டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மான்சூன் செக்கப் கேம்ப் விரைவில்...

By Ravichandran

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், மழைக்கலத்திற்கு முந்தைய சர்வீஸ் கேம்ப்களை நடத்த உள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மழை காலம் நெருங்கி வருகிறது. இதையொட்டி, பல்வேறு கார் நிறுவனங்கள், இலவச செக்கப் கேம்ப்களை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும், மான்சூன் செக்கப் கேம்ப் என்ற பெயரிலான மழை கால சர்வீஸ் கேம்ப்களை ஜூலை 15 முதல் ஜூலை 21 வரை நடத்த உள்ளனர். இந்த சர்வீஸ் கேம்ப்கள், இந்தியா முழுவதும் 285 நகரங்களில் உள்ள 533 ஒர்க்ஷாப்களில் நடத்தப்படும். இந்த சர்வீஸ் கேம்ப்களில், பாசஞ்ஜர் கார்கள் மற்றும் யூட்டிலிட்டி கார்களை சர்வீஸ் செய்து கொள்ளலாம்.

tata-motors-to-host-free-monsoon-check-up-camp-customers-throughout-india

இதோடு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் இலவச செக்கப்களையும், ஒரிஜினல் உதிரி பாகங்கள் மீது 20% தள்ளுபடிகளையும் பெறலாம். மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 20 சப்ளையர்களுடன் இணைந்து, ஆக்சஸரீஸ் மற்றும் வேல்யூ ஆட்டட் சர்வீஸ் எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் மீது 10% வரை தள்ளுபடி வழங்குகின்றனர்.

இந்த மான்சூன் செக்கப் கேம்ப்களின் போது, லேபர், பாகங்கள் மற்றும் பாதுகாப்பான மழைக்கால டிரைவிங் டிப்ஸ்களை தவிர்த்து, டயர்கள் மற்றும் பேட்டரிகள் மீது ஏராளமான ஆதாயங்களை பெறலாம்.

மேலும், வாடிக்கையாளர்கள் இலவச டாப் வாஷ், 40-பாயின்ட் தீவிர வாகன செக்கப் செய்து கொள்ளலாம். இதோடு மட்டுமல்லாமல், பேட்டரி ரீ-பிலேஸ்மன்ட் (பேட்டரி மாற்றம் - பை பேக் முறையில்) மற்றும் ஆர்எஸ்ஏ எனப்படும் ரோட் சைட் அசிஸ்டன்ஸ் பாலிசி, உள்ளிட்டவற்றின் மீது 1000 ரூபாய் தள்ளுபடி பெறலாம். கூடுதலாக, ரெஃப்ஃபெரல் ஸ்கீம் அடிப்படையில், வாடிக்கையாளர்கள் தங்களின் உறவினர்கள் அல்லது நண்பர்களை அறிமுகம் செய்து, அதன் மூலம் ஸ்பெஷல் ஆஃபர்களை பெறலாம்.

இவற்றை எல்லாம் தாண்டி, தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில், வாடிக்கையாளர்கள் டியாகோ ஹேட்ச்பேக், செஸ்ட் செடான் மற்றும் போல்ட் ஹேட்ச்பேக் ஆகிய மாடல்களின் டெஸ்ட் டிரைவ் மேற்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் விருப்பபட்டால், வேண்டுகோள்கள் பேரில் அவர்களின் தற்போதைய கார்களின் மதிப்பீடுகளும் செய்யப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் புதிய கார்களை வாங்க விரும்பினால், அவர்களுக்கு எக்சேஞ்ச் ஆதாயங்களும், ஸ்பாட் லோன் அப்ரூவல்களும் செய்து தரப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 13, 2016, 8:19 [IST]
English summary
Tata Motors is rolling out Comprehensive Monsoon Check Up For Free for its Customers. Tata Motors is organising the free monsoon check up camps from July 15 to 21, 2016. These camps will be held in 533 workshops in 285 cities, which would cater passenger and utility vehicles across India. There are lots of Offers during free monsoon check up camps. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+