ஸ்கோடா இந்தியா மழைக்காலத்திற்கு முந்தைய சர்வீஸ் முகாம் நடத்துகிறது

By Ravichandran

ஸ்கோடா இந்தியா நிறுவனம், ப்ரீ மான்சூன் செக்கப் கேம்ப் (Pre-Monsoon Check-Up camp) எனப்படும் மழைக்காலத்திற்கு முந்தைய சர்வீஸ் முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஸ்கோடா நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பாடு செய்துள்ள இந்த சர்வீஸ் முகாம், மே 16 முதல் ஜூன் 15, 2016 வரை நடைபெறுகிறது. இந்தியாவின் அனைத்து பகுதியிலும் உள்ள ஸ்கோடா வாடிக்கையாளர்களும் இந்த சர்வீஸ் முகாமில் கலந்து கொள்ளலாம். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த முறை கலந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

skoda-pre-monsoon-check-up-camp-from-16-may-to-15-june

செக் குடியரசை மையமாக கொண்டு இயங்கும் ஸ்கோடா நிறுவனம், 40 பாயின்ட் செக்கப் சிஸ்டம் பின்பற்றுகிறது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த சில மாதங்களில் மழைக்காலம துவங்க உள்ளது. இலவசமாக நடத்தப்படும் இந்த 40 பாயின்ட் செக்கப் முறைகளும் மழைக்காலத்திற்கு தேவையான தயாரிப்புகளுக்கு உகந்தவையாக இருக்கும். தங்களின் எந்த வாடிக்கையாளர்களும், மழை காலத்தின் போது அவதிப்படகூடாது என்னும் நோக்கில் தான், ஸ்கோடா நிறுவனம் இத்தகைய ஏற்பாடுகளை செய்து வருகிறது.

ஸ்கோடா நிறுவனம், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமான ஆஃபர்களை வழங்குகிறது. ஜெனியூன் பாகங்கள் மற்றும் சஸ்பென்ஷன் பாகங்கள் மீது தள்ளுபடிகளும் வழங்கப்படுகிறது. ஸ்கோடா இந்தியா வழங்கும் இந்த அனைத்து ஆஃபர்களும், ப்ரீ மான்சூன் செக்கப் கேம்ப்பின் போது வழங்கப்படுகிறது.

skoda-pre-monsoon-check-up-camp-from-16th-may-to-15th-june

நிபுணத்துவம் கொண்ட டெக்னீஷியன்கள், ஏர்-கண்டிஷனிங் சிஸ்டம், வென்டிலேஷன் மற்றும் ஹீட்டிங் சிஸ்டங்களின் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். ஸ்கோடா சர்வீஸ் டெக்னீஷியன்கள், ஹெட்லேம்ப்கள், டெயில் லைட்கள், வின்ட்ஸ்கிரீன் வைப்பர்கள் ஆகியவற்றையும் சரி பார்க்கின்றனர். ஏதாவது பிரச்னைகள் காணபட்டால், குறிப்பிட்ட பாகங்களை மாற்றிகொள்ள வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 2, 2016, 7:05 [IST]
English summary
Skoda India organises Pre-Monsoon Check-Up Camp from May 16 to June 15, 2016. Czech-based manufacturer will provide comprehensive 40 point check-up system, which is done for free. Every Skoda from all parts of India can take part in the camp. Anyhow, Tamil Nadu owners have been excluded from this service camp this time. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+