டாடா டியாகோ அறிமுகம் செய்யபட்ட முதல் மாதத்திலேயே அதிக விற்பனை பதிவு

By Ravichandran

டாடா டியாகோ, அறிமுகம் செய்யபட்ட முதல் மாதத்திலேயே பிற மாடல்களை விட அதிக அளவில் விற்பனை ஆகியது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில் அதற்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டுள்ளது. வழக்கம் போல், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான டாடா டியாகோ ஹேட்ச்பேக் காரும் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

விற்பனை குறியீடுகளில், டாடா டியாகோ ஹேட்ச்பேக், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிற தயாரிப்புகளை பின்னுக்கு தள்ளியது. டாடா டியாகோ ஹேட்ச்பேக், முதல் மாதத்திலேயே 1,00,000 என்குயரிகளை பெற்றது. அறிமுகம் செய்யபட்ட முதல் மாதத்திலேயே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 3,022 டாடா டியாகோ கார்களை விற்றுள்ளது.

tata-tiago-sells-3022-units-in-april-2016

ஒட்டுமொத்தமாக, ஏப்ரல் மாதத்தில், டாடா டியாகோ தான் சிறந்த அளவில் விற்பனை பதிவு செய்த மாடலாக உள்ளது.

2016 ஏப்ரலில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்ற கார்களின் விற்பனை அளவை பார்க்கலாம்;

டாடா டியாகோ - 3,022
டாடா இண்டிகோ விஸ்டா - 1,694
டாடா இண்டிகோ மான்ஸா - 1,581
டாடா ஸெஸ்ட் - 1,419
டாடா நானோ - 1,100
டாடா சுமோ - 814
டாடா சஃபாரி ஸ்டார்ம் - 539
டாடா போல்ட் - 290
டாடா அரியா - 0

tata-tiago-sells-3022-units-during-2016-april

அறிமுக மாடல் காராக இருந்தாலும் டாடா டியாகோ சவாலான விலையில் அறிமுகம் செய்யபட்டது. டாடா டியாகோவின் பெட்ரோல் வேரியண்ட்டின் அடிப்படை மாடல்
3.2 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும், இதன் டீசல் வேரியண்ட்டின் அடிப்படை மாடல் 3.94 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும் அறிமுகம் செய்யபட்டது. இந்த 2 வேரியண்ட்களின் விலைகளும் விரைவில் உயர்த்தபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

தற்போதைய நிலையில், டாடா டியாகோவின் பெட்ரோல் வேரியண்ட்டிற்கு 1.2 லிட்டர், 3-சிலிண்டர் உடைய ரெவெட்ரோன் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது. டாடா டியாகோவின் டீசல் வேரியண்ட்டிற்கு 1.05 லிட்டர், 3-சிலிண்டர் உடைய ரெவோடார்க் டீசல் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது.

தற்போதைய நிலையில், இரண்டு வேரியண்ட்களின் இஞ்ஜின்களுமே 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது. வருங்காலத்தில், இரண்டு வேரியண்ட்களுமே, ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வுடன் வழங்கபடலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, May 13, 2016, 8:21 [IST]
English summary
Tata Tiago Hatchback was introduced recently. In the first month of its launch itself, Tiago has surpassed sales figures of all Tata Car models. Tiago has witnessed around approximately 1,00,000 inquiries. In very first month, Tata managed to sell 3,022 Tiago's in India. Tiago became Tata Motors best-selling model in India. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+