டொயோட்டா இன்னோவா எம்பிவியின் உற்பத்தி இந்தியாவில் முறைப்படி நிறுத்தம்

By Ravichandran

முதல் தலைமுறை டொயோட்டா இன்னோவா எம்பிவியின் உற்பத்தி, இந்தியாவில் முறைப்படி நிறுத்தபட்டுள்ளது.

உற்பத்தி நிறுத்தபட்டுள்ள டொயோட்டா இன்னோவா குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

உற்பத்தி நிறுத்தம்;

உற்பத்தி நிறுத்தம்;

டொயோட்டா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், தாங்கள் தயாரித்து வந்த முதல் தலைமுறை டொயோட்டா இன்னோவா எம்பிவியின் உற்பத்தியை நிறுத்திவிட்டனர்.

தற்போது வரை, இந்த முதல் தலைமுறை டொயோட்டா இன்னோவா எம்பிவி கர்நாடகாவில் உள்ள பிடதி என்ற இடத்தில் உள்ள கார் ஆலையில் உற்பத்தி செய்யபட்டு வந்தது. இதற்கென இந்த உற்பத்தி ஆலையில், ஒரு பிரத்யேக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்டது.

புகழ்வாய்ந்த டொயோட்டா இன்னோவா...

புகழ்வாய்ந்த டொயோட்டா இன்னோவா...

முதல் தலைமுறை டொயோட்டா இன்னோவா எம்பிவி, வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு மிகவும் புகழ்வாய்ந்த வாகனமாக விளங்கியது.

முதல் தலைமுறை டொயோட்டா இன்னோவா எம்பிவி, சில ஆண்டுகளுக்கு இந்த செக்மெண்டில் மூடி சூடா மன்னன் போல் விளங்கியது என்றால் அது மிகையாகாது.

2-ஆம் தலைமுறை இன்னோவா பிரவேசம்;

2-ஆம் தலைமுறை இன்னோவா பிரவேசம்;

முதல் தலைமுறை டொயோட்டா இன்னோவா எம்பிவியின் உற்பத்தி நிறுத்தப்படும் இதே நேரத்தில், இரண்டாம் தலைமுறை டொயோட்டா இன்னோவா எம்பிவியை டொயோட்டா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதற்கு இன்னோவா க்ரிஸ்ட்டா என்று பெயர் சூட்டபட்டுள்ளது. இந்த கிரிஸ்ட்டா, முதல் தலைமுறை டொயோட்டா இன்னோவாவின் பாரம்பரியம் மற்றும் புகழை தொடரும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

ஏமாற்றம்?

ஏமாற்றம்?

இன்னோவா க்ரிஸ்ட்டா என்று அழைக்கபடும் இரண்டாம் தலைமுறை டொயோட்டா இன்னோவா எம்பிவி கொண்டு வரப்படும் நேரத்தில், முதல் தலைமுறை டொயோட்டா இன்னோவா எம்பிவியும் சேர்த்து விற்பனை செய்யபடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

ஆனால், டொயோட்டா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், வெரும் கிரிஸ்ட்டா எம்பிவியை மட்டுமே இந்திய சந்தைகளில் வழங்க திட்டமிட்டுள்ளனர்.

பரிணாம வளர்ச்சி;

பரிணாம வளர்ச்சி;

முதல் டொயோட்டா இன்னோவா எம்பிவி, 2005-ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டது.

டொயோட்டா குவாலிஸ் மாடலுக்கு மாற்றாக தான், இந்த டொயோட்டா இன்னோவா எம்பிவி அறிமுகம் செய்யபட்டது.

டொயோட்டா இன்னோவா எம்பிவி அறிமுகத்தின் மூலம் டொயோட்டா மோட்டார்ஸ் நிறுவனம் அபாரமான வெற்றியை கண்டது. இந்திய வாகன சந்தைகளில் மட்டும் ஒரு மாதத்திற்கு சுமார் 5,000 டொயோட்டா இன்னோவா எம்பிவிகள் விற்பனையானது.

பிரிமியம் எம்பிவி;

பிரிமியம் எம்பிவி;

இன்னோவா க்ரிஸ்ட்டா என்று அழைக்கபடும் 2-ஆம் தலைமுறை டொயோட்டா இன்னோவா, பிரிமியம் எம்பிவியாக வழங்கப்பட உள்ளது.

இந்தியாவில் உற்பத்தி;

இந்தியாவில் உற்பத்தி;

டொயோட்டா இன்னோவா கார்கள் இந்தியாவில் தயாரிக்கபட்டது போல், இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளது.

விற்பனைக்கு அறிமுகம்;

விற்பனைக்கு அறிமுகம்;

புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, இந்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட உள்ளது.

விலை;

விலை;

புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் விலைகள் உள்ளிட்ட பிற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதன் அறிமுகத்தின் போது பிற தகவல்கள் வெளியாகலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

புதிய டொயோட்டா இன்னோவா, இந்தியாவில் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்?

இன்னோவா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Monday, March 14, 2016, 18:25 [IST]
English summary
Toyota Motors India has ended the production of their most popular vehicle, Toyota Innova in India. The Second generation new model Innova Crysta will be replacing Toyota Innova MPV very soon. Toyota Innova was very famous among the Taxi service opertors. To know more about Toyota Innova MPV and Crysta MPV, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+