குட் நியூஸ்... விரைவில் வருகிறது டாடா டியாகோ காரின் ஆட்டோ கியர் ஷிஃப்ட் மாடல்!
பட்ஜெட் கார் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட்ட புதிய டாடா டியாகோ கார் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் நல்ல தேர்வாக இருப்பதால், வாடிக்கையாளர்களும் இரு கரங்களை கொடுத்து டாடா டியாகோ காரை சீராட்டத் துவங்கியிருக்கின்றனர்.
இந்த நிலையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஓட்டுவதற்கு எளிதாகவும், பெண்கள் ஓட்டுவதற்கும் ஏதுவான ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதியுடன் கூடிய டாடா டியாகோ கார் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்கலை தொடர்ந்து காணலாம்.

ஏஎம்டி மாடல்
தற்போது பெட்ரோல், டீசல் மாடலில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாடா டியாகோ கார் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்களில் மட்டுமே கிடைக்கிறது. இந்த நிலையில்தான், ஏஎம்டி மாடலையும் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது.

முதலில்...
டாடா டியாகோ காரின் பெட்ரோல் மாடலில் மட்டுமே ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் வர இருக்கிறது. பின்னர், டீசல் மாடலிலும் கொண்டு வருவதற்கான திட்டமும் உள்ளது. ஆனால், டீசல் கார்களுக்கான மவுசு வெகுவாக சரிந்து வருவதால், அதுகுறித்து இப்போதைக்கு டாடா மோட்டார்ஸ் ஸ்திரமான முடிவை அறிவிக்காது.

மைலேஜ் அதிகம்
காலால் கிளட்ச்சை மிதிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்பதுடன், ஏஎம்டி மாடல்களில் மைலேஜும் அதிகமாக இருக்கும். விலையும் கையை கடிக்காது. எனவே, இந்த மாடல் அதிக ஆவலை ஏற்டுத்தியிருக்கிறது.

எதிர்பார்க்கப்படும் விலை
தற்போது டாடா டியாகோ காரின் பெட்ரோல் மாடல் ரூ.3.20 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதைவிட ரூ.30,000 கூடுதல் விலையில் ஏஎம்டி மாடலை எதிர்பார்க்கலாம்.

ஆட்டோ கியர் ஷிஃப்ட்
ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் முழுமையான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலைப் போன்றே இயக்க முடியும். பிரேக் பெடல் மற்றும் ஆக்சிலரேட்டர் பெடலை மட்டுமே இயக்கினால் போதுமானது. கிளட்ச் பெடல் இருக்காது என்பதால், பெண்களும் இந்த காரை தேர்வு செய்ய வழிபிறக்கும்.

தீபாவளிக்கு...
தீபாவளியை ஒட்டிய பண்டிகை காலத்தில் கார் விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் சரியாக இந்த ஏஎம்டி டியாகோ காரை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருக்கிறது. விரைவில் முன்பதிவு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்பதால், அதுகுறித்த தகவலை தெரிந்து கொள்ள டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications








