சாங்யாங் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி, 2019-ல் அறிமுகம்

By Ravichandran

சாங்யாங் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி, 2019-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என செய்திகள் வெளியாகிறது.

சாங்யாங் அறிமுகம் செய்ய உள்ள அதன் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்ல்டைரில் தெரிந்து கொள்ளலாம்.

எலக்ட்ரிக் கார் சந்தையில் சாங்யாங்...

எலக்ட்ரிக் கார் சந்தையில் சாங்யாங்...

தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் சாங்யாங் நிறுவனம், எலக்ட்ரிக் கார் சந்தையில் நுழைய முழு முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.

இந்த நிறுவனம், புதிய எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் மாடல் உருவாக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

உதவிய மஹிந்திரா;

உதவிய மஹிந்திரா;

6 வருடங்களுக்கு முன் இந்த தென் கொரியாவை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனம், திவால் ஆகும் நிலையில் இருந்தது.

அப்போது, இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் மஹிந்திரா நிறுவனம் தான், இந்த சாங்யாங் நிறுவனத்தை அவல நிலையில் இருந்து காப்பாற்றியது.

பினின்ஃபரினாவின் டிசைன்;

பினின்ஃபரினாவின் டிசைன்;

பினின்ஃபரினா என்ற பெயரில் இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் டிசைன் நிறுவனமும், மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதனால், முன்பு இருந்த டிசைனை காட்டிலும், புதிய சாங்யாங் கிராஸ்ஓவர் எஸ்யூவி நல்ல டிசைன் அம்சங்களுடன் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

குறியீட்டு பெயர்;

குறியீட்டு பெயர்;

சாங்யாங் நிறுவனத்தின் புதிய கிராஸ்ஓவர், சி300 (C300) என்ற குறியீட்டு பெயர் (கோட் நேம்) கொண்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

சி300 (C300) என்ற குறியீட்டு பெயர் கொண்ட புதிய கிராஸ்ஓவர், சர்வதேச சந்தைகளில் 2017-ஆம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழுமையான எலக்ட்ரிக் வேரியன்ட் 2019-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும்.

வகைப்படுத்தல்;

வகைப்படுத்தல்;

சி300 (C300), நிகழ் தலைமுறை டிவோலி மற்றும் டிவோலி எக்ஸ்எல்வி-க்கும் இடையே வகைப்படுத்தப்படும். சாங்யாங் நிறுவனம், ஸ்டாண்டர்ட் டிவோலியை, இந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது காட்சிபடுத்தபட்டது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 9, 2016, 16:48 [IST]
English summary
South Korean automaker SsangYong is to launch its First electric SUV by 2019. Mahindra & Mahindra has controlling stake in SsangYong and Pininfarina - Italy based design firm. Hence, there are hopes for SsangYong's new crossover adopting better design. This New crossover is codenamed as C300. It is expected to slot between current generation Tivoli and Tivoli XLV...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+