ஆய்வுக்காக இந்தியா வந்தது டொயோட்டா வியோஸ்... விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டம்?
ஜப்பான் நாட்டின் ஜம்பவான் நிறுவனமாக விளங்கும் டொயோட்டா கம்பெனி, ப்ரிமீயம் செடான் மாடல் காரான வியோஸை இந்தியாவில் இறக்குமதி செய்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக அந்த கார் நம் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தூண்டும் செம கிளாஸான டொயோட்டா வியாஸ், விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற யூகங்களும் எழுந்துள்ளன. ஒருவேளை அந்த மாடல் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டால், ஹோண்டா சிட்டி, ஹுண்டாய் வெர்னோ, ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ ஆகிய கார்களுக்கு சரியான போட்டியாக அத விளங்கும் என்று கருதப்படுகிறது.

மிட்சைஸ் செடான்
சர்வதேச அளவிலும் கிட்டத்தட்ட அதே நிலைதான். டொயோட்டா எட்டியோஸ் மற்றும் கொரொல்லா ஆல்ட்டிஸ் ஆகிய மாடல்களுக்கு இடைப்பட்ட ரகமாக வந்துள்ளது வியாஸ்.

டிசைன்
மினி கரொல்லா ஆல்டிஸ் கார் போன்றே இருக்கிறது. கரொல்லா ஆல்டிஸ் மாடல் டிசைனின் பிரதிபலிப்பு வியோஸிலும் ஆங்காங்கே தென்படுகிறது. மேலும் வியோஸ் மாடலை கூர்ந்து கவனித்தால், எட்டியோஸும் நம் நினைவுக்கு வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை.

எஞ்சின்
1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் என இரு வேறு மாடல்களில் டொயோட்டா வியாஸ் அறிமுகமாகவுள்ளது. 5 மேனுவல் கியர்கள் மற்றும் 4 ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன்களும் அதில் உள்ளன.

வடிவம்
4,410 மி.மீட்டர் நீளம், 1,700 மி.மீ அகலம், 1.475 மி.மீ உயரம் என ப்ரீமியம் செடான் கிளாஸ் கார்களுக்கு கனகச்சிதமாகப் பொருந்தும் அளவீடுகளைக் கொண்டுள்ளது வியாஸ். எட்டியோஸ் மாடலும் இதே அளவீடுகளில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், 2 ஏர்-பேக், ஏபிஎஸ் சிஸ்டம் என கூடுதல் சிறப்பம்சங்கள் வியாஸ் மாடலில் உள்ளன.

அறிமுகம் எப்போது?
இந்தியாவுக்கு ஆய்வுக்காக கொண்டு வரப்பட்டுள்ள வியாஸ் மாடல் கார், இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ மார்க்கெட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








