மே மாதத்தில் டாப் 10 சிறந்த கார் தள்ளுபடிகளின் பட்டியல் - முழு விவரங்கள்
நீங்கள் புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா?
பெரும்பான்மையான கார் உற்பத்தி நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகளின் விற்பனை அளவை அதிகரிப்பதற்கும், தங்களின் பிராண்டினை பிரபலபடுத்துவதற்கும் ஏராளமான சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்குவது வழக்கம்.
இந்த மே மாதத்தில் ஏராளமான கார் நிறுவனங்கள் பல்வேறு வகையிலான சலுகைகளை வழங்கி வருகின்றனர். இதில் டாப் 10 சிறந்த தள்ளுபடிகள், சலுகைகள் குறித்த தகவல்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

(10) ஹூண்டாய் இயான்;
தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் நிறுவனம், தங்களின் சிறிய கார் மாடலான இயான் மீது சிறிய ஆதாயங்களை வழங்குகின்றனர்.
வாடிக்கையாளர்கள் ஹூண்டாய் இயான் மீது 10,000 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறலாம். மேலும், ஹூண்டாய் ஷோரூம்கள், ஹூண்டாய் இயான் மீது 20,000 ரூபாய் வரையிலான கேஷ் டிஸ்கவுண்ட் கொடுக்கின்றனர்.

9) டாடா நானோ;
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் ஜென்எக்ஸ் நானோ கார் மீது ஏராளமான சலுகைகள் வழங்குகிறது. மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடைய ஜென்எக்ஸ் நானோ மீது 15,000 ரூபாய் வரையிலான தள்ளுபடியும், 20,000 ரூபாய் வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸும் வழங்கபடுகிறது.
மேலும், சிஎன்ஜி தேர்விலான ஜென்எக்ஸ் நானோ கார் மீது இந்த மே மாதத்தில் மட்டும் அபாரமான 50,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது.

8) ஹூண்டாய் எலைட் ஐ20;
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் எலைட் ஐ20 மாடலை, அதிகமான போட்டி கொண்ட பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் வழங்குகின்றனர். இந்த ஹேட்ச்பேக் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 தேர்வுகளிலும் கிடைக்கிறது.
ஹூண்டாய் எலைட் ஐ20 பிரிமியம் ஹேட்ச்பேக்கின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் ஆகிய இரண்டின் மீதும் 20,000 ரூபாய் தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

7) நிஸான் சன்னி;
நிஸான் நிறுவனம், சன்னி மாடல் மீது 65,000 ரூபாய் வரையிலான தள்ளுபடி வழங்குகின்றனர். இந்த சலுகைகள், குறிப்பிட்ட ஷோரூம்களில், குறிப்பிட்ட வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும்.
இந்த மே மாத தள்ளுபடிகளில், நிஸான் சன்னியின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களை இரண்டையுமே வாங்கி கொள்ளலாம்.

6) டொயோட்டா ஃபார்ச்சூனர்
கடைசியாக, இந்திய வாகன சந்தைகளில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடல் சில போட்டிகளை எதிர்கொள்கிறது. ஃபோர்டு என்டெவர், மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் மற்றும் செவர்லே ட்ரெயில்பிளேசர் ஆகிய கார்கள், டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலுக்கு போட்டியாக நல்ல சவாலாக விளங்குகின்றனர்.
டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் நுழைவு நிலை, நடுத்தர நிலையிலான வேரியண்ட்கள் மீது 50,000 ரூபாய் வரையிலான தள்ளுபடிகள் கிடைக்கும்.
டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் டாப்-எண்ட் வேரியண்ட் மீது 75,000 ரூபாய் சலுகை கிடைக்கிறது.

5) ஸ்கோடா ரேபிட்;
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் வழங்கும் ரேபிட் செடான் கார், பொலிவு கூட்டபட்டு விரைவில் வெளியாக உள்ளது. ஸ்கோடா ஆட்டோ நிறுவனம், தற்போது இருப்பில் உள்ள ஸ்டாக்குகளை கிளியர் செய்ய முயற்சிக்கிறது.
இதனால், ஸ்கோடா ஷோரூம்கள், ஸ்கோடா ரேபிட் செடான் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் ஆகிய இரண்டின் மீதும் 1,00,000 ரூபாய் வரையிலான கேஷ் டிஸ்கவுண்ட் வழங்குகின்றனர்.

4) மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ;
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், தங்களின் எம்எல்-கிளாஸ் சொகுசு எஸ்யூவியை ஜிஎல்இ என ரீ-பேட்ஜிங் செய்துள்ளனர்.
ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், ஜிஎல்இ 350டி மீது 2 லட்சம் ரூபாய் மதிப்புமிக்க சலுகைகளை வழங்குகின்றது.

3) மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ்;
ஏ-கிளாஸ் மாடல் தான் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில் வழங்கும் நுழைவு நிலை மாடல் ஆகும்.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம், 2016-ஆம் ஆண்டிற்காக இந்த ஏ-கிளாஸ் மாடலுக்கு சில மேம்பாடுகளை வழங்கியது.
மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் ஹேட்ச்பேக் மீது 2.5 லட்சம் ரூபாய் வரையிலான தள்ளுபடி வழங்கபடுகிறது.

2) ஆடி க்யூ5;
ஆடி க்யூ5 சொகுசு கார், பிஎம்டபுள்யூ எக்ஸ்3 மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆகிய மாடல்களுடன் கடும் போட்டியை எதிர் கொள்கிறது.
ஆடி க்யூ5 சொகுசு காரின், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய 2 வேரியண்ட்களின் மீதும் 4,00,000 ரூபாய் வரையிலான தள்ளுபடி கிடைக்கும்.

1) பிஎம்டபுள்யூ எக்ஸ்3;
பிஎம்டபுள்யூ இந்தியா நிறுவனம் வழங்கும் எக்ஸ்3 சொகுசு கார் மீது அதிகப்படியாக 4,00,000 ரூபாய் வரையிலான தள்ளுபடி கிடைக்கும்.
பிஎம்டபுள்யூ எக்ஸ்3 மாடலானது, பிஎம்டபுள்யூ எக்ஸ்1 மற்றும் பிஎம்டபுள்யூ எக்ஸ்5 லக்சுரி எஸ்யூவிக்கும் இடையிலான மாடலாக வழங்கபடுகிறது.
பிஎம்டபுள்யூ எக்ஸ்3 மாடல் மீதான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் தேர்ந்தெடுக்கபட்ட டீலர்ஷிப்களிடம் மட்டுமே கிடைக்கும்.

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








