கடந்த நிதி ஆண்டில் விற்பனையில் கலக்கிய டாப் 10 கார் மாடல்கள்!

By Saravana

2015ம் ஆண்டு ஏப்ரல் முதல், கடந்த மார்ச் மாதம் வரையிலான கடந்த நிதி ஆண்டில் கார் விற்பனை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த 2014- 15ம் நிதி ஆண்டில் விற்பனையில் டாப் 10 இடத்தை பெற்ற அதே மாடல்கள்தான் கடந்த 2015- 16 நிதி ஆண்டிலும் டாப் 10 இடங்களை பெற்றிருக்கின்றன.

ஆனால், பட்டியலில் விற்பனையை பொறுத்து, அவற்றின் இடங்கள் மாறியிருக்கின்றன. ஆனால், நடப்பு நிதி ஆண்டில் இந்த பட்டியல் நிச்சயம் பெரிய மாறுபாடு இருக்கும் என்பதையும், அதில் எந்தெந்த மாடல்கள் இடம்பிடிக்க வாய்ப்புள்ளன என்பதையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

10. ஹோண்டா அமேஸ்

10. ஹோண்டா அமேஸ்

கடந்த 2014- 15 நிதி ஆண்டை போலேவே, கடந்த நிதி ஆண்டிலும் ஹோண்டா அமேஸ் கார் தொடர்ந்து 10வது இடத்தை தக்க வைத்தது. கடந்த 2014- 15 நிதி ஆண்டில் 66,703 அமேஸ் கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த நிதி ஆண்டில் 54,594 அமேஸ் கார்கள் மட்டுமே விற்பனையாகியிருக்கிறது. அதாவது, 18 சதவீதம் விற்பனை குறைந்துவிட்டது. ஃபோர்டு டிசையர், மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் வருகை, ஹோண்டா அமேஸ் காரின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக, தற்போது புதுப்பொலிவுடன் அமேஸ் கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், ஃபோக்ஸ்வேகன் அமியோ உள்ளிட்ட கார்களின் வரவு காரணமாகவும், அமேஸ் விற்பனை குறைந்து வருவதை பார்க்கும்போது நடப்பு நிதி ஆண்டில் டாப் 10 பட்டியலில் தொடர்ந்து நீடிக்குமா என்பது சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சவால்களை முறியடித்து, டாப் 10 பட்டியலில் அமேஸ் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்ப்போம்.

09. ஹூண்டாய் இயான்

09. ஹூண்டாய் இயான்

கடந்த 2014-15ம் ஆண்டில் 78,334 ஹூண்டாய் இயான் கார்கள் விற்பனையாகி, டாப் 10 பட்டியலில் 6வது இடத்தில் இருந்தது. ஆனால், கடந்த நிதி ஆண்டில் 68,199 இயான் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதுடன், விற்பனையும் 13 சதவீதம் குறைந்துவிட்டது. ரெனோ க்விட் காரின் வரவு ஹூண்டாய் இயான் காரின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது தெரிய வருகிறது. எனவே, நடப்பு ஆண்டு பட்டியலில் இயான் காரின் விற்பனையில் ஹூண்டாய் அதிக கவனம் செலுத்துவதுடன், புதிய மாடலை களமிறக்கவும் தயாராகிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

08. ஹோண்டா சிட்டி

08. ஹோண்டா சிட்டி

கடந்த 2014ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா சிட்டி கார் தொடர்ந்து விற்பனையில் அசத்தி வருகிறது. கடந்த நிதி ஆண்டில் 77,548 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. கடந்த 2014- 15 நிதி ஆண்டில் இருந்த அதே 8ம் இடத்தை தக்க வைத்திருப்பதுடன், விற்பனையும் குறையாமல் 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயத்தில், மாருதி சியாஸ் காரின் ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட டீசல் மாடல், ஹோண்டா சிட்டி காருக்கு கடும் நெருக்கடியை தந்து வருகிறது.

07. மாருதி செலிரியோ

07. மாருதி செலிரியோ

கடந்த நிதி ஆண்டில் 7வது இடத்தை மாருதி செலிரியோ கார் பெற்றிருக்கிறது. கடந்த 2014 - 15ம் நிதி ஆண்டில் 68,143 செலிரியோ கார்கள் விற்பனையாகி 9வது இடத்தில் இருந்தது. ஆனால், கடந்த நிதி ஆண்டில் 87,428 செலிரியோ கார்கள் விற்பனையாகி 7வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. டீசல் மாடலும், ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலும் செலிரியோ விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், செலிரியோ விற்பனை கடந்த நிதி ஆண்டில் 28 சதவீதம் உயர்ந்திருப்பது மாருதிக்கு உற்சாகமான செய்தி.

