டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் டைனமிக், ஸ்பெஷல் எடிஷன் மாடல் விரைவில் அறிமுகம்

Written By:

டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் டைனமிக் மாடல், விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யபட உள்ளது.

டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் டைனமிக் மாடல் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பெஷல் எடிஷன்...

ஸ்பெஷல் எடிஷன்...

டொயோட்டா மோட்டார்ஸ், தங்கள் நிறுவனத்தின் சார்பாக, ஒரு புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலை இந்திய வாகன சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளனர்.

இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல், டொயோட்டாவின் கிராஸ்ஓவர் மாடலான எட்டியோஸ் கிராஸை அடிப்படையாக கொண்டு அமைக்கபட்டுள்ளது. இந்த மாடலை, டொயோட்டா நிறுவனம், எட்டியோஸ் கிராஸ் டைனமிக் வேரியண்ட் என்று பெயர் சூட்டியுள்ளது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் டைனமிக் வேரியண்ட், 2 பெட்ரோல் இஞ்ஜின்கள் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய தேர்வுகளில் வருகிறது.

பெட்ரோல் இஞ்ஜின்;

பெட்ரோல் இஞ்ஜின்;

டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் டைனமிக் வேரியண்ட், 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் 1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் ஆகிய இரு தேர்வுகளில் கிடைக்கும்.

டீசல் இஞ்ஜின்;

டீசல் இஞ்ஜின்;

டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் டைனமிக் வேரியண்ட், சிங்கிள் 1.4 லிட்டர் டீசல் இஞ்ஜின் தேர்வில் கிடைக்கும்.

மாற்றங்கள்;

மாற்றங்கள்;

டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் டைனமிக், சில சிறிய மாற்றங்களை பெற்றிருக்கும். இதன் விற்பனையை கூட்டும் வகையில், இதன் உட்புற மற்றும் வெளிப்புற அமைப்புகளில் மேம்பாடுகள் செய்யபட உள்ளது.

மேலும், வழக்கமான மாடல்களை காட்டிலும், இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடலை வேறுபடுத்தி காட்டும் வகையில், இந்த டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் டைனமிக் மாடலுக்கு சில எக்ஸ்குளுசிவ் அம்சங்கள் சேர்க்கபட உள்ளது.

பிற மேம்பாடுகள்;

பிற மேம்பாடுகள்;

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் டொயோட்டா கார் உற்பத்தி நிறுவனம், எக்ஸ்குளுசிவ் எக்ஸ்டீரியர் வண்ணங்களின் தேர்வுகளை வழங்க உள்ளது.

இண்டீரியர் பொருத்த வரை, கேபின் பகுதிக்குள்ளே பிரிமியம் உணர்வு வழங்கும் வகையில் ஆம்பியண்ட் லைட்டிங் வழங்கபடலாம்.

மேலும், அப்ஹோல்ஸ்ட்ரிக்கும் (மரச்சாமான்கள்) பிரத்யேகமான முறையில் மறுவடிவமைக்கபடுகிறது.

விற்பனையை கூட்டும் முயற்சி;

விற்பனையை கூட்டும் முயற்சி;

முன்னதாக, டொயோட்டா நிறுவனம் எட்டியோஸ் லிவா ஹேட்ச்பேக் காரை ஸ்பெஷல் எடிஷன் வடிவில் வெளியிட்டனர். எட்டியோஸ் ரேஞ்ச் மாடல்களின் விற்பனை இந்தியாவில் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.

ஸ்பெஷன் எடிஷனான டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் டைனமிக் வேரியண்ட்டின் அறிமுகம், இந்திய வாகன சந்தைகளில் டொயோட்டா நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்கும் என இந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் Vs டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ்: ஒப்பீடு

ஃபோக்ஸ்வேகன் கிராஸ்போலோ Vs டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் Vs ஃபியட் அவென்ச்சுரா: சிறப்பம்சங்கள் ஒப்பீடு!

ரூ.5.76 லட்சத்தில் விற்பனைக்கு வந்த புதிய டொயோட்டா எட்டியோஸ் கிராஸ்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Toyota Motors would launch an all-new special edition model in Indian market. This special edition is based on their crossover model, the Etios Cross. Toyota named this model as the Toyota Etios Cross Dynamique variant. Etios Cross Dynamique variant will have two petrol and a single diesel engine. The launch of this Toyota Etios Cross Dynamique variant is expected soon.
Story first published: Tuesday, February 16, 2016, 15:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark