ஸ்கோடா ரேபிட் செடான் மீது 1,00,000 ரூபாய் வரையிலான சலுகைகள் - முழு விவரம்

By Ravichandran

ஸ்கோடா ரேபிட் செடான் தற்போது 1,00,000 ரூபாய் வரையிலான சலுகைகள் மற்றும் ஆதாயங்களுடன் கிடைக்கிறது.

ஸ்கோடா ரேபிட் செடான் மீதான சலுகைகள் மற்றும் இதர விவரங்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ரேபிட் செடான் மீதான சலுகைகள்...

ரேபிட் செடான் மீதான சலுகைகள்...

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் இயங்கும் ஸ்கோடா, செக் குடியரசை மையமாக கொண்டு இயங்கும் கார் உற்பத்தி நிறுவனம் ஆகும்.

இந்த ஸ்கோடா நிறுவனம் வழங்கும் ரேபிட் செடான் மீது 1,00,000 ரூபாய் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது.

ரேபிட் செடான் மீது 80,000 ரூபாய் மதிப்பிலான கேஷ் பெனிஃபிட் எனப்படும் ரொக்க ஆதாயம் வழங்கப்படுகிறது. மேலும், 10,000 ரூபாய் மதிப்பிலான கார்ப்பரேட் ஆதாயங்கள் வழங்கப்படுகிறது.

கூடுதலாக, ஸ்கோடா ரேபிட் செடான் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, 50,000 ரூபாய் மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும் கிடைக்கிறது.

ஃபைனான்ஸ் தேர்வுகள்;

ஃபைனான்ஸ் தேர்வுகள்;

ஸ்கோடா ரேபிட் செடான் வாங்க ஃபைனான்ஸ் முறையினை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, 7.99% வட்டி விகிதத்தில் ஃபைனான்ஸ் தேர்வுகள் கிடைக்கிறது.

சலுகைகள் கிடைக்கும் காலம்;

சலுகைகள் கிடைக்கும் காலம்;

ஸ்கோடா ரேபிட் செடான் மீது வழங்கப்படும் அனைத்து சலுகளைகளும், 2016 ஜூலை மாதம் முழுவதும், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும்.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

ஸ்கோடா ரேபிட் செடான், தேர்வு முறையிலான 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் தேர்வுடன் வெளியாகிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஸ்கோடா ரேபிட் செடானின் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் பெட்ரோல் இஞ்ஜின் தேர்வு முறையிலான 7-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடனும், இதன் டீசல் இஞ்ஜின் தேர்வு முறையிலான 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடனும் கிடைக்கிறது.

தோற்றம்;

தோற்றம்;

ஸ்கோடா ரேபிட் செடான், நல்ல பவரும், அம்சமான தோற்றமும் கொண்டுள்ளது. இதன் செதுக்கபட்ட வளைவுகள், மோல்டிங் செய்யப்பட்ட பாடி லைன்கள் மற்றும் பிளாக் டிசைன்கள் அனைத்து சேர்ந்து, இந்த காரின் அழகை மேலும் கூட்டுகிறது.

இதன் ஃபிரண்ட் கிரில், பிளாக் ஹெட்லம்ப்கள் மற்றும் டியூவல் டான் இன்டீரியர் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் பார்போரை ஈர்க்க வைக்கிறது.

ஸ்கோடா ரேபிட் செடான், ஐவரி அபோல்ஸ்ட்ரி உடனான குரோம் டெக்கார் மற்றும் டியூவல் டோன் மோக்கா நன்றாக யோசித்து சேர்க்கபட்டுள்ளது.

அதிக இட வசதி;

அதிக இட வசதி;

ஸ்கோடா ரேபிட் செடானில் லெக் ரூம் மற்றும் ரூம் ஸ்பேஸ் தாராளமாக உள்ளது. இதில், மொத்தம் 5 பேர் சவுகரியமாக அமர முடியும். இது, மொத்தம் 460 என்ற அளவிலான லக்கேஜ் ஸ்பேஸ் கொண்டுள்ளது.

பாதுகாப்பு வசதி - 1;

பாதுகாப்பு வசதி - 1;

ஸ்கோடா ரேபிட் செடானில், டியூவல் ஃபிரண்ட் ஏர்பேக்குகள் உள்ளது. இது விபத்து நேர்ந்தால் தானாக மூடி திறந்து கொள்ளும். மேலும், விபத்துகள் நடந்தால் தீ விபத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, நெருப்பு தொடர்பான விப்பத்துகள் நேராமல் இருக்க எரிபொருள் விநியோகம் தானாகவே நின்றுவிடும்.

இதன் ஃபிரண்ட் மற்றும் ரியர் ஃபாக் லைட்கள், ஹேலோஜன் லேம்ப்கள் எந்த விதமான வெப்பநிலையிலும் சுலபமாக காரை இயக்க உதவுகிறது.

மேலும், இதில் ஆண்டி-கிளார் இன்டீரியர் ரியர் வியூ மிர்ரர், பாதுகாப்பான பார்வைக்கு உதவு கிறது.

பாதுகாப்பு வசதி - 2;

பாதுகாப்பு வசதி - 2;

ஸ்கோடா ரேபிட் செடானில், ரியர் வின்ட் ஸ்கிரீன், பில்ட் இன்-டைமர் உடைய டீ-ஃபாக்கர் உடன் பொருத்தபட்டுள்ளது.

இந்த ஸ்கோடா ரேபிட் செடானில், எபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ரிமோட் கண்ட்ரோல் லாக்கிங் மற்றும் அன்லாக்கிங், முன் சீட்கள் மற்றும் பின் சீட்களுக்கு உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வகையிலான ஹெட் ரெஸ்ட்ரெயின்ட்ஸ் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் உள்ளன.

பார்க்டிரானிக் சென்சார்கள்;

பார்க்டிரானிக் சென்சார்கள்;

ஸ்கோடா ரேபிட் செடானில் பார்க்டிரானிக் சென்சார்கள் சேர்க்கபட்டுள்ளது. ரியர் பார்க்கிங்கை எளிமைபடுத்த இந்த பார்க்டிரானிக் சென்சார்கள் காரின் பின் பக்கத்தில் உள்ள இடத்தையும், தடைகளையும் ஸ்கேன் செய்து ஆராய்கிறது.

அப்படி தடைகள் இருக்கும் பட்சத்தில், நமக்கு அடியோ சமிஞ்ஞைகளை வழங்குகிறது.

இந்தியாவில் உற்பத்தி;

இந்தியாவில் உற்பத்தி;

ஸ்கோடா ரேபிட் செடான், இந்தியாவில் பூனே அருகே உள்ள சகன் என்ற இடத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், இந்த மாடலை நல்ல சவாலான விலையில் வழங்க முடிகிறது.

போட்டி;

போட்டி;

ஸ்கோடா ரேபிட் செடான் காரானது, ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் ஆகிய மாடல்களுடன் போட்டி போடுகிறது.

விலை;

விலை;

ஸ்கோடா ரேபிட் செடானின் அடிப்படை வேரியன்ட் 7.94 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும், அனைத்து வசதிகளுடன் வழங்கப்படும் டாப் என்ட் வேரியன்ட் 12.19 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விற்பனை செய்யப்பட்டுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஸ்கோடா ரேபிட் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

ஸ்கோடா ரேபிட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வந்தது- விபரம்

ரேபிட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Monday, July 4, 2016, 16:31 [IST]
English summary
Skoda Rapid sedan is offered with several discounts and benefits in Indian market. Customers can availing maximum benefit worth Rs. 1 lakh on purchase of Rapid. Skoda's offer is valid throughout July 2016, across India. Cash benefits worth Rs. 80,000 and corporate benefits worth Rs. 10,000 can be availed. Exchange bonus worth Rs. 50,000 is also offered. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+