06. ஹூண்டாய் எலைட் ஐ20

06. ஹூண்டாய் எலைட் ஐ20

டிசைனிலும், வசதிகளிலும் வாடிக்கையாளர்களை வளைத்து வரும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார் 6வது இடத்தில் உள்ளது. கடந்த 2014-15 நிதி ஆண்டில் 7வது இடத்தில் இருந்து தற்போது 6வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறுத. கடந்த நிதி ஆண்டில் 1,26,028 எலைட் ஐ20 கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. விற்பனை 62 சதவீதம் கூடியிருக்கிறது. மாருதி பலேனோ, புதிய ஹோண்டா ஜாஸ் கார்கள் வந்தாலும், எலைட் ஐ20 மார்க்கெட்டை உடைக்க முடியவில்லை.

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

கடந்த நிதி ஆண்டிலும் தொடர்ந்து 5வது இடத்தை பிடித்திருக்கிறது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார். கடந்த 2014- 15 நிதி ஆண்டில் 99,088 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த நிதி ஆண்டில் விற்பனை 27 சதவீதம் அதிகரித்துள்ளது. டிசைன், வசதிகளில் மன நிறைவை தருவதுடன், குறைவான விலை கொண்ட பிரிமியம் ஹேட்ச்பேக் காராக விளங்குகிறது.

 04. மாருதி வேகன் ஆர்

04. மாருதி வேகன் ஆர்

கடந்த நிதி ஆண்டில் 4வது இடத்தை பிடித்திருக்கிறது மாருதி வேகன் ஆர் கார். கடந்த நிதி ஆண்டில் 1,69,555 மாருதி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. இடவசதி, விலை, குறைவான பராமரிப்பு, மாருதியின் சிறந்த சேவை முதலியவை இந்த காரின் விற்பனையை தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறது.

03. மாருதி ஸ்விஃப்ட்

03. மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட் கார் 3வது இடத்தை பிடித்துள்ளது. அதேநேரத்தில், கடந்த நிதி ஆண்டில் மாருதி ஸ்விஃப்ட் விற்பனை 3 சதவீதம் குறைந்துவிட்டது. இதற்கு காரணம், மாருதி பலேனோ வருகையை என கூறலாம். கடந்த நிதி ஆண்டில் 1,95,043 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. புதிய ஸ்விஃப்ட் மாடலை களமிறக்க நேரம் வந்துவிட்டது என்பதே இந்த லேசான சரிவு உணர்த்துகிறது. தற்போது புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் சோதனை ஓட்டத்தில் இருப்பதும் நினைவுகூறத்தக்கது.

 02. மாருதி டிசையர்

02. மாருதி டிசையர்

கடந்த ஆண்டு கூடுதல் வசதிகளுடன், ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதற்கு கைமேல் பலன் கிட்டியிருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 1,99,100 டிசையர் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த 2014- 15 நிதி ஆண்டைவிட, கடந்த நிதி ஆண்டில் விற்பனை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. குறைவான பராமரிப்பு செலவீனமும், மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க்குமே இந்த காரின் விற்பனையில் முக்கிய பங்காற்றும் விஷயங்கள்.

01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் மாடலாக மாருதி ஆல்ட்டோ விளங்குகிறது. கடந்த நிதி ஆண்டில் 2,63,422 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாயிருக்கின்றன. கடந்த நிதி ஆண்டில் விற்பனை 0.4 சதவீதம் குறைந்துவிட்டது. ரெனோ க்விட் வருகை புரிந்தாலும், தொடர்ந்து விற்பனையில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது மாருதி ஆல்ட்டோ.

ஹூண்டாய் க்ரெட்டா

ஹூண்டாய் க்ரெட்டா

நடப்பு நிதி ஆண்டில் டாப் 10 பட்டியலில் இடம்பெறக்கூடிய வாய்ப்பு ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு இருக்கிறது. டிசைன், வசதிகள், விலை, எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் என அனைத்திலும் கொடுக்கும் பணத்திற்கு சிறந்த தயாரிப்பாக இருக்கிறது. தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றிருப்பதும், உற்பத்தி அதிகரிக்கப்படுவதும் நடப்பு நிதி ஆண்டின் டாப் 10 பட்டியலில் எதிர்பார்க்கக்கூடிய மாடலாக இருக்கிறது.

மாருதி பலேனோ

மாருதி பலேனோ

பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மாருதி பலேனோ சிறப்பான விற்பனையை பதிவு செய்திருக்கிறது. இதுவும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றிருப்பதும், மாதா மாதம் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருவதும், இந்த கார் டாப் 10 பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.

ரெனோ க்விட்

ரெனோ க்விட்

அட்டகாசமான ஸ்டைல், அருமையான வசதிகள், குட்டிக் கார் போல் அல்லாமல், கவுரவத்தை தரும் வடிவம், மிக குறைவான விலை என அசத்தலான தயாரிப்பாக வந்திருக்கிறது ரெனோ க்விட் கார். கடந்த மாதம் விற்பனையிலும் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்வதே நாம் அறிந்ததே. இந்த நிலையில், இந்த காரும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றிருப்பதால், நடப்பு நிதி ஆண்டில் டாப் 10 பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, April 11, 2016, 1:10 [IST]
English summary
Top 10 Best Selling Cars In India In FY 2015-16.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+