ஜூன் மாதத்தில் அதிரடி தள்ளுபடிகளுடன் கிடைக்கும் டாப் 5 செடான் கார்கள்
2016 ஜூன் மாதத்தில், பல்வேறு செடான் கார் மாடல்களின் மீது அதிரடி தள்ளுபடிகள் கிடைக்கிறது.
தற்போது, இந்தியாவின் டாப் 5 செடான் கார்கள் மீது வழங்கப்படும் சலுகைகள் குறித்த விவரங்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;
இந்திய வாகன சந்தைகளில், புதிய கார் மாடல்கள் அடிக்கடி அறிமுகம் செய்யபடுகிறது. புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படுவதால், பழைய மாடல்கள் வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது.
இதனையடுத்து, கார் நிறுவனங்கள் ஏராளமான தள்ளுபடிகளையும், சலுகைகளையும், தாராளமாக அள்ளி வழங்குகின்றனர்.
வாடிக்கையாளர்கள், தங்களுக்கு பிடித்த கார்களை வாங்குவதற்கு முன் இந்த பட்டியலை படித்துவிட்டு முடிவு செய்தால் அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

5) ஹோண்டா சிட்டி;
ஹோண்டா கார்ஸ் இந்தியா, தங்கள் நிறுவனத்தின் 2015 ஹோண்டா சிட்டி மாடல் மீது தள்ளுபடிகளையும், ஆதாயங்களையும் வழங்குகின்றனர்.
டீசல் மூலம் இயங்கும் இந்த செடான் மீது, 60,000 ரூபாய் வரை மதிப்பிலான ஆதாயங்கள் கிடைக்கிறது.

பெட்ரோல் மூலம் இயங்கும் ஹாண்டா சிட்டி மீது, 15,000 ரூபாய் தள்ளுபடி உடன் வழங்கப்படுகிறது.
இதோடு மட்டுமல்லாமல், ஹோண்டா வாகன வாடிக்கையாளர்கள், 15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெற்று கொள்ளலாம்.

4) நிஸான் சன்னி;
நிஸான் சன்னி செடான் மாடல் மேம்படுத்தபட்டுள்ள போதிலும், அது வாடிக்கையாளர்களை கவருவதில் வெற்றி பெறவில்லை.
இதனால், ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் நிஸான் நிறுவனம், நிஸான் சன்னி மீது மொத்தமாக 70,000 ரூபாய் மதிப்பிலான சலுகை வழங்கப்படுகிறது.

நிஸான் நிறுவனத்தின் சன்னி செடானின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல் இரண்டுமே சிறப்பான தயாரிப்புகள் ஆகும்.
இந்த 2 மாடல்களுமே சலுகைகளுடன் கிடைக்கிறது.

3) ஹூண்டாய் வெர்னா;
ஹூண்டாய் நிறுவனம், அதற்கு எழும் போட்டிகளை முறியடிப்பதில் முனைப்புடன் உள்ளது.
இதற்காக, ஹூண்டாய் நிறுவனம், வெர்னாவின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் மீதும் தள்ளுபடிகளை வழங்குகின்றனர்.

ஹூண்டாய் வெர்னா செடானின் இரண்டு வேரியன்ட்கள் மீதும் 80,000 ரூபாய் வரையிலான தள்ளுபடிகளும், ஆதாயங்களும் வழங்கப்படுகிறது.
10,000 ரூபாய் லாயல்டி போனஸ் என்ற வகையிலும், 20,000 ரூபாய் கேஷ் டிஸ்கவுன்ட் என்ற முறையிலும், 50,000 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ் என்ற பெயரிலும் கிடைக்கிறது.

2) ஃபியட் லீனியா;
இந்த 2016 ஜூன் மாதத்தின் போது, ஃபியட் லீனியா மற்றும் ஃபியட் லீனியா கிளாசிக் ஆகிய 2 மாடல்களுமே தள்ளுபடிகள் மற்றும் ஆதாயங்களுடன் கிடைக்கிறது.
ஃபியட் லீனியா கிளாசிக், மீது 65,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள் கிடைக்கிறது.

ஃபியட் லீனியா மீது 95,000 ரூபாய் மதிப்பிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஃபியட் இந்தியா நிறுவனம், ஃபியட் லீனியா மற்றும் ஃபியட் லீனியா கிளாசிக் மாடல்களுக்கு முதல் வருடத்திற்கான இன்சூரன்ஸ் இலவசமாக வழங்குகின்றனர்.

1) ஹூண்டாய் எலான்ட்ரா;
ஹூண்டாய் எலான்ட்ரா, ஜூன் 2016-ல் அதிக தள்ளுபடிகளுடன் கிடைக்கும் டாப் 5 செடான்களின் பட்டியலில் 2-வது கார் மாடல் ஆகும்.
ஹூண்டாய் நிறுவனம், தாங்கள் வழங்கும் எலான்ட்ரா செடானை விரைவில் மேமப்டுத்த உள்ளது.

ஹூண்டாய் எலான்ட்ரா மீது 1.30 லட்சம் ரூபாய் என்ற அதிரடியான தள்ளுபடி கிடைக்கிறது.
ஹூண்டாய் எலான்ட்ரா செடானின், பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட் இரண்டுமே இந்த அதிரடி தள்ளுபடியுடன் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








