புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட், டிசம்பரில் அறிமுகம்

By Ravichandran

டொயோட்டா நிறுவனம், தங்களின் புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் மாடலை, வரும் டிசம்பரில் அறிமுகம் செய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய டொயோட்டா பிரையஸ்...

புதிய டொயோட்டா பிரையஸ்...

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட், ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் டொயோட்டா நிறுவனம் வழங்கும் மாடல் ஆகும்.

இது, முதன் முதலாக 2016 டெல்லி ஆட்டோ எக்ச்போவின் போது அறிமுகம் செய்யபட்டது.

அறிமுகம்;

அறிமுகம்;

Gaadi Waadi வெளியிட்ட செய்தி படி, புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் மாடலை, டொயோட்டா நிறுவனம் இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட், 1.8 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த பெட்ரோல் இஞ்ஜின், ட்யூவல் எலக்ட்ரிக் மோட்டார் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் ட்யூவல் எலக்ட்ரிக் மோட்டார் சிஸ்டம் மூலம் கூட்டாக 166 பிஹெச்பியும், 305 என்எம் டார்க்கையும் வெளியாகிறது.

பேட்டரி;

பேட்டரி;

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் மாடலில், 8.8kW/h லித்தியம்-இயான் பேட்டரி பேக், மோட்டாருக்கு பவர் வழங்குகிறது.

இதன் ஹைப்ரிட் இஞ்ஜின், ஒரு லிட்டருக்கு 21.26 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

மாசு உமிழ்வு;

மாசு உமிழ்வு;

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் காரில் பிரைம் வேரியன்ட், ஒரு கிலோமீட்டருக்கு, 32 கிராம் கார்பன் டை ஆக்சைட் (CO2) எனப்படும் கரியமில வாயுவை மட்டுமே வெளியிடுகிறது.

தோற்றம்;

தோற்றம்;

அம்சமில்லாமல் இருந்த முந்தைய மாடலை காட்டிலும், புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் மாடல் வேறுபட்டு காணப்படுகிறது. இந்த புதிய டொயோட்டா பிரையஸ், எல்லா இடங்களிலும் கூர்மையான கோணங்கள் கொண்டுள்ளது.

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் மாடலின் முன் தோற்றம், ஹைட்ரஜன் மூலம் இயங்கும் மிராய் மாடலில் இருந்து ஏற்கபட்டுள்ளது.

பின் தோற்றம்;

பின் தோற்றம்;

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் மாடலின் பின் பகுதியில், பூமராங் ஸ்டைல் டெயில்லேம்ப்கள் உள்ளது.

இவை பார்ப்போரின் கண்களை பறிக்கும் வகையில் இருக்கும்.

அபார விற்பனை;

அபார விற்பனை;

டொயோட்டா நிறுவனம், முதன் முதலாக 1997-ஆம் ஆண்டில், ஹைப்ரிட் கார்களை விற்பனை செய்ய துவங்கியது.

அப்போது முதல், டொயோட்டா நிறுவனம், இது வரை சுமார் 9 மில்லியன் ஹைப்ரிட் கார்களை விற்பனை செய்துள்ளது. இதில், 4 மில்லியன் கார்கள், பிரையஸ் பேட்ஜ் கொண்டவை ஆகும்.

விலை;

விலை;

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது, சுமார் 40 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைபிரிட் காரின் இந்திய வருகை விபரம்!

டொயோட்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Saturday, June 11, 2016, 7:12 [IST]
English summary
Japanese carmaker Toyota seems to launch its New Toyota Prius Hybrid model during December in India. According to Gaadi Waadi, Toyota will launch Prius hybrid in India in December. Prius prime variant of car only emits 32g/km of CO2. This New Toyota Prius Hybrid customers can benefit from government's incentive policy for eco-friendly vehicles. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+