யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் பலத்தை நிரூபித்த சுஸுகி இக்னிஸ் கார்!

Written By:

புத்தாண்டு துவக்கத்தில் புதிய இக்னிஸ் காரை மாருதி கார் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே கார் ஐரோப்பிய நாடுகளில் மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி நிறுவனத்தின் பிராண்டில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது.

இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு செல்ல இருக்கும் சுஸுகி இக்னிஸ் காரை யூரோ என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்ட் செய்து பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்துள்ளது. அதன் முடிவுகளையும் வெளியிட்டு இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

இரண்டு மாடல்கள் சோதனை

இரண்டு மாடல்கள் சோதனை

சுஸுகி இக்னிஸ் காரின் இரண்டு வேரியண்ட்டுகளை சோதனை செய்திருக்கிறது யூரோ என்சிஏபி அமைப்பு. அதாவது, குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இக்னிஸ் காரையும், அதிகபட்ச பாதுகாப்பு வசதிகள் கொண்ட இக்னிஸ் காரையும் தனித்தனியாக சோதனை நடத்தியிருக்கிறது யூரோ என்சிஏபி அமைப்பு.

ஸ்டான்டார்டு மாடல்

ஸ்டான்டார்டு மாடல்

விபத்தின்போது சீட் பெல்ட்டை இறுக்கும் சீட் பெல்ட் ப்ரீடென்ஷனர், திடீரென சீட் பெல்ட் இறுக்கப்படும்போது பயணிகளுக்கு மார்பு பகுதியில் காயம் ஏற்படுவதை தவிர்க்கும் லோடு லிமிட்டர், சைல்டு சீட்டிற்கு அதிக பாதுகாப்பு வழங்கும் ஐசோஃபிக்ஸ் மவுண்ட் பாயிண்ட்டுகள், ஏர்பேக் கட் ஆஃப் சுவிட்ச் மற்றும் சீட் பெல்ட் ரீமைன்டர் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் கிராஷ் டெஸ்ட்டுக்கு உட்படுத்தப்பட்ட இக்னிஸ் காரின் பேஸ் மாடலில் இருந்தன.

டாப் வேரியண்ட் மாடல்

டாப் வேரியண்ட் மாடல்

அதிகபட்ச பாதுகாப்பு வசதிகள் கொண்ட மாடலில் கூடுதலாக கேமரா மூலமாக மோதல் ஏற்படப்போவதை முன்கூட்டியே கண்டறிந்து தானியங்கி பிரேக் பிடிக்கும் வசதி, தடம் மாறுவதை கண்டறிந்து எச்சரிக்கும் லேன் அசிஸ்ட் சிஸ்டம், பாதசாரிகளை கண்டறிந்து எச்சரிக்கும் வசதி, நகர்ப்புறங்களில் செல்லும்போது அவசர கால பிரேக் பிடிக்கும் நுட்பம், விரைவு சாலைகளில் செல்லும்போது ரேடார் சாதனத்தின் உதவியுடன் செயல்படும் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை இருந்தன.

பேஸ் மாடல் முடிவு

பேஸ் மாடல் முடிவு

இந்த இரு சுஸுகி இக்னிஸ் கார் மாடல்களும் மணிக்கு 64 கிமீ வேகத்தில் மோதச் செய்து ஆய்வு செய்யப்பட்டன. இதில், குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இக்னிஸ் கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு அம்சத்தில் 79 சதவீத மதிப்பீட்டையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சத்தில் 79 சதவீத மதிப்பீட்டையும் பெற்றது.

ரேட்டிங்

ரேட்டிங்

ஒட்டுமொத்த தர மதிப்பீட்டில் அதிகபட்சமான 5 புள்ளிகளுக்கு 3 புள்ளிகளை பெற்றது. மேலும், ஓட்டுனரின் மார்பு பகுதிக்கான பாதுகாப்பு குறைவாக இருந்ததும் தெரிய வந்தது.

டாப் வேரியண்ட் முடிவு

டாப் வேரியண்ட் முடிவு

அதேநேரத்தில், அதிகபட்சமான பாதுகாப்பு வசதிகளை கொண்ட இக்னிஸ் கார் 5க்கு 5 என்ற அதிகபட்ச தர மதிப்பீட்டை பெற்றது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 87 சதவீத மதிப்பீட்டையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 79 சதவீத மதிப்பீட்டையும் பெற்றது.

இந்திய மாடல் எப்படியிருக்கும்?

இந்திய மாடல் எப்படியிருக்கும்?

ஒட்டுமொத்த தர மதிப்பீட்டில் அதிகபட்ச பாதுகாப்பு வசதிகள் கொண்ட மாடல் அசத்தியிருக்கிறது. இந்த நிலையில், இக்னிஸ் கார் இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஆனால், ஐரோப்பிய மாடலுக்கான நிகரான பாதுகாப்பு வசதிகள் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் இக்னிஸ் காரில் இருக்குமா என்பது சந்தேகமே.

ஆவலுடன்...

ஆவலுடன்...

கிராஸ்ஓவர் ஸ்டைலில் மாருதி அறிமுகம் செய்ய இருக்கும் புதிய இக்னிஸ் கார் மீது வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. நவீன வசதிகள், தனித்துவமான வடிவமைப்புடன் தோதான பட்ஜெட்டில் இந்த கார் மார்க்கெட்டில் களமிறங்க உள்ளது.

English summary
Global NCAP has crash tested two variants of the Maruti Suzuki Ignis, standard and the one with a safety pack, and they scored 3 and 5 points respectively.
Story first published: Thursday, December 1, 2016, 10:43 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark