டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கமர்ஷியல் வாகன மையம் மதுரையில் துவக்கம்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் புதிய கமர்ஷியல் வாகன மையத்தை மதுரையில் திறந்துள்ளனர்.
வெற்றி மோட்டார்ஸ் என்ற பெயரில் திறக்கபட்டுள்ள 3எஸ் (3S) கமர்ஷியல் வாகன மையமானது என்ஹெச் 7 பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. 3எஸ் மையம் என்பது சேல்ஸ், ஸ்பேர்ஸ் மற்றும் ஆகியவற்றை குறிக்கிறது. இந்த டாடா மோட்டார்ஸ் மையம், மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் மையாக விளங்கும்.

வெற்றி மோட்டார்ஸ் என்ற பெயரில் உள்ள இந்த 3எஸ் கமர்ஷியல் வாகன மையம், 4,000 சதுர மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின், சேல்ஸ், சர்வீஸ் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். இந்த புதிய கமர்ஷியல் வாகன மையம், ஒரு நாளில் 30 வாகனங்களை கையாளும் திறன் கொண்டுள்ளது.
வெற்றி மோட்டார்ஸ், மொத்தம் 8 வர்க்ஷாப் பே-க்கள் கொண்டுள்ளது. மேலும், 2 கூடுதல் பே-க்கள் எமர்ஜென்சி மற்றும் விபத்து தொடர்பான ரிப்பேர்களை மேற்கொள்வதற்காக ஒதுக்கபட்டுள்ளது. இங்கு டாடா வாடிக்கையாளர்களின் தேவைகளை கவனித்து கொள்ள 24 மணி நேரமும் பயிற்சி பெற்ற டெக்னீஷியன்கள் உள்ளனர்.

தங்கள் வாகனங்கள் சர்வீஸ் செய்யப்படும் நேரத்தில், டிரைவர்கள் மற்றும் அவர்களின் அசிஸ்டெண்ட்கள் அவர்களுக்கு என வழங்கப்பட்டுள்ள ஸ்பெஷலான ரெஸ்ட் ரூம்களில் ஓய்வு எடுத்து கொள்ளலாம். மேலும், இங்கு வாகனங்ககளை டிஸ்பிளே செய்வதற்கான இடமும் உள்ளது.
கூடுதலாக, வெற்றி மோட்டார்ஸ் மையத்தில், வை-ஃபை வசதியும் வழங்கபட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் தங்களது பந்தகளுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்க முடியும்.



Click it and Unblock the Notifications








