விற்பனையில் இந்தியாவின் டாப் -10 கார்கள்... பட்டியலில் நுழைந்தது ரெனோ க்விட்!

Written By:

புத்தாண்டில் கார் வாங்குவதற்காக, ஆண்டு இறுதியில் கார் வாங்கும் திட்டத்தை பலர் தள்ளிப்போடுவதுண்டு. ஆனால், புத்தாண்டில் விலை உயர்வு மற்றும் ஆண்டு இறுதி விற்பனையை ஊக்குவிப்பதற்காக வழங்கப்பட்ட சிறப்புச் சலுகை திட்டங்களால் கார் விற்பனை பெரிய அளவில் சுணக்கம் காணவில்லை.

மேலும், பல புதிய மாடல்களின் வரவால் டாப் 10 பட்டியலில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த விதத்தில், கடந்த ஆண்டு செப்டம்ரில் வந்து மார்க்கெட்டை கலக்கி வரும் ரெனோ க்விட் கார் ஒருவழியாக டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனையில் முதல் பத்து இடங்களை பிடித்த கார்களின் விபரங்களை காணலாம்.

10. ஹூண்டாய் இயான்

10. ஹூண்டாய் இயான்

கடந்த மாதம் ஹூண்டாய் இயான் கார் பத்தாவது இடத்தை பிடித்தது. கடந்த மாதம் 6,563 ஹூண்டாய் இயான் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் விற்பனையைவிட இது 9.4 சதவீதம் கூடுதல். பட்ஜெட் விலையில் அடக்கமான இந்த கார் விற்பனையில் தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனத்துக்கு முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகிறது.

09. ரெனோ க்விட்

09. ரெனோ க்விட்

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு மிக குறுகிய காலத்தில் டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்துள்ளது ரெனோ க்விட் கார். கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய கார் மால்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் மாடல் ரெனோ க்விட். மிக குறைவான பட்ஜெட்டில் சிறந்த டிசைன், வசதிகள், இடவசதி கொண்ட மாடல் என்தால் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த மாதம் 6,888 ரெனோ க்விட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சென்னை மழை வெள்ளத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையிலும், நல்ல விற்பனையுடன் டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்துள்ளது. வரும் மாதங்களில் ரெனோ க்விட் காரின் ஆளுமையை பொறுத்திருந்து பார்க்கலாம்.

08. மாருதி செலிரியோ

08. மாருதி செலிரியோ

மாருதி செலிரியோ கார் 8வது இடத்தில் உள்ளது. கடந்த மாதம் 8,019 செலிரியோ கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாத விற்பனையைவிட கடந்த மாத விற்பனை 65.3 சதவீதம் அதிகரித்துள்ளது. பட்ஜெட் விலை, ஏஎம்டி கியர்பாக்ஸ், டீசல் எஞ்சின் என்று பலதரப்பட்ட அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான விலையில் குறைவான பராமரிப்பு கொண்ட கார் என்பதோடு, மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க்கும் இந்த காரை வெகுவாக தூக்கிப் பிடித்துள்ளது.

07. ஹூண்டாய் எலைட் ஐ20

07. ஹூண்டாய் எலைட் ஐ20

ஆணழகன் ஹூண்டாய் எலைட் ஐ20 கார் ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த மாதம் 8,629 எலைட் ஐ20 கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த 2014ம் ஆண்டு டிசம்பரைவிட சிறிது தொய்வு காணப்பட்டாலும், ஹூண்டாய் நிறுவனத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது. சிறப்பான டிசைன், வசதிகள் இந்த காரை தூக்கிப் பிடித்து காட்டி வருகிறது.

06. மாருதி பலேனோ

06. மாருதி பலேனோ

பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட்ட மாருதி பலேனோ கார் ஏமாற்றத்தை தரவில்லை. தொடர்ந்து சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. கடந்த மாதம் 10,572 மாருதி பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டிசைன், இடவசதி, வசதிகள், மாருதியின் நம்பகத்தன்மையுடன் இந்த கார் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

 05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

ஹூண்டாய் நிறுவனத்துக்கு தோளோடு தோள் நின்று முன்னேற்றத்தை கொடுத்து வருகிறது கிராண்ட் ஐ10 கார். அடக்கமான வடிவமைப்பு, சிறப்பான வசதிகளை கொண்ட சிறந்த பட்ஜெட் கார் மாடல். கடந் மாதம் 12,749 கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாத விற்பனையை விட தற்போது 55.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

04. மாருதி ஸ்விஃப்ட்

04. மாருதி ஸ்விஃப்ட்

மாருதி பலேனோ வரவால் போட்டியாளர்களைவிட நேரடி பாதிப்பை சந்தித்திருக்கும் மாடல் மாருதி ஸ்விஃப்ட். கடந்த மாதம் 14,548 மாருதி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் விற்பனையுடன் ஒப்பிடும்போது, இந்த காரின் விற்பனை16.4 சதவீதம் குறைந்தது. ஸ்போர்ட்டியான டிசைன், பெர்ஃபார்மென்ஸ், வசதிகள், மைலேஜ், குறைந்த பராமரிப்பு செலவு போன்றவை இந்த காருக்கு தொடர்ந்து வாடிக்கையாளர்களை பெற்றுத் தந்துகொண்டிருக்கிறது.

 03. மாருதி வேகன்-ஆர்

03. மாருதி வேகன்-ஆர்

சிறப்பான பட்ஜெட் கார் மாடல். கடந்த மாதம் 14,645 மாருதி வேகன் ஆர் கார்கள் விற்பனையாகியுள்ளன. சிறிய வித்தியாசத்தில் தனது பங்காளியான ஸ்விஃப்ட்டை முந்தி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் விற்பனையைவிட, கடந்த டிசம்பரில் 18.7 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. சிறப்பான இடவசதி, அடக்கமான வடிவமைப்பு, குறைந்த பராமரிப்பு மாருதியின் பெரிய அளவிலான சர்வீஸ் நெட்வொர்க் ஆகியவை இந்த காரின் விற்பனையை ஸ்திரமாக வைத்திருக்கிறது.

02. மாருதி டிசையர்

02. மாருதி டிசையர்

கடந்த மாதம் 16,790 மாருதி டிசையர்கள் விற்பனையாகியுள்ளன. 2014ம் ஆண்டு டிசம்பர் விற்பனையுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் 8.1 சதவீதம் டிசையர் விற்பனை கூடியிருக்கிறது. குறைவான பராமரிப்பு செலவு கொண்ட காம்பேக்ட் செடான் கார் என்பதோடு, அதிக மைலேஜ் தரும் மாடல். மேலும், வசதிகள், இடவசதியிலும் நிறைவை தருவதால், விற்பனையில் கொடிகட்டி பறக்கிறது.

 01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

ரெனோ க்விட் வந்தாலும், டட்சன் ரெடி-கோ வந்தாலும் என்னை அசைக்க முடியாது என்று தனது விற்பனையின் மூலமாக சாதித்து வருகிறது மாருதி ஆல்ட்டோ. குறைந்த பராமரிப்பு, அதிக மைலேஜ் போன்றவற்றோடு, மூலைக்கு மூலை இருக்கும் மாருதி சர்வீஸ் சென்டர்களும் இந்த காரின் வெற்றியை உறுதி செய்து வருகின்றன. கடந்த மாதம் 22,589 மாருதி ஆல்ட்டோ 800 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

 
English summary
Let's take a look at top 10 selling cars for the month of December 2015.
Story first published: Friday, January 8, 2016, 11:42 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark