இந்தியாவில் கண்ணாடி கூரை [சன்ரூஃப்] வசதியுடன் கிடைக்கும் டாப்- 10 கார்கள்!

Written By:

காரின் மேற்கூரையில் திறந்து மூடும் கண்ணாடியுடன் கிடைக்கும் கார்களுக்கு தனி மதிப்பு இருப்பதை கண்டிருப்பீர்கள். ஆனால், இந்தியாவின் சீதோஷ்ண நிலை காரணமாக, கண்ணாடி கூரை கொண்ட கார்களுக்கு அதிக வரவேற்பு இருந்ததில்லை. பல சொகுசு கார்களில் இது நிரந்தரமாக இடம்பெற்றாலும் சாதாரண வகை கார்களில் இது இடம்பெறுவதில்லை. இந்த கண்ணாடி கூரை ஆடம்பரமாக ஒருபுறம், சில கூடுதல் நன்மைகளும் இருக்கின்றன.

காரின் தோற்றத்திற்கு மதிப்பு கூட்டும் அம்சமாக கண்ணாடி கூரை இடம்பெறுகிறது. காருக்குள் ஏசி இல்லாமல், இயற்கையான காற்றை பெறுவதற்கும், அதிக வெளிச்சத்தை பெறுவதற்கும் இந்த கண்ணாடி கூரை உதவுகிறது. மிதமான வேகத்தில் செல்லும்போது, இதமான வெளிக்காற்று கிடைப்பதுடன், ஜன்னல்களைவிட இது சப்தம் சற்றே குறைவாக இருக்கும்.

இரவு வேளைகளில் திறந்து வைத்துக் கொண்டு நட்சத்திரங்களையும், நிலவையும் ரசித்துச் செல்வதற்கும், குழந்தைகளுக்கு குதூகல பயணத்தை வழங்குவதற்கும் இந்த கண்ணாடி கூரை சிறப்பானதாக இருக்கிறது. சரி, சன்ரூஃப் எனப்படும் இந்த கண்ணாடி கூரையுடன் கிடைக்கும் கார்களை தொகுத்திருக்கிறோம். பட்ஜெட்டிற்கு தகுந்தாற்போல் இந்த பட்டியலை ஒரு ரவுண்டு பார்த்துவிடலாம். இந்த பட்ஜெட் என்னிடம் இல்லையே, ஆனால், சன்ரூஃப் வேண்டும் என்பவர்கள் கடைசி ஸ்லைடில்  உபாயம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சன்ரூஃப் வகைகள்

சன்ரூஃப் வகைகள்

சன்ரூஃப் இரண்டு வகைகளில் அழைக்கப்படுகிறது. ஓட்டுனர் மற்றும் சக பயணிக்கு மேலே சிறிய அளவிலான எலக்ட்ரிக் சன்ரூஃப் ஒரு மாடலாகவும், காரின் மேற்கூரையின் 70 சதவீத பகுதி கண்ணாடி கூரையாக கொண்ட பனரோமிக் சன்ரூஃப் என இரண்டு விதமாக கிடைக்கிறது. தற்போது எந்தெந்த கார்கள் சன்ரூஃப் கொண்டதாக கிடைக்கிறது என்பதை தொடர்ந்து காணலாம்.

01. ஹோண்டா சிட்டி

01. ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டி காரில் எலக்ட்ரிக் சன்ரூஃப் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஹோண்டா சிட்டி காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில்ன் VX வேரியண்ட்டில் இந்த சன்ரூஃப் வசதி வழங்கப்படுகிறது. இந்த மாடல் ரூ.12.59 லட்சம் சென்னை ஆன்ரோடு விலையிலிருந்து கிடைக்கிறது.

02. செலர்லே க்ரூஸ்

02. செலர்லே க்ரூஸ்

பெர்ஃபார்மென்ஸுக்கு பெயர் போன செவர்லே க்ரூஸ் செடான் காரிலும் கண்ணாடி கூரை வசதியுடன் கிடைக்கிறது. செவர்லே க்ரூஸ் காரின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல்களின் டாப் வேரியண்ட்டில் சன்ரூஃப் வசதி வழங்கப்படுகிறது. இந்த சன்ரூஃப் ஆன்டி பின்ச் எனப்படும், தடை இருந்தால் தானாக விலக்கிக் கொள்ளும் பாதுகாப்பு அம்சத்துடன் கிடைக்கிறது. குழந்தைகள் அல்லது கைவிரல்கள் மாட்டினால், தானாக விலகிவிடும். பாதுகாப்பு வலை கொடுக்கப்பட்டிருப்பதுடன், எலக்ட்ரிக் சிஸ்டத்தின் மூலம் திறந்து மூட முடியும். ரூ.16.49 சென்னை ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

03. ஸ்கோடா ஆக்டேவியா

03. ஸ்கோடா ஆக்டேவியா

ஸ்கோடா ஆக்டேவியா காரும் சன்ரூஃப் வசதியுடன் கிடைக்கிறது. ஆக்டேவியாவின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் ஸ்டைல் ப்ளஸ் டாப் வேரியண்ட்டில் டின்ட் செய்யப்பட்ட பனரோமிக் சன்ரூஃப் கொண்டதாக கிடைக்கிறது. இதுவும் எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் வருகிறது. ரூ.19.41 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

