இந்திய வாகன சந்தைகளுக்கு டியாகோ கிராஸ்ஓவர் மாடலை உருவாக்கும் டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்திய வாகன சந்தைகளுக்கு என டியாகோ கிராஸ்ஓவர் மாடலை உருவாக்கி வருகின்றனர்.
டாடா டியாகோ ஹேட்ச்பேக், 2016 ஏப்ரலில் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டது. இது வாடிக்கையாளர்கள் இடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இது வரை, டியாகோ ஹேட்ச்பேக் மாடலுக்கு 20,000 புக்கிங் குவிந்துள்ளது. தற்போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டாடா டியாகோ பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு வேறு சில மாடல்களை உருவாக்க திட்டமிட்டு வருகிறது.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பிரத்யேகமான ஸ்டால் கொண்டிருந்தது. அப்போது, ஸீக்கா ஆக்டிவ் என்ற பெயரிலான ஸீக்கா கிராஸ்ஓவர் மாடல் பொதுமக்களுக்கு காட்சிபடுத்தபட்டது. இந்த ஸீக்கா, தற்போது வெளியாகிய டியாகோ போன்றே காட்சி அளிக்கிறது. ஸீக்கா என்ற பெயரில் ஒரு புதிய வைரஸ் கண்டுபிடிக்கபட்டு, அது உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தியதால், இந்த புதிய ஹேட்ச்பேக் காரின் பெயரை டாடா மோட்டர்ஸ் நிறுவனம் மாற்றிவிட்டது.
தற்போது, டியாகோ ஹேட்ச்பேக்கை அடிப்படையாக கொண்டு, டாடா மோட்டார்ஸ் ஒரு புதிய கிராஸ்ஓவர் மாடலை அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு கார் உற்பத்தி நிறுவனங்கள் இத்தகைய யோசனையை பின்பற்றுகின்றனர். ஃபோகஸ்வேகன் கிராஸ் போலோ, ஃபியட் அவென்ச்சுரா மற்றும் டொயோட்டா எட்டியாஸ் கிராஸ் ஆகிய மாடல்கள், அவற்றின் ஹேட்ச்பேக் இணை மாடல்களை கொண்டு தான் உருவாக்கப்பட்டது.
இஞ்ஜின் மற்றும் செயல்திறன் அடிப்படையில், டியாகோ கிராஸ்ஓவர் மாடல் ஆனது, டியாகோ மாடலை போன்றே இருக்கும். டியாகோ கிராஸ்ஓவர் மாடலின் வெளிப்புற தோற்றம், கரடு முரடானதாகவும், ஆஃப் ரோட் வாகனத்தை போல் அமைந்திருக்கும். இதன் ஆஃப்-ரோடிங் திறனை அதிகரிக்கும் நோக்கில், டியாகோ கிராஸ்ஓவர் மாடலின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








