டாடா ஸீக்கா காரின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

By Ravichandran

வரும் 20ந் தேதி புதிய டாடா ஸீக்கா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பாக உற்பத்தி செய்யபடும் புதிய ஹேட்ச்பேக்கான டாடா ஸீக்கா பற்றிய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

வகைபடுத்தல்;

வகைபடுத்தல்;

டாடா ஸீக்கா தான், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பாக வெளியிடபட உள்ள சமீபத்திய தயாரிப்பு ஆகும்.

இது முற்றிலும் புதிய ப்ளாட்ஃபார்மில் வடிவமைக்கபட்டுள்ளது. டாடா ஸீக்கா, டாடா போல்ட் காருக்கு கீழாக வகைபடுத்த பட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டாடா ஸீக்கா 3 சிலிண்டர்கள் உடைய பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின்களை கொண்டுள்ளது.

1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், 84 பிஹெச்பி-யை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இதன் 1.05 லிட்டர் டீசல் இஞ்ஜின் 69 பிஹெச்பி-யை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்த 2 வகையான இஞ்ஜின்களும், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. தேவைகள் எழுந்தால், இந்த காரை ஏஎம்டி வசதியுடன் மேம்படுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாராக உள்ளது.

பொழுதுபோக்கு அம்சங்கள்;

பொழுதுபோக்கு அம்சங்கள்;

டாடா போல்ட் காரில் உள்ளது போன்றே, டாடா ஸீக்கா காரும் அதே ஹர்மான் மியூஸிக் சிஸ்டம் கொண்டுள்ளது. ஆனால், இதில் உள்ள புதிய

மேம்பாடுகள், மியூஸிக் சிஸ்டத்தின் அனுபவத்தை மேலும் திறன்மிக்கதாக மாற்றியுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

புளுடூத் உடைய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டத்தை தவிர, டாடா ஸீக்கா காரில் 22 ஸ்டோரேஜ் ஸ்பேசஸ் (இடங்கள்) உள்ளது.

மேலும், இதில் நேவிகேஷன் சிஸ்டம், பார்க்கிங் சென்ஸார்கள் உள்ளிட்ட ஏராளமான அம்சங்களை கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை, டாடா ஸீக்கா ட்யூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ஈபிடி எனப்படும்

எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் மற்றும் கார்னர் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் உள்ளது.

மேலும், இதன் வலுவூட்டப்பட்ட கட்டமைப்பு, தற்போதைய மற்றும் வருங்காலத்திய கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு தரங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது.

போட்டி கார்கள்;

போட்டி கார்கள்;

டாடா ஸீக்கா அறிமுகம் செய்யபடும் போது, ஹூண்டாய் ஐ10 கிராண்ட் மற்றும் அது போன்ற மாடல்களுடன் போட்டி போட வேண்டிய நிலை எழலாம்.

எதிர்பார்க்கபடும் விலை;

எதிர்பார்க்கபடும் விலை;

டாடா ஸீக்கா ஹேட்ச்பேக் காரானது, சுமார் 4 லட்சம் ரூபாய் என்ற விலையில் விற்கபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய டாடா ஸீக்கா காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டாடா ஸீக்கா கார் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

டாடா ஸீக்கா காரின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியானது

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
Tata Zica launch date is confirmed. Tata Zica is the latest hatchback from Tata Motors, which is to be launched in India on 20 January, 2016. The Tata Zica is built on an entirely new platform. The Zica is placed below the Tata Bolt. The Tata Zica is expected to be priced in and around Rs. 4 lakh.
Story first published: Tuesday, January 5, 2016, 19:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X