இந்த ஆண்டு இந்திய ஆட்டோமொபைல் துறையின் 5 முக்கிய நிகழ்வுகள்!

Written By:

வழக்கம்போல் இந்திய வாகன மார்க்கெட் பல்வேறு சாதனைகளையும், சோதனைகளும் கடந்து இந்த ஆண்டின் நிறைவு தருணத்தை எட்டியிருக்கிறது.

நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகன விற்பனை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இந்த ஆண்டில் பதிவு செய்திருக்கிறது. இந்த நிலையில், இந்த ஆண்டில் இந்திய வாகன துறையில் பரபரப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்திய 5 முக்கிய நிகழ்வுகளை இந்த செய்தியில் காணலாம்.

01. டீசல் கார்களுக்கான தடை

01. டீசல் கார்களுக்கான தடை

காற்று மாசுபாடு அதிகரித்ததையடுத்து, டெல்லி உள்ளிட்ட என்சிஆர் பகுதியில் 2,000சிசி மற்றும் அதற்கு அதிகமான திறன் கொண்ட டீசல் கார்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தடை விதித்தது. கடந்த ஆண்டு இறுதியில் விதிக்கப்பட்ட இந்த தடையானது புத்தாண்டிலும் நீடிக்கப்பட்டதால், கார் நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன.

இந்த ஆண்டு இந்திய ஆட்டோமொபைல் துறையின் 5 முக்கிய நிகழ்வுகள்!

மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் டொயோட்டா உள்ளிட்ட கார் நிறுவனங்களின் விற்பனையில் இந்த தடை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதுடன் பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டது. இறுதியில் கார் நிறுவனங்கள் அளித்த உறுதிமொழியின் பேரிலும், பசுமை வரி விதிக்கும் நிபந்தனைகளுடன் தடையை உச்சநீதிமன்றம் விலக்கி உத்தரவிட்டது. இதனால், கார் நிறுவனங்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டன.

 02. புதிய பாதுகாப்பு அம்சங்கள்

02. புதிய பாதுகாப்பு அம்சங்கள்

கடந்த ஆண்டு குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்தி கிராஷ் டெஸ்ட் எனப்படும் மோதல் ஆய்வுகளில் இந்தியாவில் விற்பனையாகும் பல முன்னணி கார் மாடல்கள் மிக மோசமான தர மதிப்பீட்டை பெற்றன. மேலும், டட்சன் கோ உள்ளிட்ட கார்கள் பாதுகாப்பு தரத்தில் படுமோசமாக இருப்பதாகவும், அந்த காரின் விற்பனையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவும் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டது. இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆண்டு இந்திய ஆட்டோமொபைல் துறையின் 5 முக்கிய நிகழ்வுகள்!

இதனிடையே, இந்தியாவில் விற்பனையாகும் கார்களின் பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு புதிய பாதுகாப்பு விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு செல்லும் கார்கள் அனைத்தும் கிராஷ் டெஸ்ட் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட உள்ளது. அத்துடன், ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகளை நிரந்தரமாக கொடுக்கவும் புதிய விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வருவதற்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

03. ஃபோக்ஸ்வேகன் மாசு உமிழ்வு மோசடி

03. ஃபோக்ஸ்வேகன் மாசு உமிழ்வு மோசடி

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமம் டீசல் கார்களின் மாசு உமிழ்வு அளவை குறைத்துக் காட்டுவதற்காக விசேஷ சாஃப்ட்வேர் ஒன்றை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. இது உலக அளவில் வாகன துறையினரையும், வாடிக்கையாளர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஃபோக்ஸ்வன் கார்கள் மட்டும் இல்லாமல், அந்த குழுமத்தின் கீழ் செயல்படும் ஆடி, போர்ஷே, ஸ்கோடா மற்றும் சீட் உள்ளிட்ட பல முன்னணி பிராண்டுகளின் டீசல் கார்களும் இந்த மோசடி பிரச்னையில் சிக்கியது. கடந்த சில ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்ட 11 மில்லியன் கார்கள் இந்த மோசடி பிரச்னையில் சிக்கின.

இந்த ஆண்டு இந்திய ஆட்டோமொபைல் துறையின் 5 முக்கிய நிகழ்வுகள்!

இதையடுத்து, உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்ட டீசல் கார்களை திரும்ப பெற்றுக் கொள்ளவும், மாசு உமிழ்வு அளவுக்கான சாப்ட்வேரை சரி செய்து தரவும் ஃபோக்ஸ்வேகன் முடிவு செய்தது. மேலும், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இழப்பீடு வழங்கவும் ஒப்புக்கொண்டு பிரச்னையை சுமூகமாக முடிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டது. இந்தியாவிலும் இது போன்ற மோசடி சாஃப்ட்வேர் கொண்ட 1.90 லட்சம் கார்களை திரும்ப பெற்று சரிசெய்து தருவதாக அறவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 04. புதிய மோட்டார் வாகனச் சட்டம்

04. புதிய மோட்டார் வாகனச் சட்டம்

சாலை போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்தது. அர்த பழைய மோட்டார் வாகனச் சட்டத்தில் கடுமையான புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டு அபாரதம் மற்றும் இதர விதிகளில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய மோட்டார் வாகனச் சட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. விதிமுறைகளை மீறுவோருக்கு கடும் தண்டனைகள் மற்றும் அபராதத் தொகையுடன் இந்த புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வர இருக்கிறது.

 05. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளுக்கு தடை

05. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளுக்கு தடை

கடந்த நவம்பர் மாதம் 8ந் தேதி உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதனால், கார் விற்பனையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, சொகுசு கார் மார்க்கெட்டில் இந்த செல்லாது அறிவிப்பு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆண்டு இந்திய ஆட்டோமொபைல் துறையின் 5 முக்கிய நிகழ்வுகள்!

இந்த நிலையில், பணப் புழக்கம் மெல்ல சீரடைந்து வருவதால், வரும் மாதங்களில் கார் விற்பனை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கார், பைக்குகள் மார்க்கெட் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பினாலும், சொகுசு கார் மார்க்கெட்டில் ரூபாய் நோட்டு தடை ஏற்படுத்திய பாதிப்பு நீங்குவதற்கு சில மாதங்கள் பிடிக்கும் என்று கருதப்படுகிறது.

English summary
Here are the top 5 happenings in the Indian automobile industry in 2016.
Story first published: Tuesday, December 27, 2016, 16:53 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos