ரெனோ - நிஸ்ஸான் கூட்டணியின் உற்பத்தி ஆலையில், ஒரு மில்லியனாவது கார் வெளியிடபட்டு சாதனை
ரெனோ - நிஸ்ஸான் கூட்டணியின் உற்பத்தி ஆலை, ஒரு மில்லியன் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

ரெனோ - நிஸ்ஸான் கூட்டணியின் உற்பத்தி ஆலை சென்னை அருகே உள்ள ஓரகடம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த ஒரு மில்லியனாவது வாகனமானது மைக்ரா ஹேட்ச்பேக் கார் ஆகும். இந்த மைக்ரா கார், ஜனவரி 8, 2016 அன்று 12.15 மணிக்கு உற்பத்தி ஆலையில் இருந்து தயாரிக்கபட்டு வெளியாகியது.
ரெனோ - நிஸ்ஸான் கூட்டணி சார்பாக உருவாக்கபட்ட உற்பத்தி ஆலை தான் உலகிலேயே மிகப்பெரிய உற்பத்தி ஆலை ஆகும். இது 45 பில்லியன் இந்திய ரூபாய் முதலீட்டில், 2010-ஆம் ஆண்டில் துவக்கபட்டது.
துவங்கபட்ட காலம் முதல், இந்த உற்பத்தி ஆலையில் இருந்து 32 ரெனோ கார்களும், நிஸ்ஸான் மற்றும் டட்சன் கார்களும் மற்றும் அவற்றை தழுவிய மாடல்களை உற்பத்தி செய்துள்ளது. 2010-ஆம் ஆண்டு முதல், இந்த உற்பத்தி ஆலையில் இருந்து, அனைத்து பிராண்ட்களிலும் இருந்து, பரவலாக ஒரு வருடத்திற்கு சராசரியாக, 2 மாடல்களாவது அறிமுகம் செய்யபடுகிறது.
சென்னையின் ஓரகடம் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த உற்பத்தி ஆலை தான், இந்தியாவின் இரண்டாவது மிக அதிகமாக ஏற்றுமதி செய்யும் ஆலை ஆகும். 2010 முதல் இது வரை, 600,000 கார்கள் சுமார் 106 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபட்டுள்ளது. ரெனோ - நிஸ்ஸான் கூட்டணியின் இந்த உற்பத்தி ஆலை இந்திய சந்தைகளுக்கும், சர்வதேச சந்தைகளுக்குமான தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல், ரெனோ - நிஸ்ஸான் கூட்டணியில் அமைக்கபட்டுள்ள இந்த உற்பத்தி ஆலை பிராந்திய பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு ஆற்றி கொண்டிருக்கிறது. இந்த ஓரகடம் உற்ப்த்தி ஆலை தமிழ்நாட்டில் சுமார் 12,000 பேர் நேரடியாக பணி பெற்றுள்ளனர்.
மேலும், சுமார் 40,000 பேர் அளவிலான பெரிய இந்திய சப்ளையர் செய்ன் (இந்திய விநியோகஸ்தர்கள் சங்கிலி)-னும் இந்த ரெனோ - நிஸ்ஸான் கூட்டணியில் அமைந்த இந்த உற்பத்தி ஆலை மூலம் பயன் பெற்று வருகின்றனர்.


Click it and Unblock the Notifications














