சுஸுகி இக்னிஸ் காரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியானது

Written By:

இந்தியாவில் மாருதி நிறுவனம் இக்னிஸ் என்ற மினி க்ராஸ்ஓவர் ரக கார் மாடலை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பது தெரிந்ததே. அடுத்த வாரம் நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் பார்வைக்கு வைக்கப்படுவதுடன், இந்தியாவுக்கான மாடலின் விபரங்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், இதற்கு சற்று முன்னதாகவே, சுஸுகியின் தாய் நாடான ஜப்பானில் இந்த காரின் விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. மேலும், முதல்முறையாக இந்த காரின் இன்டீரியர் படங்களையும் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவை அனைத்தையும் ஸ்லைடரில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

வடிவம்

வடிவம்

3,700மிமீ நீளம், 1,660மிமீ அகலம், 1,595மிமீ உயரம் மற்றும் 2,435மிமீ வீல் பேஸ் கொண்டது. சுஸுகி நிறுவனத்தின் அடக்கமான வகை கார் தயாரிப்பு கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

 எடை

எடை

எனவே, இந்த காரின் எடை வேரியண்ட்டுக்கு தக்கவாறு 880 கிலோ முதல் 920 கிலோ வரை மட்டுமே இருக்கும். அதே நேரத்தில் உறுதியான, இலகு எடை கொண் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடல்

ஜப்பானில் இந்த கார் 90 பிஎச்பி பவரையும், 118 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 1,242 சிசி டியூவல்ஜெட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும், சுஸுகியின் SHVS என்ற ஹைபிரிட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருப்பதால், 3 பிஎச்பி பவரை அளிக்கும் மின் மோட்டாரும் உள்ளது. இந்த ஹைபிரிட் தொழில்நுட்பம் இந்தியாவில் சியாஸ், எர்டிகா கார்களின் டீசல் மாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கியர்பாக்ஸ்

கியர்பாக்ஸ்

ஜப்பானில் விற்பனைக்கு வரும் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டது. அத்துடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனலாக வழங்கப்படும்.

மைலேஜ்

மைலேஜ்

ஹைபிரிட் சிஸ்டம் இந்த பெட்ரோல் கார் ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட கார்களுக்கான மைலேஜ் கணக்கீடுகளின்படி, லிட்டருக்கு 28.8 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் அனைவரின் புருவத்தையும் உயர்த்தியிருக்கிறது. மேலும், இது க்ராஸ்ஓவர் ரக மாடல் என்பதையும் கவனிக்க வேண்டும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த கார் 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. ஆப்பிள் கார் ப்ளே, பின் இருக்கையை மடக்கும் வசதி, தடம் மாறுவதை எச்சரிக்கும் வசதி, டியூவல் ஏர்பேக்ஸ், சைடு ஏர்பேக்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகளுடன் ஜப்பானில் களம் காண்கிறது.

அறிமுக தேதி

அறிமுக தேதி

ஜப்பான் மார்க்கெட்டில் விபரங்கள் வெளியிடப்பட்டுவிட்டாலும், அடுத்த மாதம் 18ந் தேதி அங்கு முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலமாக அறிமுகம் செய்யப்படுவதுடன், இந்தியாவுக்கான இக்னிஸ் மாடலின் தொழில்நுட்ப விபரங்களும் வெளியிடப்படும்.

 
English summary
Suzuki Ignis Specification and Features Revealed in Japan.
Story first published: Monday, January 25, 2016, 10:17 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark