முன்பதிவில் அசத்தும் டாடா டியாகோ காரின் வெற்றிக்கான காரணங்கள்!

By Saravana

பிராண்டு மதிப்பை உயர்த்துவதற்கான பல்வேறு முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பல புதிய மாடல்களை தொடர்ந்து களமிறக்கி வருகிறது.

அந்த வகையில், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா டியாகோ கார் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. முன்பதிவில் அசத்தியிருக்கும் புதிய டாடா டியாகோ காரின் வெற்றிக்கான காரணங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

முன்பதிவு

முன்பதிவு

விற்பனைக்கு வந்து ஒரு மாதத்திற்குள் 15,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை டாடா டியாகோ கார் பெற்றிருக்கிறது. மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற பெருமையையும் கடந்த மாதம் பெற்றது.

டிசைன்

டிசைன்

டாடா டியாகோ காரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று அருமையான டிசைன். பட்ஜெட் விலையில் நவீன டிசைன் அம்சங்களுடன் கவர்ச்சியாக இருக்கிறது. டாடா லோகோவை எடுத்துவிட்டு பார்த்தால், இது நிச்சயம் வெளிநாட்டு நிறுவனத்தின் தயாரிப்பாக கருத முடியும். குறை சொல்ல முடியாத அளவுக்கு ஒவ்வொரு பகுதியும் நேர்த்தியாக இருக்கிறது. இந்த காரை முழமையாக பார்ப்பதற்கு 20 நொடிகள் தேவைப்படும் என்று டாடா மோட்டார்ஸ் பெருமிதம் தெரிவிக்கிறது.

இன்டீரியர்

இன்டீரியர்

இன்டீரியரும் மிக கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டு இருப்பதோடு, நவீன தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில், ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டதாக வருகிறது. இந்த இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம் பல்வேறு சிறப்பு வசதிகளை அளிக்கிறது. ஜூக் என்ற அப்ளிகேஷன் மூலமாக, மொபைல்போனை ஆடிோய சிஸ்டத்துடன் இணைத்துக் கொண்டு விரும்பிய பாடலை கேட்க முடியும். மேலும், கூல்டு கிளவ் பாக்ஸும் மிக முக்கிய சிறப்பம்சம்.

இடவசதி

இடவசதி

டாடா கார்களில் பயணிப்பவர்கள் என்றைக்குமே நெருக்கடியான உணர்வை பெற்றதில்லை. அந்த வரிசையில், டாடா டியாகோ காரின் இதன் செக்மென்ட்டில் சிறப்பான இடவசதி கொண்ட மாடலாக இருக்கிறது. இதுவும் வாடிக்கையாளர்களை கவர்வதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

டாடா டியாகோ காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட புதிய பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் ரெவோட்ரான் குடும்பத்தை சேர்ந்த பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க்கையும் வழங்கும். அதேபோன்று, 1.05 லிட்டர் ரெவோடார்க் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 69 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க்கையும் வழங்கும். இரண்டு மாடல்களுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது. மிகச்சிறப்பான செயல்திறன் மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட எஞ்சின்களை பெற்றிருக்கிறது.

 டிரைவிங் ஆப்ஷன்

டிரைவிங் ஆப்ஷன்

டாடா டியாகோ காரின் எஞ்சின் செயல்திறனை விருப்பம்போல் மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது. சிட்டி, ஈக்கோ என்ற இந்த டிரைவிங் ஆப்ஷன்களின் மூலமாக, கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெறவும் வழியிருக்கிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 23.48 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 27.28 கிமீ மைலேஜையும் தரும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது. எனவே, நடைமுறையில் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். மார்க்கெட்டில் இருக்கும் அதிக மைலேஜ் தரும் கார்களின் பட்டியலிலும் இடம்பெற்று விடுவதால், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இந்த கார் 2,400 மிமீ வீல் பேஸ் கொண்டிருப்பதால், அதிக இடவசதியும், வேகத்தடைகளில் எளிதாக கடக்கவும் துணைபுரிகிறது. அத்துடன், 170 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் அனைத்து சாலை நிலைகளுக்கும் ஏற்ற ஹேட்ச்பேக் மாடலாகவும் கருத முடியும். மேலும், 242 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் உள்ளது.

விலை

விலை

அனைத்தும் சிறப்பாக இருப்பதோடு, கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் ரூ.3.72 லட்சம் சென்னை ஆன்ரோடு விலையிலிருந்தும், டீசல் மாடல் ரூ.4.54 லட்சம் சென்னை ஆன்ரோடு விலையிலிருந்தும் கிடைக்கிறது.

 காரணம் ஆயிரம்...

காரணம் ஆயிரம்...

நகர்ப்புற பயன்பாட்டிற்கு மிகச் சிறந்த மாடல்களில் ஒன்றாக கூறலாம். இடவசதி, வசதிகள், விலை என அனைத்திலும் நிறைவை தரும் மாடலாக மாறியிருக்கிறது டாடா டியாகோ.

More from DriveSpark

Article Published On: Saturday, May 28, 2016, 11:22 [IST]
English summary
Some Good things you should know About Tata Tiago.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+