2017-க்குள் டொயோட்டாவின் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டம் அமெரிக்காவில் அறிமுகம்
டொயோட்டா நிறுவனம், தங்களின் கார்களில் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டத்தை 2017-ஆம் ஆண்டு இறுதிக்குள் வழங்க உள்ளனர்.
2022-ஆம் ஆண்டு காலகட்டத்திற்குள், அமெரிக்காவில் விற்கபடும் கார்களில், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்படும் என பெரும்பாலான கார் நிறுவனங்கள் ஒப்பு கொண்டுள்ளனர். ஆனால், டொயோட்டா நிறுவனம் இந்த நடைமுறையை 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, அதாவது 2017-ஆம் ஆண்டிலேயே துவக்கிவிடும் என தெரிவித்துள்ளது.
டொயோட்டா மற்றும் லெக்சஸ் நிறுவனங்கள், தாங்கள் அமெரிக்காவில் விற்கும் அனைத்து ட்ரிம்களிலும், அனைத்து மாடல்களிலும் இந்த ஆட்டோமேட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டம் என்ற பாதுகாப்பு சிஸ்டம் வழங்கும் என அறிவித்துள்ளது.
லெக்சஸ் ஜிஎக்ஸ், டொயோட்டா 4ரன்னர் மற்றும் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் டொயோட்டா மிராய் மாடல்களில் இந்த ஆட்டோமேட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து கருத்து கருத்து தெரிவித்த, வட அமெரிக்காவின் டொயோட்டா உயர் அதிகாரி, ஜிம் லெண்ட்ஸ் ஏராளமான தகவல்களை அறிவித்தார்.

அப்போது, "டொயோட்டா நிறுவனம், அனைவருக்கும் போக்குவரத்து முறைகளில் மேம்பாடுகள் கொண்டுவர முனைப்புடன் உள்ளோம். விபத்துகள் நேரும் பட்சத்தில், ஹை-லெவல் டிரைவர் அசிஸ்ட் டெக்னாலஜீஸ் (ஓட்டுநர்களுக்கு உதவும் உயர்மட்ட தொழில்நுட்பங்கள்) விபத்துகள் நடக்கும் போது பாதுகாப்பதை காட்டிலும், விபத்துகளே நிகழாமல் இருப்பதற்கும் உதவுகிறது.
இந்த துறையில் இத்தகைய தரங்களின் நிர்ணயம் மற்றும் அளவுகோள்களை உருவாக்குவதில் முன்னோடியாக இருப்பதில் பெருமை கொள்கிறோம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம், இந்த ஆட்டோமேட்டட் எமர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டங்களை கொண்டுவர
முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்" என ஜிம் லெண்ட்ஸ் தெரிவித்தார்.
இந்த ஆட்டோமேட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டம் நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் ரியர்-எண்ட் கிராஷ்கள் எனப்படும் வண்டியின் பின் பகுதியில் நடைபெறும் 1.7 மில்லியன் விபத்துகளை தவிர்க்க முடியும் என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








