2.21 லட்சம் ரூபாய் மதிப்பிலான சலுகைகளுடன் ரெனோ லாட்ஜி எம்பிவியை பெறலாம்
ரெனோ லாட்ஜி எம்பிவி மீது 2.21 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது.
ரெனோ லாட்ஜி எம்பிவி மீது வழங்கப்படும் சலுகைகள் மற்றும் ஆதாயங்கள் குறித்த தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ரெனோ லாட்ஜி எம்பிவி...
ரெனோ லாட்ஜி எம்பிவி தான் ரெனோ நிறுவனம் சார்பாக, 2015-ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் எம்பி (மல்டி பர்பஸ் வெஹ்கிள்) ஆகும்.
பிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ரெனோ, தங்களின் முதல் எம்பிவிக்கு லாட்ஜி என பெயர் சூட்டினர்.
தற்போது, இதன் விற்பனை கூட்டும் விதத்தில் லாட்ஜி எம்பிவி மீது ஏராளமான சலுகைகளை, ரெனோ நிறுவனம் வழங்கி வருகிறது.

2.21 லட்சம் ரூபாய்க்கான சலுகைகள்;
ரெனோ லாட்ஜி எம்பிவி மீது, 2.21 லட்சம் ரூபாய் மதிப்பிலான சலுகைகளும், ஆதாயங்களும் வழங்கப்படுகிறது.
இந்த சலுகைகள், ஸ்டாக்குகள் உள்ளவரையும், மார்ச் 31-ஆம் தேதி வரையும் மட்டுமே வழங்கப்படும்.

ஆஃபர்கள் கிடைக்காத பகுதிகள்;
ரெனோ லாட்ஜி எம்பிவி மீதான இந்த சலுகைகள், ஸ்கீம்கள் தேர்ந்தெடுக்கபட்ட மாநிலங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்த சலுகைகள், என்சிஆர் பகுதி, பஞ்சாப், சண்டிகர், ஹரியானா, மும்பையை தவிர்த்து மஹாராஷ்டிராவின் பிற பகுதிகளில் இந்த சலுகைகள் கிடைக்காது என
தெரிவிக்கபட்டுள்ளது.

சிறப்பு அம்சம்;
ரெனோ லாட்ஜி எம்பிவி மீது வழங்கப்படும் சலுகைகளிலேயே மிக முக்கியமான விஷயம், ஸ்டாக்குகள் தீரும் வரை, இதை நீங்கள் பட்ஜெட்டுக்கு முந்தைய விலைகளில் வாங்கி மகிழலாம்.

சலுகைகளின் விவரம்;
ரெனோ இந்தியா, ஸ்டெப்அவே மாடல் மீது 2.21 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிச்சயமான ஆதாயங்களை வழங்குகின்றனர்.
ஸ்டெப்அவே மாடலின் தேர்ந்தெடுக்கபட்ட வேரியண்ட்கள் மீது 1.62 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆதாயங்களும், தேர்ந்தெடுக்கபட்ட ட்ரிம்கள் மீது 60,000 ரூபாய் வரையிலான கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகிறது.

பிற சலுகைகள்;
ரெனோ லாட்ஜி எம்பிவியின் பிற வேரியண்ட்கள் மீதும் ஆதாயங்கள் வழங்கப்படுகிறது. பிற வேரியண்ட்கள் மீது, 1.01 லட்சம் ரூபாய் மதிப்பிலான உறுதியான ஆதாயங்களுடன் கிடைக்கிறது.
தற்போது வழங்கப்படும் ஆதாயங்கள் மற்றும் சலுகைகளை தவிர்த்து, வாடிக்கையாளர்கள் கார்ப்பரேட் மற்றும் பிஎஸ்யூ (பொதுதுறை ஊழியர்களுக்கான) ஸ்கீம்களையும் உபயோகித்து கொள்ளலாம்.

ஸீட்டர் தேர்வுகள்;
ரெனோ லாட்ஜி எம்பிவி, 7-ஸீட்டர் மற்றும் 8-ஸீட்டர் ஆகிய தேர்வுகளில் கிடைக்கிறது.
ஸ்டெப்அவே தான், ரெனோ லாட்ஜி எம்பிவி மாடலில் பிரிமியம் மற்றும் அதிநவீன அம்சங்களை கொண்டுள்ளது.

விலை;
ரெனோ லாட்ஜி எம்பிவியின் பேஸ் (அடிப்படை) வேரியண்ட், 8.55 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
இன்னோவாவுக்க சிக்கலை தரும் விலையில் ரெனோ லாட்ஜி அறிமுகம் - விபரம்
ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே மாடல் விற்பனைக்கு அறிமுகம் - அதிகாரப்பூர்வ தகவல்கள்!
லாட்ஜி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








