தள்ளுபடியுன் கார் வாங்க வாங்க இதுவே சரியான தருணம்!

Written By:

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் கார் விற்பனை மந்தமடைந்துவிடும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் கார் வாங்கும்போது அது காரின் தயாரிப்பு விஷயத்தில் ஓர் ஆண்டு வித்தியாசத்தை காட்டுவதால் மதிப்பு குறைந்துபோவதே காரணமாக இருக்கிறது.

குறிப்பாக, டிசம்பர் மாதத்தில் கார் வாங்குவதை பலரும் தவிர்க்க இதுதான் காரணமாக இருக்கும். அதேநேரத்தில், கார் விற்பனையை சராசரி நிலைக்கு கொண்டு வருவதற்காக எல்லா கார் நிறுவனங்களும் சிறப்பு தள்ளுபடிகளையும், சலுகைகளையும் வழங்குகின்றன. எனவே, டிசம்பர் மாதத்தில் அதிகபட்ச சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கின்றன. தள்ளுபடி சலுகைகளுக்கு ஆசைப்பட்டு தடாலடியாக கார் வாங்க முடிவு செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கே காணலாம்.

 புதிய மாடல்

புதிய மாடல்

நீங்கள் தேர்வு செய்திருக்கும் கார் மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடல் அல்லது புதிய தலைமுறை மாடல் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

தெளிவு

தெளிவு

புதிய மாடலில் கூடுதலாக இடம்பெறும் அம்சங்கள், வடிவமைப்பு மாற்றங்கள் குறித்தும் போதிய தகவல்களை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப முடிவு செய்ய வேண்டும். முற்றிலும் புதிய டிசைன், அதிக வசதிகள், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் என்று அதிக வேறுபாடுகளுடன் வந்தால் புதிய மாடலுக்காக காத்திருப்பது நல்லது.

விளம்பரங்கள்

விளம்பரங்கள்

செய்தித் தாள்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், இணையதளங்களில் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்படும் சிறப்புச் சலுகைகள் விபரங்களை கவனித்து வரவும். அதன் அடிப்படையில் சிறப்பான சேமிப்பு தரும் நிறுவனங்கள் அல்லது டீலர்களுக்கு சென்று உங்கள் கார் வாங்கும் திட்டத்தை துவங்கலாம்.

தள்ளுபடி

தள்ளுபடி

காருக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை தெளிவாக கேட்டுத் தெரிந்து கொள்ளவும். டீலரில் ஏதேனும் கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகிறதா என்பதையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். சிறப்புச் சலுகைகள் டீலருக்கு டீலர் மாறுபடும். எனவே, குறிப்பிட்ட கார் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் வழங்கப்படும் சலுகைகளை ஒப்பிட்டு பார்த்துக் கொள்வதும் சிறந்தது.

பேரம்

பேரம்

டீலரில் காருக்கான சேமிப்புச் சலுகைகளை தெரிந்து கொண்ட பின்னர், கூடுதல் சலுகைகளுக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்வதோடு, பிற டீலர்களில் வழங்கப்படும் தள்ளுபடி குறித்தும் சொல்லுவதும் அவசியம். இதனால், விலையில் தள்ளுபடி கிடைக்க வாய்ப்புண்டு. மேலும், மாதக் கடைசியில் விற்பனை இலக்கை அடைவதற்காக கூடுதல் தள்ளுபடிகள் வழங்கப்படும்.

 கடன் திட்டம்

கடன் திட்டம்

டீலர்கள் மட்டுமில்லாமல், வங்கிகளும் சிறப்பு கடனுதவி திட்டங்களை அறிவித்து வருகின்றன. குறைவான வட்டி விகிதம், புராசசிங் கட்டணம் இல்லை போன்ற பல சலுகைகளை வழங்குவதையும் காண முடியும். உங்களது சம்பளக் கணக்கு உள்ள வங்கியை நாடினால் உடனடியாக கடன் பெறவும், சிறப்புச் சலுகைகளை பெறவும் வாய்ப்புள்ளது.

 எக்ஸ்சேஞ்ச் போனஸ்

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

பழைய காரை மாற்றி புதிய காரை வாங்கும்போது அதிகபட்ச எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறுவதற்கு முயற்சி செய்யவும். உங்களுக்கு திருப்தி இல்லையெனில், எக்ஸ்சேஞ்ச் செய்வதை தவிர்த்து, நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாக நல்ல விலைக்கு விற்பனை செய்யும் வாய்ப்புள்ளது.

 சமாதானம்

சமாதானம்

விற்பனை பிரதிநிதி சொல்லும் காரணங்களை கேட்டு சமாதானம் ஆகி அவசரப்பட்டு முன்பதிவு செய்ய வேண்டாம். சலுகைகள் உங்களுக்கு திருப்தி தரவில்லை என்றால் பரவாயில்லை என்று கூறிவிட்டு, ஷோரூமிலிருந்து வெளியேறிவிடுங்கள். கூடுதல் சலுகை தர வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு அவரே அடுத்த ஓரிரு நாட்களில் போன் செய்ய வாய்ப்பு உண்டு. இல்லையென்றால் வேறு ஒரு டீலர் மூலமாக டீலை முடிக்கலாம்.

விலை

விலை

பொதுவாக மார்க்கெட்டில் நீண்டகாலமாக நம்பகதன்மையுடன் செயல்படும் மெயின் டீலருக்கு செல்லவும். வீட்டிலிருந்து சற்று தூரம் அதிகமிருந்தாலும் மெயின் டீலருக்கு செல்வது சிறந்தது. சப்-டீலர்களில் நிச்சயம் விலை அதிகமாக இருக்கும்.

English summary
This is Best Time To Buy A New Car With Huge Discounts.
Story first published: Monday, December 12, 2016, 15:20 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark