புதிய மாருதி விட்டாரா.. இதுவரை வெளிவராத 10 முக்கிய விஷயங்கள்!

Written By:

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாக இருக்கும் மாடல்களிலேயே மிக மிக அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிதான். கிடுகிடு வளர்ச்சி கண்டு வரும் காம்பேக் எஸ்யூவி மார்க்கெட்டில், மாருதியிடமிருந்து வரும் ஓர் புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி என்பதே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம்.

பொதுவாக, மாருதி கார்கள் என்றாலே, குறைந்த பராமரிப்பு செலவீனம், சிறந்த எரிபொருள் சிக்கனம், பெரிய அளவிலான சர்வீஸ் மையங்களின் கட்டமைப்பு போன்ற விஷயங்கள், வாடிக்கையாளர் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அவற்றை இந்த எஸ்யூவியும் நிறைவு செய்யும் என்ற அளவிலேயே தகவல்கள் வருகின்றன. எனவே, மாருதியின் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியை வாங்குவதற்கு இப்போதே பலர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தநிலையில், இந்த புதிய எஸ்யூவி பற்றிய 10 முக்கிய விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

01. இந்தியாவில் தயாரான மாடல்

01. இந்தியாவில் தயாரான மாடல்

சுஸுகி ஐவி-4 எஸ்யூவி கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்டு மாருதியின் கார் வடிவமைப்புப் பிரிவுத் தலைவர் சிவி.ராமன் தலைமையிலான பொறியாளர் குழுவினர்தான் இந்த புதிய மாடலை உருவாக்கியுள்ளனர்.

 02. மாருதி உருவாக்கிய முதல் மாடல்

02. மாருதி உருவாக்கிய முதல் மாடல்

மாருதி நிறுவனத்தின் 30 ஆண்டு கால வரலாற்றில், அந்த நிறுவனம் சொந்தமாக உருவாக்கிய முதல் கார் மாடல் விட்டாரா பிரெஸ்ஸா.

 03. ஜப்பானில் ஆய்வு

03. ஜப்பானில் ஆய்வு

இந்த எஸ்யூவியின் பாகங்களின் துரு பிடிக்காமல் தாங்கும் தர அளவை கணக்கிடும் ஆய்வும், விண்ட் டனல் எனப்படும் காரின் காற்றியக்கவியல் தன்மையை ஆய்வு செய்வதற்கான சோதனையும் ஜப்பானிலுள்ள சுஸுகியின் சோதனை மையத்தில் மேற்கொள்ளப்பட்டது.

04. மினி எஸ்யூவி

04. மினி எஸ்யூவி

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மஹிந்திரா டியூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியாளராக இருக்கும்.

05. டீசல் ஹைபிரிட் மாடல்

05. டீசல் ஹைபிரிட் மாடல்

ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது. சியாஸ், எர்டிகா கார்களைத் தொடர்ந்து இதன் டீசல் மாடலில் SHVS ஹைபிரிட் சிஸ்டம் கொண்டதாக வருகிறது.

06. மைலேஜில் நம்பர்- 1

06. மைலேஜில் நம்பர்- 1

சுஸுகியின் SHVS ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட மாருதி சியாஸ் கார் லிட்டருக்கு 28.09 கிமீ மைலேஜையும், எர்டிகா கார் லிட்டருக்கு 24.52 கிமீ மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் டீசல் ஹைபிரிட் மாடல் லிட்டருக்கு 25.9 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் எஸ்யூவி மாடல் என்ற பெரும் வாய்ப்புள்ளது.

 07. குட் நியூஸ்

07. குட் நியூஸ்

இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியை சாதாரண டீலர்ஷிப்புகள் வழியாக விற்பனை செய்ய மாருதி முடிவு செய்திருக்கிறது. எனவே, நெக்ஸா ஷோரூமை தேடி அலையாமல், உங்கள் வீட்டிற்கு அருகாமையிலுள்ள மாருதி டீலரிலேயே முன்பதிவு, டெலிவிரி, விற்பனைக்கு பிந்தைய சேவைகளை பெற முடியும்.

08. பாதுகாப்பு அம்சங்கள்

08. பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு விஷயத்தில் மாருதி கார்கள் மீது எதிர்மறை விமர்சனங்கள் இருந்து வருகின்றன. அதனை களையும் நடவடிக்கைகளை மாருதி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த புதிய எஸ்யூவியில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஏர்பேக்குகள் அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக வழங்கப்படும்.

08. இரட்டை வண்ணக் கலவை

08. இரட்டை வண்ணக் கலவை

இரட்டை வண்ணக் கலவையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளைய தலைமுறை வாடிக்கையாளர்கள் இந்த இரட்டை வண்ணக் கலவை வெகுவாக கவரும் என நம்பலாம்.

09. எதிர்பார்க்கும் விலை

09. எதிர்பார்க்கும் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் ரூ.6.50 லட்சம் முதல் ரூ.9.50 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

10. அறிமுகம் தேதி

10. அறிமுகம் தேதி

அடுத்த மாதம் 3ந் தேதி இந்த புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

 
English summary
Some Interesting Things About Maruti Vitara Brezza.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark