ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த 10 கார்கள்!

Written By:

உலகிலேயே அதிக விபத்துக்களும், உயிரிழப்புகளும் நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பெருகி வரும் வாகனங்கள், சாலை விதிமீறல்கள், போதிய பயிற்சி இல்லாத ஓட்டுனர்கள் உள்ளிட்ட காரணங்களால் விபத்துக்களும் சர்வசாதாரணமாகிவிட்டன.

மேற்கண்ட காரணங்களை பொதுவாக சொல்லிக்கொண்டிருந்தாலும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வாகனங்களில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்ற பேச்சு வலுவாக எழுந்திருக்கிறது. இதையடுத்து, தற்போது தனிநபர் பயன்பாட்டு வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் சிறப்பான பாதுகாப்பு அம்சங்களுடன் விற்பனை செய்யப்படும் 10 கார் மாடல்களின் விபரங்களை இந்த செய்தித தொகுப்பில் காணலாம்.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

10 லட்சத்தையொட்டிய பட்ஜெட்டில் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் சிறப்பான கட்டுமானத் தரம், ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக கிடைக்கிறது. இதன் வலுவான கட்டமைப்பு வாடிக்கையாளர்களால் புகழ்ந்து பேசப்படுகிறது.

ஸ்கோடா ரேபிட்

ஸ்கோடா ரேபிட்

கட்டுமானத் தரத்திற்கு புகழ்பெற்ற ஸ்கோடா ரேபிட் காரும் 10 லட்சத்தையொட்டிய பட்ஜெட்டில் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மாடல். டாப் வேரியண்ட் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகளுடன் கிடைக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ

ஃபோக்ஸ்வேகன் போலோ

ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் சிறப்பான கட்டுமானத் தரம் கொண்ட மாடல்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் போலோ கார். பேஸ் மாடலிலேயே ஏர்பேக் வழங்கப்படுகிறது. டாப் வேரியண்ட்டுகளில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உண்டு.

ஹோண்டா ஜாஸ்

ஹோண்டா ஜாஸ்

சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்களில் ஹோண்டா ஜாஸுக்கும் இடமுண்டு. டாப் வேரியண்ட்டுகளில் இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகள் கொடுக்கப்படுகின்றன. கட்டுமானத் தரமும் சிறப்பாக இருக்கிறது.

ஹூண்டாய் எலைட் ஐ20

ஹூண்டாய் எலைட் ஐ20

ஹேட்ச்பேக் மார்கெட்டில் பாதுகாப்பு வசதிகள் நிறைந்த கார்களில் ஒன்று ஹூண்டாய் எலைட் ஐ20. டாப் வேரியண்ட்டில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகள் நிரந்தர அம்சமாக இடம்பெற்று இருக்கின்றன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யூவியும் பாதுகாப்பான மாடல். இந்த எஸ்யூவியில் முன்புற பயணிகளுக்கான ஏர்பேக்குகள் மட்டுமின்றி, பக்கவாட்டு மோதல்களிலிருந்து பாதுகாக்கும் கர்ட்டெயின் ஏர்பேக்குளும் உள்ளது. டாப் வேரியண்ட்டில் இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் உள்ளிட்டவையும் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அம்சங்கள். விபத்தின்போது அவசர உதவி எண்களுக்கு தொடர்பு கொள்ளும் வசதியும் உள்ளது.

டொயோட்டா எட்டியோஸ்

டொயோட்டா எட்டியோஸ்

பேஸ் மாடல்களிலிருந்தே டியூவல் ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டிருப்பதுடன் வலுவான கட்டமைப்பு கொண்ட மாடல். டாப் வேரியண்ட்டில் இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் வழங்கப்படுகிறது.

ஃபியட் புன்ட்டோ எவோ

ஃபியட் புன்ட்டோ எவோ

சிறந்த கட்டுமானத் தரம் கொண்ட கார் மாடல் ஃபியட் புன்ட்டோ எவோ. டாப் வேரியண்ட்டில் இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகளுடன் கிடைக்கிறது.

 ஃபோர்டு ஆஸ்பயர்

ஃபோர்டு ஆஸ்பயர்

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரிலும் நிறைந்த பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. பேஸ் மாடலிலேயே ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. டாப் வேரியண்ட்டில் இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. இதுதவிர, அவசர உதவிக்கு தானியங்கி முறையில் அழைப்பு விடுக்கும் வசதியும் உள்ளது.

ஃபோர்டு ஃபிகோ

ஃபோர்டு ஃபிகோ

பட்ஜெட் விலையில் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஹேட்ச்பேக் மாடல். பேஸ் மாடலில் டியூவல் ஏர்பேக்குகளும், டாப் வேரியண்ட்டில் இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

உங்களுக்கு விருப்பமான மாடல்

உங்களுக்கு விருப்பமான மாடல்

ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் பாதுகாப்பான கார் மாடலாக நீங்கள் கருதும் மாடல் பற்றி கமென்ட் பாக்ஸில் எழுதலாம்.

 
English summary
Here given the 10 safest car models under 10 lakh budget in India.
Story first published: Tuesday, January 5, 2016, 16:37 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark