டாடா டியாகோ ஹேட்ச்பேக், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்
டாடா டியாகோ ஹேட்ச்பேக், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.
டாடா டியாகோ ஹேட்ச்பேக், ஏராளமான நவீன அம்சங்களை கொண்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

டாடா டியாகோ...
டாடா டியாகோ ஹேட்ச்பேக், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து அறிமுகம் செய்யும் சமீபத்திய தயாரிப்பு ஆகும்.
இது இந்திய வாகன சந்தைகளில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய வாகனங்களில் ஒன்றாக உள்ளது.

லியோனெல் மெஸ்ஸி...
கால்பந்து ஜாம்பவான் மற்றும் உலக அளவில் மிக பெரிய விளையாட்டு வீரரான லியோனெல் மெஸ்ஸி தான் இந்த டாடா டியாகோ ஹேட்ச்பேக்கிற்கு பிராண்ட் அம்பாஸிடராக திகழ்கிறார்.

இஞ்ஜின் தேர்வுகள்;
டாடா டியாகோ ஹேட்ச்பேக், புதிய பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 வகைகளிலான இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

பெட்ரோல் இஞ்ஜின்;
டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் பெட்ரோல் மாடல், 3 - சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த பெட்ரோல் இஞ்ஜின் 84 பிஹெச்பியையும், 114 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.
இது ஒரு லிட்டருக்கு, 23.84 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

டீசல் இஞ்ஜின்;
டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் டீசல் மாடல், 3 - சிலிண்டர்கள் கொண்ட 1.05 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த டீசல் இஞ்ஜின் 69 பிஹெச்பியையும், 140 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.
இது ஒரு லிட்டருக்கு, 27.28 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;
டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் பெட்ரோல் மாடல், டீசல் மாடல்களின் இஞ்ஜின்கள் இரண்டுமே 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.
இதன் மூலம் தான் முன் சக்கரங்களுக்கு பவர் மற்றும் டார்க் கடத்தபடுகிறது.

டிரைவிங் மோட்கள்;
இதன் செக்மண்ட்டில் முதல் முறையாக, டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 இஞ்ஜின்களுமே, 2 விதமான டிரைவிங் மோட்களில் கிடைக்கிறது.
டாடா டியாகோ ஹேட்ச்பேக், ஈகோ மற்றும் சிட்டி ஆகிய 2 டிரைவிங் மோட்களில் கிடைக்கிறது.

ஸ்டைலிங்;
டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் டிசைன், நன்கு கூர்மையான மற்றும் துள்ளல்கள் நிறைந்த தோற்றம் கொண்டுள்ளது. இது இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

முன் தோற்றம்;
டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் முன் பகுதியில், செதுக்கபட்ட ஹெட்லேம்ப்கள் வழங்கபட்டுள்ளது. இந்த ஹெட்லேம்ப்கள் கிரில்-லை பக்கவாட்டில் மூடியவாறு உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முத்திரை முன்பகுதியிலும், மத்தியிலும் பொருத்தபட்டுள்ளது.
டியாகோவின் பக்கவாட்டில் அமைந்துள்ள கேரக்டர் லைன்கள், இந்த ஹேட்ச்பேக்கிற்கு செதுக்கபட்ட தோற்றத்தை வழங்குகிறது.

பின் தோற்றம்;
டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் பின் பகுதியில் உள்ள ஆங்குலார் டெயில்லேம்ப்கள், இதன் இளமை ததும்பும் தோற்றத்திற்கு பொலிவை கூட்டுகிறது.

உட்புற தோற்றம்;
டாடா டியாகோ ஹேட்ச்பேக்கிற்கு, ட்யூவல் டோன் உடைய இண்டீரியர் வழங்கபட்டுள்ளது.
இதன் சைட் ஏசி வெண்ட்கள் (பக்கவாட்டில் உள்ள ஏசி வெண்ட்கள்), டாடா டியாகோ காரின் எக்ஸ்டீரியரில் உள்ள வண்ணங்களுக்கு ஏற்றவாறு கஸ்டமைஸ் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கபடுகிறது.

இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டம்;
டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் செண்டர் கன்சோலில் தான், இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டம் பொருத்தபட்டுள்ளது.
இது ஹர்மான் நிறுவனம் மூலம் வடிவமைக்கபட்ட 8-ஸ்பீக்கர் சிஸ்டத்துடன் இணைக்கபட்டுள்ளது.
மேலும், இந்த இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டத்தை ஸ்மார்ட்ஃபோனுடன் இணைக்கும் போது, இது டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதியை வழங்கும் கருவியாகவும் செயல்படுகிறது.

சிறப்பு அம்சங்கள் - 1;
(*) ட்யூவல் ப்ரண்ட் ஏர்பேக்குகள்
(*) இபிடி உடன் கூடிய ஏபிஎஸ்
(*) கார்னர் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்

சிறப்பு அம்சங்கள் - 2;
(*) ஜூக் ஆப் - இதன் செக்மண்ட்டில் முதல் முறையாக வழங்கபட்டுள்ளது. இதன் மூலம் 10 ஸ்மார்ட்ஃபோன்களை வரை, இதன் இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டத்துடன்
இணைத்து கொள்ள முடியும்.
(*) இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டத்தை ஸ்மார்ட்ஃபோன் மூலம் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதியும் கிடைக்கிறது.

கிடைக்கும் வண்ணங்கள்;
டாடா டியாகோ ஹேட்ச்பேக் மொத்தம் 6 வண்ணங்களில் கிடைகிறது.
டாடா டியாகோ ஹேட்ச்பேக், பியர்லெஸ்ஸண்ட் வைட், பிளாட்டினம் சில்வர், எஸ்ப்ரெஸ்ஸோ பிரௌன், பெர்ரி ரெட், சன்பர்ஸ்ட் ஆரஞ்ச் மற்றும் ஸ்ட்ரைக்கர் புளூ ஆகிய நிறங்களில் வழங்கபடுகிறது.

அறிமுகம்;
டாடா டியாகோ ஹேட்ச்பேக், இந்தியா முழுவதும் உள்ள டாடா ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

போட்டி;
டாடா டியாகோ ஹேட்ச்பேக், ஹூண்டாய் ஐ10 கிராண்ட், ஃபோர்டு ஃபீகோ மற்றும் மாருதி சுஸுகி செலரியோ ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை விவரங்கள் - 1;
டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் எந்த எந்த மாடல்கள், என்ன என்ன விலைகளில் அறிமுகம் செய்யபட்டுள்ளது என தெரிந்து கொள்ளலாம்.
வேரியண்ட் - எக்ஸ்பி
பெட்ரோல் மாடல் விலை - 3,20,000 ரூபாய்
டீசல் மாடல் விலை - 3,94,500 ரூபாய்
வேரியண்ட் - எக்ஸ்இ
பெட்ரோல் மாடல் விலை - 3,59,500 ரூபாய்
டீசல் மாடல் விலை - 4,29,500 ரூபாய்

விலை விவரங்கள் - 2;
வேரியண்ட் - எக்ஸ்எம்
பெட்ரோல் மாடல் விலை - 3,89,500 ரூபாய்
டீசல் மாடல் விலை - 4,69,500 ரூபாய்
வேரியண்ட் - எக்ஸ்டி
பெட்ரோல் மாடல் விலை - 4,19,500 ரூபாய்
டீசல் மாடல் விலை - 4,99,500 ரூபாய்
வேரியண்ட் - எக்ஸ்இசட்
பெட்ரோல் மாடல் விலை - 4,75,000 ரூபாய்
டீசல் மாடல் விலை - 5,54,000 ரூபாய்
குறிப்பு ; அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை விவரங்கள் ஆகும்.

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்

2016 டாடா டியாகோ கூடுதல் படங்கள்


Click it and Unblock the Notifications








