ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ரோல்ஸ்ராய்ஸ் டான்...

ரோல்ஸ்ராய்ஸ் டான்...

இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம், இந்த ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் சொகுசு காரை, உற்பத்தி செய்து வழங்குகிறது.

இது ஊக்கத்திற்காக, 1952 சில்வர் டான் டிராப்ஹெட் மாடலின் அம்சங்களை ஏற்றுக்கொண்டது. ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம், 1952-ல் சில்வர் டான் டிராப்ஹெட் என்ற கோச் கட்டுமான நிறுவனத்தை தங்களின் கார்களை வடிவமைக்க அனுமதித்தனர்.

முன்னதாக, ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள், 2015 ஃபிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யபட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் சொகுசு கார், 6.6 லிட்டர், டர்போசார்ஜ்ட், வி12 இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 563 பிஹெச்பியையும், 780 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் சொகுசு காரின் இஞ்ஜின், இசட்எஃப் 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

இதன் மூலமாக தான் வீல்களுக்கு பவர் மற்றும் டார்க் கடத்தப்படுகிறது.

ஜிபிஎஸ்;

ஜிபிஎஸ்;

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் சொகுசு காரின் கியர்பாக்ஸ், சேட்டலைட் உதவி பெரும் புதிய டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் (Satellite Aided Transmission system) கொண்டுள்ளது.

இந்த டிரான்ஸ்மிஷன் சிஸ்டம், முன்னால் இருக்கும் சாலைகள் குறித்த தகவல்களை வழங்குகிறது. இதற்கு ஏற்றவாறு கியர்கள் மாற்றுவதற்கு உதவிகரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இந்த காரின் செயல் திறனைய்ம் கூட்டுகிறது.

செயல்திறன்;

செயல்திறன்;

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் சொகுசு கார், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 4.9 நொடிகளில் எட்டும் திறன் உடையதாக உள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் சொகுசு கார், அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் என்ற எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தபட்ட வேகத்தை எட்டும் திறன் உடையதாகும்.

பாடிவரக்;

பாடிவரக்;

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் சொகுசு கார், ரெய்த் கூபேவை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், ரெய்த் கூபே மாடலுடன் ஒப்பிடுகையில், டான் கன்வெர்டிபிள் மாடலின் பாடிவரக் 80% அல்லது அதற்கு மேல் புதுமையானது என ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் தெரிவிக்கின்றது.

எடை;

எடை;

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் சொகுசு கார், 2560 கிலோகிராம் எடை கொண்டுள்ளது. இது, ரெய்த் கூபே மாடலை காட்டிலும் 200 கிலோகிராம் கூடுதலான எடை உடையதாகும்.

ஃபேப்ரிக் ஃரூப்;

ஃபேப்ரிக் ஃரூப்;

தங்களின் டான் கன்வெர்டிபிள் சொகுசு கார் தான் உலகிலேயே மிகவும் வாகனம் கன்வெர்டிபிள் வாகனம் என ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் கூறிக்கொள்கிறது.

ரெய்த் கூபேவை அடிப்படையாக கொண்டுள்ள ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் சொகுசு கார், ஃபேப்ரிக் ஃரூப் (ஃபேப்ரிக் மேற்கூரை) கொண்டுள்ளது. இந்த ஃபேப்ரிக் ஃரூப், மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில், 21 நொடிகளில் மூடிக்கொள்ளும் மற்றும் திறந்து கொள்ளும் திறன் கொண்டுள்ளது.

உறுதியான 4-சீட் கன்வெர்டிபிள்;

உறுதியான 4-சீட் கன்வெர்டிபிள்;

தங்களின் டான் கன்வெர்டிபிள் சொகுசு கார் தான் உலகிலேயே மிகவும் உறுதியான 4-சீட் கன்வெர்டிபிள் வாகனம் என ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் கூறுகிறது.

இதை அடைவதற்காக ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம், இதன் சீட்களுக்கு புதிய ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆண்டி-ரோல் பார்கள் கொண்டுள்ளது.

பரிமாணங்கள்;

பரிமாணங்கள்;

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் சொகுசு கார், 5,285 மில்லிமீட்டர் நீளமும், 1,947 மில்லிமீட்டர் அகலமும், 1,502 மில்லிமீட்டர் உயரமும், 3,112 மில்லிமீட்டர் வீல் பேஸ் என்ற அளவிலான பரிமாணங்கள் கொண்டுள்ளது.

பூட் ஸ்பேஸ்;

பூட் ஸ்பேஸ்;

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் சொகுசு கார், லக்கேஜ் வைப்பதற்கு 244 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் சொகுசு கார், அதிக அளவிலான லெதர் மற்றும் மரக்கட்டை உடனான இன்டீரியர் அமைப்பு கொண்டுள்ளது.

மேலும், இதில் தடிமனான கார்பெட்களும், 16-ஸ்பீக்கர் என்டர்டெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுள்ளது.

விலை;

விலை;

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் சொகுசு கார், 6.25 கோடி ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் விரைவில் இந்தியாவில் அறிமுகம்

நாய்களுக்காக ரோல்ஸ்ராய்ஸ் உருவாக்கிய பிரத்யேக கார் மாடல்!

ரோல்ஸ்ராய்ஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் - கூடுதல் படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் - கூடுதல் படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் - கூடுதல் படங்கள்

More from DriveSpark

Article Published On: Friday, June 24, 2016, 17:28 [IST]
English summary
British luxury automaker Rolls-Royce has launched Rolls-Royce Dawn Convertible in India. The Dawn is based on Wraith coupe. But, Rolls-Royce states that 80 percent of bodywork on Dawn is new compared to Wraith. Rolls-Royce claims Dawn is quietest convertible in world. Dawn weighs at 2560 kilograms, 200 kilograms more than Wraith. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+