2016 டொயோட்டா எட்டியோஸ் ஸ்பை படங்கள், அறிமுக தேதி வெளியாகியது
டொயோட்டா நிறுவனம் தயாரிக்கும் பொலிவு கூட்டப்பட்ட 2016 டொயோட்டா எட்டியோஸ் காம்பேக்ட் செடான், இந்த பண்டிகை காலத்திற்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என தகவல்கள் வெளியாகிறது.
புதிய 2016 டொயோட்டா எட்டியோஸ் காம்பேக்ட் செடான் பற்றிய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டொயோட்டா எட்டியோஸ்...
டொயோட்டா எட்டியோஸ், ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் டொயோட்டா நிறுவனம் தயாரிக்கும் காம்பேக்ட் செடான் ஆகும்.
இந்திய வாகன சந்தைகளில் எதிர்பார்க்கப்படும் வாகனங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.

அறிமுகம்;
புதிய 2016 டொயோட்டா எட்டியோஸ் காம்பேக்ட் செடானுக்கு, டொயோட்டா நிறுவனம் சில மேம்பாடுகளை வழங்க உள்ளது.
இந்த பொலிவு கூட்டப்பட்ட டொயோட்டா எட்டியோஸ் காம்பேக்ட் செடான், இந்திய வாகன சந்தைகளில் பண்டிகை காலங்களுக்கு முன்னதாக அறிமுகம் செய்யபட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பை படங்கள்;
புதிய 2016 டொயோட்டா எட்டியோஸ் காம்பேக்ட் செடானின் சோதனைகள் இந்திய சாலைகளில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள், தற்போது வெளியாகியுள்ளது.

மேம்பாடுகள்;
புதிய 2016 டொயோட்டா எட்டியோஸ் காம்பேக்ட் செடானின் எக்ஸ்டீரியருக்கு பல்வேறு டிசைன் மேம்பாடுகள் செய்யப்பட உள்ளது.
பிரேசிலில் விற்கப்படும் டொயோட்டா எட்டியோஸ் மாடலை போன்றே இந்தியாவிற்கான டொயோட்டா எட்டியோஸ் மாடலிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.
இதன் இன்டீரியரும் பிரிமியம் உணர்வு வழங்கும் வகையில் மேம்படுத்தி வழங்கப்பட உள்ளது.

எக்ஸ்டீரியர்;
2016-ஆம் ஆண்டிற்கான புதிய டொயோட்டா எட்டியோஸ் காம்பேக்ட் செடானுக்கு மருவடிவமைக்கப்பட்ட ஃபிரண்ட் மற்றும் ரியர் பம்பர்கள் பொருத்தப்படும்.
மேலும், புதிய வி வடிவிலான கிரில், ஃபாக் லேம்ப் என்குலோஷர் மற்றும் அகன்ற ஏர்-இண்டேக்குகள் சேர்க்கப்பட உள்ளது.
இந்திய வாகன சந்தைகளுக்கென, ஸ்போர்டியான தோற்றத்தை அதிகரிக்கும் வகைத்யில் குரோம் பூச்சு செய்யபட்ட டெயில் லைட்களும் பொருத்தப்படும்.

இன்டீரியர்;
புதிய 2016 டொயோட்டா எட்டியோஸ் காம்பேக்ட் செடானின் இன்டீரியர் மேம்பாடுகளின் ஒரு பகுதியாக புதிய அப் ஹோல்ஸ்ட்ரி, 3-ஸ்போக்குகள் உடைய ஸ்டீயரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்படும்.
இந்த புதிய மேம்பாடுகள் வழக்கம் போல், அனைவரையும் ஈர்க்கும் என டொயோட்டா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் நம்புகிறது.
பெரும்பாலான மேம்பாடுகள், பிரேசிலில் விற்கப்படும் டொயோட்டா எட்டியோஸ் மாடலில் உள்ளது போன்றே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விலை;
புதிய 2016 டொயோட்டா எட்டியோஸ் காம்பேக்ட் செடானின் விலை, தற்போதைய மாடலை காட்டிலும், கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
டொயோட்டா எட்டியோஸ் எக்ஸ்க்ளூசிவ் எடிசன் மாடல் அறிமுகம்!
எட்டியோஸ் தொடர்புடைய செய்திகள்
டொயோட்டா தொடர்புடைய செய்திகள்
Spy Pics Source: MotorBeam


Click it and Unblock the Notifications








