டாடா மோட்டார்ஸ் வழங்கும் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் விரைவில் அறிமுகம்

By Ravichandran

இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், மனிதர்கள் கார் இயக்கும் முறையையே நீக்கிட திட்டங்கள் வகுத்து வருகிறது.

டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய உள்ள தொழில்நுட்பம் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்...

டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்...

ஓட்டுநருக்கு உதவும் சிஸ்டம் (டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) தொழில்நுட்பம் ஒன்றை இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முழு முனைப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

டெய்ம்ளர், டெஸ்லா மற்றும் கூகிள் (செல்ஃப் டிரிவன் கார்ஸ் - தானியங்கி கார்) உள்ளிட்ட ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் மீது கவனம் செலுத்தி வருகின்றன.

டிம் லெவர்டன் கருத்து;

டிம் லெவர்டன் கருத்து;

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து டிம் லெவர்டன் மிகுந்த பெருமிதத்தை வெளிபடுத்தினார்.

இது குறித்து டிம் லெவர்டன் கூறுகையில், "தானியங்கி தொழில்நுட்பங்கள் கொண்ட கார் தொழில்நுட்பங்கள் வேகமாக கூடி கொண்டே வருகிறது. வெகு விரைவில், தானியங்கி கார்களும் முழுமையாக நடைமுறைக்கு வரும்" என்றனார்.

மேலும், "ஆட்டோனமஸ் டிரைவிங் (Autonomous driving) எனப்படும் தானியங்கி கார் தொழில்நுட்பம் போன்றவற்றின் புரிதலை அதிகரித்து கொண்டே, இந்தியாவிற்கான ஏற்ற தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது" என டிம் லெவர்டன் கூறினார்.

எதிர்பார்க்க கூடிய தொழில்நுட்பங்கள்;

எதிர்பார்க்க கூடிய தொழில்நுட்பங்கள்;

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டத்தின் கீழ், தங்களின் தயாரிப்புகளில் விபத்துகளை தவிர்க்கும் சிஸ்டம் (கொல்லிஷன் அவாய்டன்ஸ் சிஸ்டம்) மற்றும் ஆட்டோமேட்டட் பார்க்கிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய உள்ளனர்.

சந்தையில் பங்கு;

சந்தையில் பங்கு;

டாடா மோட்டார்ஸ், இந்திய வாகன சந்தைகளில் தனக்கென இருந்த ஆதிக்கத்தை மெல்ல இழந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில், தாங்கள் இழந்து வரும் ஆதிக்கத்தை மீண்டும் மீட்டு எடுக்கும் நோக்கிலும், இத்தகைய நவீன் தொழில்நுட்பங்களை தங்களின் கார்களில் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளபடுகிறது.

ஜேஎல்ஆர் பங்கேற்பு;

ஜேஎல்ஆர் பங்கேற்பு;

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜேஎல்ஆர் நிறுவனமும், இந்த டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் போன்ற தொழில்நுட்பங்களை தங்கள் கார்களில் வழங்க டிசிஎஸ் நிறுவனத்துடன் மிக நெருக்கமாக பணியாற்றி வருகிறது.

ஜேஎல்ஆர் கார்களில் சேர்க்கபட உள்ள தொழில்நுட்பங்கள், பின்னர் இந்தியாவிற்குள் வழங்கபடும் கார்களிலும் அறிமுகம் செய்யபட உள்ளது.

தற்போதைய தொழில்நுட்பங்கள்;

தற்போதைய தொழில்நுட்பங்கள்;

தற்போதைய நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேப்மைஇந்தியா உடன் இணைந்து, இலவச இன்-கார் நேவிகேஷன் போன்ற தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறது.

இத்தகைய தொழில்நுட்பத்தை இந்தியாவில் மட்டுமல்லாமல், முதன் முதலாக உலகம் முழுவதும் கொண்டு வந்தது தங்கள் நிறுவனம் தான் டாடா மோட்டார்ஸ் கூறுகிறது.

லிடார்;

லிடார்;

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தாங்கள் கொண்டு வர உள்ள தொழில்நுட்பங்களுக்கு லிடார் அல்லது லைட் டிடெக்‌ஷன் அண்ட் ரேஞ்சிங் (LiDAR (Light Detection And Ranging)) என்ற முறையை பயன்படுத்த உள்ளனர். இந்த முறையில், ஆராய (டிடெக்‌ஷன்) ரேடார் தொழில்நுட்பம் பிரயோகிக்கபடுகிறது.

விலை உயர்ந்தது;

விலை உயர்ந்தது;

லிடார் அல்லது லைட் டிடெக்‌ஷன் அண்ட் ரேஞ்சிங் என அழைக்கபடும் இந்த தொழில்நுட்பம் தற்போதைக்கு மிகவும் விலை உயரந்ததாக உள்ளது. இதன் விலை, வரும் காலங்களில் வெகுவாக குறைந்து விடும் என கூறப்படுகிறது.

அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் - முக்கிய அம்சங்கள்;

அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் - முக்கிய அம்சங்கள்;

அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் முறையில் உள்ள சில முக்கியமான அம்சங்கள் ஹோண்டா நிறுவனம் வழங்கும் ஆரம்பத்தில் வழங்கபட்டுள்ள வீடியோவில் விளக்கபட்டுள்ளது.

(*) கிராஸ் டிராஃபிக் மானிட்டர்

(*) சிட்டி பிரேக் ஆக்டிவ் சிஸ்டம்

(*) டிராஃபிக் சைன் ரெகக்னிஷன் சிஸ்டம்

அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் - முக்கிய அம்சங்கள்;

அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் - முக்கிய அம்சங்கள்;

அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் முறையில் உள்ள சில முக்கியமான அம்சங்கள் ஹோண்டா நிறுவனம் வழங்கும் ஆரம்பத்தில் வழங்கபட்டுள்ள வீடியோவில் விளக்கபட்டுள்ளது.

(*) ஃபார்வர்ட் கொல்லிஷன் வார்னிங்

(*) லேன் டிபார்ச்சர் வார்னிங்

(*) பிளைண்ட் ஸ்பாட் இன்ஃபர்மேஷன்

(*) ஹை பீம் சப்போர்ட் சிஸ்டம்

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இரு சக்கர வாகனங்களுக்கான சைடு வியூ அசிஸ்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தும் பாஷ்!

காருக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் - ஸ்பெஷல் ரிப்போர்ட்

விண்வெளிக்கு ஒரு ஜாலி டூர்... அமேஸான் நிறுவனத்தின் அட்டகாச திட்டம்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Tuesday, April 26, 2016, 15:07 [IST]
English summary
India based Tata Motors is planning to eliminate Human Driving altogether. Tata Motors wants to be first to bring in technology of Driver Assistance System in its cars sold in India. Driver assistance system helps in collision avoidance and automated parking of cars. To know more about Driver assistance system from Tata Motors, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+