டாடா மோட்டார்ஸ் வழங்கும் சலுகைகள் மற்றும் ஆதாயங்கள் - முழு விவரம்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் தயாரிப்புகள் மீது ஏராளமான சலுகைகள் மற்றும் ஆதாயங்களை வழங்கி வருகின்றனர்.
டாடா மோட்டார்ஸ் வழங்கும் சலுகைகள், ஆதாயங்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;
இந்த 2016 ஜூலை மாதத்தின் போது ஏராளமான கார் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தம் 4 மாடல்கள் மீது சலுகைகளை அள்ளி தருகின்றனர்.
இந்த சலுகைகள் அனைத்தும் ஜூலை மாதம் வரை மட்டும், ஸ்டாக்குகள் உள்ளவரை மட்டும் கிடைக்கும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், விற்பனையில் சற்று தள்ளாடி வருகிறது. அதன் விற்பனை அளவுகளை அதிகரிப்பதற்காகவும் இத்தகைய சலுகைகள் வழங்கப்படுகிறது.

டாடா நானோ;
டாடா நானோவின் அனைத்து வேரியன்ட்கள் மீதும் சலுகைகள், ஆதாயங்கள் கிடைக்கிறது.
ஒட்டுமொத்தத்தில், டாடா நானோ மீது 30,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் கிடைக்கும்.
டாடா நானோ மீது, கேஷ் டிஸ்கவுன்ட் எனப்படும் ரொக்க தள்ளுபடி என்ற பெயரில் 15,000 ரூபாயும், எக்ஸ்சேஞ்ச் போனஸ் என்ற பெயரில் 15,000 ரூபாயும் சலுகைகளாக வழங்கப்படுகிறது.

டாடா போல்ட்;
டாடா போல்ட் ஹேட்ச்பேக் மீது 45,000 ரூபாய் மதிப்பிலான சலுகைகள், ஆதாயங்கள் கிடைக்கிறது.
டாடா போல்ட் ஹேட்ச்பேக் மீது, கேஷ் டிஸ்கவுன்ட் என்ற பெயரில் 20,000 ரூபாயும், எக்ஸ்சேஞ்ச் போனஸ் என்ற பெயரில் 25,000 ரூபாயும் சலுகைகளாக வழங்கப்படுகிறது.

டாடா செஸ்ட்;
டாடா செஸ்ட் காம்பேக்ட் செடான் மீது, மொத்தம் 45,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள், சலுகைகள் கிடைக்கிறது.
டாடா செஸ்ட் காம்பேக்ட் செடான் மீது, எக்ஸ்சேஞ்ச் போனஸ் என்ற பெயரில் 25,000 ரூபாயும், கேஷ் டிஸ்கவுன்ட் என்ற பெயரில் 20,000 ரூபாயும் சலுகைகளாக வழங்கப்படுகிறது.

டாடா சஃபாரி ஸ்டார்ம்;
கடைசியாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டாடா சஃபாரி ஸ்ட்ராம் மீது ஒட்டுமொத்தமாக 50,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள், சலுகைகள் வழங்குகிறது.
டாடா சஃபாரி ஸ்ட்ராம் மீது, 30,000 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ் என்ற பெயரிலும், 20,000 ரூபாய் கேஷ் டிஸ்கவுன்ட் என்ற பெயரிலும் சலுகைகளாக வழங்கப்படுகிறது.

சலுகைகள் இல்லாத மாடல்;
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடலான டாடா டியாகோ ஹேட்ச்பேக் போன்ற மாடல்கள் மீது எந்த விதமான சலுகைகளும் வழங்கப்படவில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;
75% தள்ளுபடியில் மழைகாலத்திற்கு தேவையான ஆட்டோமொபைல் ஆக்சஸரீஸ்
மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் சலுகைகள், தள்ளுபடிகள் - முழு விவரம்
ஹூண்டாய் வழக்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் - முழு விவரம்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