04. செவர்லே கேப்டிவா

04. செவர்லே கேப்டிவா

செவர்லே கேப்டிவா எஸ்யூவியும் சன்ரூஃப் வசதிகொண்டதாக கிடைக்கிறது. கேப்டிவா எஸ்யூவியின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல்களில் எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் சன்ரூஃப் கிடைக்கிறது. செவர்லே க்ரூஸ் கார் போன்றே, ஆன்டி பின்ச் வசதியும், பாதுகாப்பு வலையுடன் கிடைக்கிறது. ரூ.29.92 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

05. ஹோண்டா சிஆர்வி

05. ஹோண்டா சிஆர்வி

பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் பெயர் பெற்ற ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியிலும் சன்ரூஃப் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் 2.4 லிட்டர் 4 வீல் டிரைவ் மாடலில் சன்ரூஃப் வசதி வழங்கப்படுகிறது. இது எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய சன்ரூஃப் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.30.74 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

06. மஹிந்திரா எக்ஸ்யூவி 500

06. மஹிந்திரா எக்ஸ்யூவி 500

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் W10 டாப் வேரியண்ட் சன்ரூஃப் வசதியுடன் வருகிறது. ஆன்ட்டி பின்ச் வசதியுடன் கூடிய எலக்ட்ரிக் சன்ரூஃப் வசதி கொடுக்கப்படுகிறது. இந்த மாடல் ரூ.13.79 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

07. ஃபோர்டு எண்டெவர்

07. ஃபோர்டு எண்டெவர்

கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் 3.2லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட டாப் வேரியண்ட்டில் இந்த வசதி கிடைக்கிறது. ரூ.34.90 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

08. ஆடி ஏ3

08. ஆடி ஏ3

சொகுசு செடான் கார் வாங்க விரும்புவோரின் முதல் சாய்ஸ் ஆடி ஏ3 கார். இந்த காரில் பனரோமிக் சன்ரூஃப் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், கார் அதிவேகத்தில் செல்லும்போது கண்ணாடி கூரை திறந்திருந்தால், அதிக சப்தம் வருவதை தவிர்க்கும் விதத்தில் விண்ட் டிஃப்லெக்டரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரூ.39.84 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

09. மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள்

09. மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார்கள் மற்றும் எஸ்யூவி என அனைத்து மாடல்களின் டாப் வேரியண்ட்டுகளில் பனரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. இவை வெவ்வேறு விதமான அளவுகளில் திறந்து வைத்துக் கொள்ளும் ஆப்ஷனுடன் கிடைப்பது கூடுதல் சிறப்பு. மேலும், சில பென்ஸ் மாடல்களில் காரின் வேகத்துக்கு தகுந்தவாறு, மூடிக் கொள்ளும் வசதியுடனும் கிடைக்கிறது. ரூ.31.80 லட்சம் ஆன்ரோடு விலையிலிருந்து கிடைக்கிறது.

10. ஆடி க்யூ3

10. ஆடி க்யூ3

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சொகுசு ரக எஸ்யூவி மாடல்களில் ஒன்றாக ஆடி க்யூ3 வலம் வருகிறது. பேஸ் மாடலில் எலக்ட்ரிக் சன்ரூஃப் வசதியும், டாப் வேரியண்ட்டுகளில், இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட பானரோமிக் சன்ரூஃப் கொடுக்கப்படுகிறது. சூரிய ஒளி நகர்வுக்கு ஏற்ப கண்ணாடிகளை மூடிக் கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ரூ.37.48 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

ஆஃப்டர் மார்க்கெட் சன்ரூஃப்

ஆஃப்டர் மார்க்கெட் சன்ரூஃப்

அய்யகோ, இந்தளவு பட்ஜெட் எம்மிடம் இல்லையே என ஏமாற்றம் அடைபவர்கள், வெளிச் சந்தையில் இந்த கண்ணாடி கூரையை பொருத்திக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு டாடா நானோ காருக்கு ரூ.40,000 வரை செலவாகும். ஆன்ட்டி பின்ச் வசதி, எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் கண்ணாடி கூரை பொருத்துவதற்கு ரூ.1.50 லட்சம் வரை செலவாகும்.

மோனோகாக் சேஸீ

மோனோகாக் சேஸீ

மோனோகாக் சேஸீ கட்டமைப்பு கொண்ட கார்களில் கண்ணாடி கூரையை வெளி மார்க்கெட்டில் பொருத்த முடியாது. பொருத்தவும் கூடாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும்.

தொடர்புடைய செய்தித் தொகுப்பு

தொடர்புடைய செய்தித் தொகுப்பு

இந்தியாவின் விலை உயர்ந்த டாப் 10 பைக் மாடல்கள்!

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Allowing light and fresh air into your car feels nostalgic and makes you feel good. Let us look at some of the cars in India which features the sunroof.
Story first published: Thursday, March 17, 2016, 10:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark