டாடா டியாகோ காரின் புக்கிங் துவங்கியது

By Ravichandran

டாடா மோட்டர்ஸ் நிறுவனம் வழங்கும் டியாகோ ஹேட்ச்பேக்கின் புக்கிங்குகள் துவங்கியுள்ளது.

டாடா நிறுவனம் மார்ச் 28-ஆம் தேதி தங்களின் அடுத்த தயாரிப்பான மார்ச் 28-ஆம் தேதி முதல் துவங்கியுள்ளது. இதற்கான புக்கிங்குகள் மார்ச் 10-ஆம் தேதி முதல் துவங்கியுள்ளது.

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் டீலர்ஷிப்கள் அல்லது ஆன்லைனில் இதற்கான புக்கிங்குகளை, வெரும் 10,000 ரூபாய் செலுத்தி செய்து கொள்ளலாம்.

தற்போது புக்கிங் செய்யும் வாடிக்காயளர்களை, ஊக்குவிக்கும் நடவடிக்கையாக ஒரு அதிர்ஷ்ட குலுக்கலில் பங்கு கொள்ள வாய்ப்புகளும் வழங்கபடுகிறது. இந்த குலுக்கலில் இருந்து 5 வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யபட உள்ளனர்.

இந்த அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களும், தங்களுக்கு பிடித்த யாரேனும் ஒருவருடன் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா வரை சென்று, கால்பந்து ஜாம்பவான் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடரான லியோனெல் மெஸ்ஸியை நேரில் சந்திக்க வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது.

டாடா டியாகோ ஹேட்ச்பேக், பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் என 2 இஞ்ஜின் தேர்வுகளிலும் வழங்கபடுகிறது. இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், 84 பிஹெச்பியையும், 114 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

tata-taigo-hatchbook-bookings-began-on-10th-march

டீசல் இஞ்ஜின் கொண்ட டாடா டியாகோ, 69 பிஹெச்பியையும், 140 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் 2 இஞ்ஜின்களுமே பல்வேறு வகையான டிரைவ் மோட்களுடன் வெளியாகிறது. இத்தகைய வசதி, இதன் செக்மண்ட்டில் தற்போது தான் முதல் முறையாக வழங்கப்படுகிறது.

இந்த டாடா டியாகோ ஹேட்ச்பேக் ஏராளமான நவீன அம்சங்களுடன் வெளியாகிறது. இது டச்ஸ்கிரீன் வசதி மற்றும் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் சிஸ்டம் போல் இயங்கும் மல்டிமீடியா சிஸ்டம் கொண்டுள்ளது.

மேலும், இது 8-ஸ்பீக்கர்கள் உடைய ஹர்மன் ஆடியோ சிஸ்டம் கொண்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 11, 2016, 18:12 [IST]
English summary
Tata Motors has began bookings for upcoming Tiago hatchback from March 10th, 2016. Tata Tiago is launched on March 28th. Customers interested to book Tiago can approach nearest Tata Dealerships or do the Bookings through online by just paying Rs. 10,000. Customers booking now can also participate in a Lucky Draw and meet Lionel Messi. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+