இந்தியாவின் டாப் - 10 கார்களின் குறைகள் நிறைந்த மறுபக்கம்!

By Saravana

நல்லவர்களாக கருதும் பலரிடம் சில மோசமான விஷயங்களை காண முடியும். அதேபோன்று, நாம் சிறந்த கார்களாக கருதி வாங்கும் அல்லது நம்பிக் கொண்டிருக்கும் சில மாடல்களிலும் பல குறைகள் உண்டு. ஆம், விற்பனையில் கொடி கட்டி பறக்கும் நம் நாட்டின் கார்களிடம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், அவற்றிற்கு மோசமான மறுபக்கம் ஒன்றும் இருக்கிறது.

'பரந்து விரிந்த' பின்புலத்தை வைத்து சில கார்கள் விற்பனையில் கொடி கட்டி பறக்கின்றன. ஆனால், இதன் மோசமான மற்றொரு பக்கத்தை அலசும் விதத்தில் இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது.

01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

விற்பனையில் இந்தியாவின் நம்பர் - 1 கார் மாடல். மாதத்திற்கு 20,000க்கும் மேற்பட்ட விற்பனை என்ற பெருமைக்குரிய மாடல் ஆல்ட்டோ. குறைந்த பராமரிப்பு, அதிக மைலேஜ், மாருதியின் சிறந்த வாடிக்கையாளர் சேவை, குறைவான விலை போன்றவை வாடிக்கையாளர்களை கவர காரணமாகியிருக்கின்றன. இது மட்டும் ஒரு வாடிக்கையாளரை திருப்தி படுத்த போதுமா? அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

குறைகள்

குறைகள்

பழைய ஆல்ட்டோ மாடலே பரவாயில்லை எனும் வகையிலான டிசைன். இந்திய பாதுகாப்பு தர விதிகளின்படி தயாரிக்கப்படுவதாக கூறினாலும், அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஏற்ற மாடல் இல்லை. விலை குறைவு என்று சமரசப்படுத்திக் கொண்டாலும், பாதுகாப்பில் மிக மோசமான மாடல்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. தடிமனான பின்புற சி பில்லர் காரணமாக, பின்னால் வரும் வாகனங்களை தெளிவாக பார்ப்பதில் ஓட்டுனருக்கு சிக்கல் உண்டு. பனி விளக்குகள் இல்லை, ஒற்றை சைடு மிரர் போன்றவையும் குறைகளாக இருக்கின்றன.

 02. மாருதி ஸ்விஃப்ட்

02. மாருதி ஸ்விஃப்ட்

இந்தியாவின் மிக பிரபலமான கார் மாடல். மாதத்திற்கு 16,000 முதல் 18,000 வரையிலான எண்ணிக்கையில் விற்பனையாகிறது. கையாளுமை, மைலேஜ், டிசைன் என அனைத்திலும் சிறப்பான மாடல் என்பதை மறுப்பதற்கில்லை.

குறைகள்

குறைகள்

போட்டியாளர்களை ஒப்பிடும்போது நெருக்கடியான பின்புற இருக்கையின் இடவசதி, குறைவான கொள்ளளவு கொண்ட பூட் ரூம் ஆகியவை முக்கிய குறைகள். தடிமனான ஏ பில்லர் காரணமாக, வளைவுகளில் திரும்பும்போது எதிரில் வரும் வாகனங்களை கவனித்து ஓட்டுவதில் சில சமயம் சிக்கல் ஏற்படுவதுண்டு.

03. மாருதி டிசையர்

03. மாருதி டிசையர்

மாதத்திற்கு 20,000 கார்கள் என விற்பனையில் கலக்கி வருகிறது. மிடில் கிளாஸ் வாடிக்கையாளர்களின் செடான் கார் மாடலாக புகழப்பெறுகிறது. குறைவான பராமரிப்பு, அதிக மைலேஜ் இதன் சிறப்பம்சங்கள்.

குறைகள்

குறைகள்

மாருதி டிசையர் காரின் மிகப்பெரிய மைனஸ் அதன் பின்புற டிசைன். ஒட்ட வைத்தது போன்ற பூட் ரூம் பலரை கவராது. அத்துடன், கட்டுமானத்திலும் மிக மோசமான மாடல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வெறும் 316 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூமுடன் ஹேட்ச்பேக் கார்களுடன் போட்டி போடுகிறது.

04. மாருதி வேகன் ஆர்

04. மாருதி வேகன் ஆர்

விற்பனையில் இந்தியாவின் டாப் - 10 கார்களில் 4வது இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வரும் மாடல். குறைந்த பராமரிப்பு, அதிக மைலேஜ் என நகர்ப்புறத்துக்கும், மிடில் கிளாஸ் வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறப்பா மாடலாக இருக்கிறது. சிறிய குடும்பத்தினருக்காக பர்ஃபெக்ட் சாய்ஸ்.

குறைகள்

குறைகள்

மினி வேன் போன்ற டிசைன் பலரையும் கவராது. மேலும், இதன் பெரிய ஏ பில்லர், ஓட்டுனருக்கு போதிய பார்வையை வழங்காது. நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பிலும் குறைவாகவே மதிப்பிடப்படுகிறது.

05. ஹூண்டாய் எலைட் ஐ20

05. ஹூண்டாய் எலைட் ஐ20

ஹேட்ச்பேக் மார்க்கெட்டின் ஆணழகன் என்று டிரைவ்ஸ்பார்க தமிழ் தளம் குறிப்பிடும் மாடல். அனைவரையும் மிகவும் கவர்ந்த மாடல். டிசைன், வசதிகள் என அனைத்திலும் தன்னிறைவ தருகிறது. உயரமானவர்கள் ஓட்டுவதற்கு சவுகரியமான உணர்வு இல்லாதது, கையாளுமையில் சொதப்பல், அதிக பராமரிப்பு செலவு போன்றவை சில குறைகள்.

உங்க மனசுல என்ன இருக்கு?

உங்க மனசுல என்ன இருக்கு?

உங்களுக்கு பிடித்த கார் அல்லது பிடிக்காத காரின் நல்ல விஷயங்கள் மற்றும் குறைகளை கமென்ட் பாக்ஸில் பதிவிடலாம். பிறருக்கு பயனுள்ளதாக அமையும். எந்த இடத்திலுமே குறை, நிறைகள் இருக்கும். சில குறைகளைவிட அதிக நிறைகளை கொண்ட கார் மாடலை தேர்வு செய்வதே சிறப்பாக அமையும்.

More from DriveSpark

Article Published On: Friday, January 22, 2016, 17:21 [IST]
English summary
Top 5 Best selling cars Prons And Cons.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+