விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார்கள்... சிட்டியை நறநறக்க வைத்த சியாஸ்!

Written By:

பருவமழை சிறப்பான துவக்கத்தை கொடுத்திருக்கும் நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் கார் விற்பனை நல்ல விற்பனை வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. பெரும்பாலான கார் மாடல்களின் விற்பனை மீண்டும் சூடுபிடித்துள்ளது.

மேலும், கார் விற்பனையில் நாட்டின் முதன்மையான நிறுவனமான மாருதியும் இதுவரை இல்லாத அதிகபட்ச விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்திருக்கிறது. இதனால், பண்டிகை காலத்துக்கு முன்னதாகவே நல்ல துவக்கத்தை கார் மார்க்கெட் சந்தித்திருக்கிறது. கடும் சந்தைப்போட்டிக்கு மத்தியிலும் கடந்த மாதத்தில் விற்பனையில் டாப் 10 இடங்களை பிடித்த கார் மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

10. மாருதி சியாஸ்

10. மாருதி சியாஸ்

மிட்சைஸ் கார் செக்மென்ட்டில் மாருதி சியாஸ் கார் சிறப்பான விற்பனையை பதிவு செய்திருக்கிறது. கடந்த மாதத்தில் 5,162 சியாஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இது கடந்த ஆண்டு ஜூலை மாத விற்பனையை ஒப்பிடும்போது 146 சதவீதம் கூடுதல். மாருதி சியாஸ் காரின் டீசல் ஹைபிரிட் மாடலுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்திருக்கிறது.

 09. மாருதி செலிரியோ

09. மாருதி செலிரியோ

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் மாருதி செலிரியோ கார் தொடர்ந்து நல்ல விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. கடந்த மாதம் 7,792 செலிரியோ கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த மாதத்தில் விற்பனை 0.1 சதவீதம் உயர்ந்திருக்கிறது. குறைவான பராமரிப்பு செலவு கொண்ட சிக்கனமான கார் மாடல் என்பதால் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை தக்க வைத்து வருகிறது.

 08. ஹூண்டாய் எலைட் ஐ20 கார்

08. ஹூண்டாய் எலைட் ஐ20 கார்

பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் எலைட் ஐ20 கார் மாதா மாதம் நல்ல விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. கடந்த மாதத்தில் 8,205 எலைட் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கவர்ச்சிகரமான டிசைன் இதற்கான மவுசை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

07. மாருதி பலேனோ

07. மாருதி பலேனோ

ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு கடும் போட்டியை தந்து வருகிறது மாருதி பலேனோ கார். கடந்த மாதத்தில் 9,120 மாருதி பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் சிறப்பான மாடலாக இருக்கிறது மாருதி பலேனோ. இதனால், வாடிக்கையாளர் மத்தியிலும் நன்மதிப்பை பெற்றிருக்கிறது.

06. ரெனோ க்விட்

06. ரெனோ க்விட்

குறைவான விலையில் அருமையான கார் மாடல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது ரெனோ க்விட். கடந்த மாதத்தில் 9,897 க்விட் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. ரெனோ கார் நிறுவனத்தின் தலையெழுத்தை மாற்றி எழுதிய பெருமை இந்த காருக்கு உண்டு.

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

மாருதி கார்களுக்கு இணையாக மாதம் 10,000 கார்களை தாண்டி விற்பனையாகும் பிற நிறுவனத்தின் ஒரே கார் என்று சொன்னால் அது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் மாடலாகத்தான் இருக்கும். டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் நிறைவை தரும் மாடல்.

04. மாருதி ஸ்விஃப்ட்

04. மாருதி ஸ்விஃப்ட்

கடந்த மாதத்தில் ஓரளவு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியிருக்கிறது. கடந்த மாதத்தில் 13,934 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. மாருதி மற்றும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பல ஆண்டுகளாக பெற்றிருக்கிறது. மார்க்கெட்டில் மிக நம்பகமான மாடல். அதேநேரத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தைவிட 26 சதவீதம் விற்பனை குறைந்துவிட்டதையும் பார்க்க வேண்டும்.

03. மாருதி வேகன் ஆர்

03. மாருதி வேகன் ஆர்

நகர்ப்புறத்திற்கு ஏற்ற அருமையான கார் மாடல். இதனாலாயே, தொடர்ந்து விற்பனையில் அசத்தி வருகிறது. கடந்த மாதத்தில் 15,207 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. பராமரிப்பு செலவு மிக குறைவான கார்.

02. மாருதி டிசையர்

02. மாருதி டிசையர்

கடந்த மாதத்தில் 19,229 டிசையர் கார்கள் விற்பனையாகி அசத்தி இருக்கிறது. தொடர்ந்து கார் மார்க்கெட்டில் மிகச்சிறந்த மாடலாக வலம் வருகிறது. அனைத்து விதத்திலும் சிறந்த, நம்பகமான கார் மாடல். அதிக மைலேஜ் தரும் செடான் மாடல்.

01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

கடந்த மாதத்தில் 19,844 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. ரெனோ க்விட் வந்தாலும், ஆல்ட்டோ கார் ஒரு பக்கம் விற்பனையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மாருதியின் சேவை தரம் இந்த காரின் விற்பனையை தொடர்ந்து முன்னிலையில் வைத்திருக்கிறது.

 
English summary
Top 10 selling cars in July 2016.
Story first published: Friday, August 5, 2016, 10:40 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark