனர். தற்போதைய ரெனோ வாடிக்கையாளர்கள் மட்டுமே உலக சுற்றுசூழல் தினத்தன்று நடத்தப்படும் இந்த பொல்யூஷன் செக்-கப் கேம்ப்பில் பங்குபெற அனுமதிக்கபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெனோ நிறுவனம் நடத்தும் இந்த பொல்யூஷன் செக்-கப் கேம்ப்பில் பங்குபெறும் வாடிக்கையாளர்களுக்கு பியூசி சர்டிஃபிகேட் வழங்கப்படும். மேலும், ரெனோ கார் உரிமையாளர்களுக்கு ஃப்யூவல் மிச்சம் செய்யும் பல்வேறு யோசனைகள் வழங்கப்படும். கூடுதலாக, ரெனோ வாகனங்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும் வகையில், வாகனங்களின் பராமரிப்பு, வாடிக்கையாளர்கள் முன்னிலையில் செய்து காண்பிக்கப்படும்.

இந்தியாவில் உள்ள அனைத்து ரெனோ ஷோரூம்களுக்கும், இலவச செடிகள் வழங்கி அவற்றை நடும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய இலவச செடிகள், உலக சுற்றுசூழல் தினத்தில் நடத்தப்படும் பொல்யூஷன் செக்-கப் கேம்ப்பில் பங்கு பெறும் வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு பிற நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








