கார் பார்க்கிங் சிரமங்களைப் போக்கும் புதிய டயர் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

By Meena

கார்களைக் கண்டுபிடித்த காலம் முதல் தற்போது வரை பல பரிசோதனை முயற்சிகள் அதில் மேற்கொண்டு பார்த்தாகிவிட்டது. வித்தியாசமான வடிவமைப்புடன் கூடிய கார்கள், எஞ்சின் மாற்றம் செய்யப்பட்ட கார்கள், பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாமல் இயங்கும் கார்கள், தானியங்கி கார்கள் என பல ஆய்வுகள் அதில் நடத்தப்பட்டு விட்டன.

காரின் எல்லா பாகங்களும் புதிய மாற்றங்களையும், வடிவங்களையும் பெற்று விட்டன. முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆட்டோ ரிக்ஷா வடிவிலான காரையும், தற்போதுள்ள லம்போகினியையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே எத்தனை மாற்றங்களை அவை கடந்து வந்துள்ளன என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்து விடும்.

எல்லாமுமே மாறிவிட்டது. ஆனால், நீண்ட காலமாக ஒரே தொழில்நுட்பத்தில் காரில் இயக்கப்படும் பாகம் டயர்கள் மட்டும்தான். அதன் தொழில்நுட்பங்களில் பெரிய அளவுக்கு எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை என்பதுதான் உண்மை.

சமீபத்தில் டுகாட்டி நிறுவனம் வீலுக்குள்ளேயே ஷாக் அப்சார்பரை வைத்து ஒரு புதிய டெக்னாலஜியைக் கண்டறிந்தது. அதற்கான சோதனை முயற்சி தற்போதுதான் நடைபெற்று வருவதால், எந்த அளவுக்கு அது சாத்தியமாகும் என்பது தெரியவில்லை.

அதேபோல, மெர்சடைஸ் பென்ஸின் தாய் நிறுவனமான டெய்ம்லர் கம்பெனி டயர்களைக் குளிர்விக்கும் புதியதொரு டெக்னாலஜியை உருவாக்கி வருகிறது. அதற்கான காப்புரிமை பெறும் நடவடிக்கையில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது.

டயர்களில் மேற்கொள்ளப்படும் கண்டுபிடிப்புகளும், ஆய்வுகளும் மிகச் சொற்பம்தான். ஆனாலும் கூட அதிலும் மூக்கின் மேல் விரல் வைக்கக் கூடிய செம டெக்னாலஜிகள் அறிமுகமாகிக் கொண்டேதான் இருக்கின்றன.

அந்த வரிசையில், பார்க்கிங் செய்வதற்கு வசதியான டயர் தொழில்நுட்பததை கண்டுபிடித்திருக்கிறார் கனடாவைச் சேர்ந்த வில்லியம் லிடியார்ட். ஸ்டீயரிங் கட்டுப்பாடு இல்லாமல் தானாக பார்க்கிங் இடவசதிக்கு தக்கவாறு நகர்ந்து செல்லும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த டயர்கள்.

அது எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த விளக்க விடியோ காட்சியையும் பதிவிட்டுள்ளார் வில்லியம். அந்த விடியோ யூ டியூபில் ஹிட்டடித்துள்ளது.

பார்க்கிங்கில் காரை நிறுத்தவும், ஏற்கெனவே நிறுத்திய வண்டியை உரசாமல் எடுக்கவும் இந்த டெக்னாலஜி மிகவும் உதவியாக இருக்கும் எனத் தெரிகிறது.

இது எந்த அளவுக்கு வைரலாகி, மக்களுக்குப் பயனளிக்கும் என்பதை அதன் முழு செயல் வடிவத்தை அறியாமல் கூற முடியாது. ஸோ லெட் வெயிட் அண்டு ஸீ.......

More from DriveSpark

Article Published On: Wednesday, July 6, 2016, 13:49 [IST]
English summary
Tyres Re-Engineered For Dynamic Parking Manoeuvres.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+