டெல்லியில் 2000 சிசி-க்கும் கூடுதலான டீசல் வாகனங்கள் மீதான தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

By Ravichandran

டெல்லியில் பெரிய டீசல் கார்கள் மீதான தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

முன்னதாக, 2000 சிசி-க்கும் அதிகமான கொள்ளளவு கொண்ட வாகனங்களின் விற்பனை மற்றும் பதிவுக்கு தடை விதிக்கபட்டிருந்தது. இது தொடர்பான விசாரணை நேற்று (31 மார்ச் அன்று) மீண்டும் நிகழ்ந்தது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர் தலைமையிலான 3 நபர் ஸ்பெஷல் பெஞ்ச் இந்த விசாரணையை நடத்தியது. அப்போது, 2000 சிசி-க்கும் அதிகமான கொள்ளளவு கொண்ட வாகனங்களுக்கு முன்பு விதிக்கபட்டிருந்த தடை நீட்டிக்கபட்டு உத்தரவு வழங்கபட்டது.

மேலும், 2000 சிசி-க்கும் கூடுதலான கொள்ளளவு கொண்ட வாகனங்கள் மீதான தடை விலக்கி கொள்ளபட்டாலும், இத்தகைய டீசல் வாகனங்கள் மீது சுற்றுச்சூழல் செஸ் (என்விரான்மெண்டல் செஸ்) வரி விதிக்கபடும் என தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர் தலைமையிலான 3 நபர் ஸ்பெஷல் பெஞ்ச் தெரிவித்திருந்தது.

supreme-court-extends-sales-ban-on-large-2000-cc-diesel-cars-in-delhi-region

இதற்கிடையில், தற்போது டீசலை அடிப்படையாக கொண்டு இயங்கும் டேக்ஸிகள், சிஎன்ஜி-க்கு மாறிக்கொள்ள ஒரு மாத காலம் கூடுதல் அவகாசம் வழங்கபட்டுள்ளது. இந்த முடிவு, ஆப்பை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஓலா மற்றும் உபேர் ஆகிய கேப் சர்வீஸ் வழங்கும் நிறுவனங்களுக்கு பெரும் ஆறுதலாக இருக்கும்.

டெல்லி தான் உலக அளவில் மிக அதிகமான மாசு உமிழ்வு கொண்ட நகரமாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, April 1, 2016, 10:30 [IST]
English summary
The Supreme Court has extended registration ban on diesel cars with engines size of 2000cc and above until next hearing on this subject. Earlier, Supreme court imposed ban on vehicles, which are more than 2,000 cc. Supreme Court said that, court would consider imposing an environmental cess on diesel vehicles, if the ban on registration of diesel vehicles are lifted. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+