டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் செடான், அறிமுகமான 3 நாட்களில் 2,76,000 புக்கிங் குவிப்பு
டெஸ்லா நிறுவனம், அதன் சமீபத்திய அறிமுகமான மாடல் 3 செடான் காருக்கு 3 நாட்களில் 2,76,000 புக்கிங் குவித்துள்ளது.
டெஸ்லா நிறுவனம் வழங்கும் டெஸ்லா மாடல் 3 செடான், ஏப்ரல் 1, 2016-ல் தான் அறிமுகம் செய்யபட்டது. அறிமுகம் செய்யபட்ட சில நாட்களிலேயே இந்த மாடல் 3 எலக்ட்ரிக் செடான் 2,76,000+ புக்கிங் குவித்து சாதனை படைத்துள்ளது.

இந்த தகவலை, டெஸ்லா நிறுவனத்தின் சேர்மேன் மற்றும் சிஇஓ எலான் மஸ்க், ட்விட்டர் மூலம் வெளியிட்ட செய்தியில் உறுதி செய்தார். சனிக்கிழமை (ஏப்ரல் 2) நிறைவடைவதற்குள் 2,76,000 குவிந்துவிட்டதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.
மாடல் 3 எலக்ட்ரிக் செடான் தான், டெஸ்லா நிறுவனம் வழங்கும் மாடல்களிலேயே மிகவும் மிதமான விலை கொண்ட மாடல் ஆகும். இதன் அடிப்படை வேரியண்ட், 35,000 அமெரிக்க டாலர்கள் என்ற விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது. இதன் பேட்டரி பேக்-கை ஒரு முறை சார்ஜ் செய்தால், சுமார் 346 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.
டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் செடானின் டெலிவரி, 2017-ஆம் ஆண்டின் முடிவில் தான் துவங்க உள்ளது. இந்த நிலையிலும், டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் செடான், இத்தகைய அபாரமான அளவில் புக்கிங் குவித்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
இதர தொடர்புடைய செய்திகள்;
டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 செடான் அறிமுகம் செய்யபட்டுள்ளது
பிஎம்டபிள்யூ, ஆடி கார்களை ஓவர்டேக் செய்த டெஸ்லா மாடல் எஸ் கார்!
டெஸ்லா தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








