ரோல்ஸ்ராய்ஸ் பெஸ்போக் லக்கேஜ் பேக்குகள், 10 ரெனோ க்விட் விலையில் அறிமுகம்
ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் எஸ்யூவிக்கு ஏற்ற பெஸ்போக் லக்கேஜ் பேக்குகளை, ரோல்ஸ்ராய்ஸ் கார் உற்பத்தி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யதுள்ள லக்கேஜ் பேக்குகள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

பெஸ்போக் லக்கேஜ் பேக்குகள்;
நெடுந்தூர பயணங்களுக்கோ அல்லது சூப்பர் மார்கெட்டிற்கு கொண்ட செல்வதற்கு ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் எஸ்யூவி சிறப்பான கார் என நீங்கள் நினைத்திருந்தால், அதனை மெய்பிக்கும் வகையில், இந்நிறுவனம் பிரத்யேகமான பெஸ்போக் லக்கேஜ் பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது.
இவை உங்களின் தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

வடிவமைப்பு;
ரோல்ஸ்ராய்ஸ் கார் உற்பத்தி நிறுவனம் வழங்கும் இந்த 6 லக்கேஜ் பேக்குகள், ரோல்ஸ்ராய்ஸ் பெஸ்போக் பிரிவு டிசைனர் மைக்கேல் பிரைட் அவர்களால் வடிவமைக்கபட்டுள்ளது.
இந்த லக்கேஜ் பேக்குகள், ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தால் உருவாக்கபட்ட மிக சிறந்த காரான ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் மாடலில் மிக கச்சிதமாக பொருந்த கூடியதாக உள்ளது.

சிறப்படையாளம்;
ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள 6 லக்கேஜ் பேக்குகளிலும், ரோல்ஸ்ராய்ஸ்-ஸின் சின்னமான ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸி ("Spirit of Ecstasy") என்பதை குறிக்கும் வகையிலான உருவச்சிலைகள் பொரிக்கபட்டுள்ளது.
வீல்கள் உள்ள பேக்குகளில், டபுள் ஆர் ரோல்ஸ்ராய்ஸ் முத்திரைகள், அதன் சக்கரங்களில் பொரிக்கபட்டுள்ளது.
இந்த முத்திரைகள், ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் உள்ளது போன்றே இருக்கும்.

கஸ்டமைஸ் செய்து கொள்ளும் தேர்வுகள்;
ஒவ்வொரு ரோல்ஸ்ராய்ஸ் மோட்டார் கார்களை போல், இந்த ரோல்ஸ்ராய்ஸ் பெஸ்போக் லக்கேஜ் பேக்குகளை வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும்.
வாடிக்கையாளர்கள் விருப்பபட்டால், அவர்களுடைய கார்களின் வண்ணங்களுக்கு ஏற்றவாறு கூட இந்த பெஸ்போக் லக்கேஜ் பேக்குகளின் நிறங்களையும் தேர்வு செய்து பெற்று கொள்ளலாம்.

சிறப்பு அம்சங்கள்;
ரோல்ஸ்ராய்ஸ் பெஸ்போக் லக்கேஜ் பேக்குகள் சிறப்புமிக்க ஹேண்டில்களை கொண்டுள்ளது. இந்த லக்கேஜ் பேக்குகளின் ஹேண்டில்கள் சமமான எடை விநியோகத்தை உறுதி செய்து, கைகளில் அழுத்தம் உணரப்படாதவாறு பார்த்து கொள்கிறது.

விலை;
இந்த ரோல்ஸ்ராய்ஸ் பெஸ்போக் லக்கேஜ் பேக்குகள், அதிர்ச்சியூட்டும் 42,606 டாலர்கள் (இந்திய மதிப்பில் 28.30 லட்சம் ரூபாய்) என்ற விலையில் விற்கபடுகிறது.

ஒப்பீடு;
28.30 லட்சம் ரூபாய் என்ற விலையில் விற்கபடும் ரோல்ஸ்ராய்ஸ் பெஸ்போக் லக்கேஜ் பேக்குகளின் மதிப்பில், இந்தியாவில் சுமார் 10 ரெனோ க்விட் கார்களை வாங்கலாம் என்பது குறிப்பிடதக்கது.

இதர தொடர்புடைய செய்திகள்;
திப்பு சுல்தானை போற்றும் புதிய கோஸ்ட் மைசூர் எடிசன்: ரோல்ஸ்ராய்ஸ் அறிமுகம்
நாய்களுக்காக ரோல்ஸ்ராய்ஸ் உருவாக்கிய பிரத்யேக கார் மாடல்!
ரோல்ஸ்ராய்ஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ரோல்ஸ்ராய்ஸ் பெஸ்போக் லக்கேஜ் பேக்குகள் - கூடுதல் படங்கள்
ரோல்ஸ்ராய்ஸ் பெஸ்போக் லக்கேஜ் பேக்குகள் - கூடுதல் படங்கள்


Click it and Unblock the Notifications








