ஹூண்டாய் நிறுவனத்தின் டிஜிட்டல் கார் ஷோரூம் டெல்லியில் துவக்கம்
ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் முதல் டிஜிட்டல் கார் ஷோரூமை டெல்லியில் திறக்கப்பட்டுள்ளது..
இந்த டிஜிட்டல் அவுட்லெட் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டிஜிட்டல் அவுட்லெட் பற்றி...
டெல்லியில் அமைக்கபட்டுள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் இந்த அவுட்லெட், யுனைட்டி ஹூண்டாய் என்று பெயரிடபட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் அவுட்லெட், வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமான அனுபவத்தை வழங்கும் வகையில் உள்ளது. இந்தியாவின் நவீன கார் வாடிக்கையாளர்கள், ஹூண்டாய் நிறுவனம் சார்பாக மேற்கொள்ளபட்டுள்ள இந்த முயற்சியை கட்டாயம் பாராட்டும்படி உள்ளது.

சித்தாந்தம்;
டிஜிட்டல் அனுபவங்கள் வழங்கும் இந்த யுனைட்டி ஹூண்டாய் அவுட்லெட், ஹூண்டாய் நிறுவனத்தின் நியூ திங்கிங், நியூ பாஸ்ஸிபிலிட்டீஸ் ('New Thinking, New Possibilities') என்ற சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்டுள்ளது.

வசதிகள்;
யுனைட்டி ஹூண்டாய் டிஜிட்டல் அவுட்லெட்டில், வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்க விரும்பும் வாகனங்கள் குறித்து ஆராய்ச்சிகள் செய்ய முடியும்.
மேலும், டெஸ்ட் டிரைவ்களுக்கும் ஏற்பாடுகள் செய்து கொள்ள முடியும். இதோடு மட்டுமல்லாமல், கேஷ் அல்லது ஃபைனான்ஸ் வசதிகளுடன் பழைய கார்களை மாற்றி புதிய கார்களை வாங்கி கொள்ள முடியும்.

சிறப்பம்சங்கள்;
யுனைட்டி ஹூண்டாய் டிஜிட்டல் அவுட்லெட்டில், பயிற்சி பெற்ற மற்றும் மிகவும் திறமைமிக்க விற்பனை பிரதிநிதிகள் உள்ளனர்.
இங்கு வாடிக்கையாளர்கள் சுதந்திரமாக கார்கள் வாங்கும் உணர்வை பெற முடியும். இந்த டிஜிட்டல் அவுட்லெட்டை எந்த வாடிக்கையாளர்கள் வேண்டுமானாலும் எளிமையாக பயன்படுத்தி கொள்ள முடியும்.

கிடைக்கும் மாடல்கள்;
விரிவான டீலர்ஷிப் நெட்வர்க் மூலம், தற்போதைய நிலையில் ஹூண்டாய் நிறுவனம் மொத்தம் 10 மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

டெல்லி எக்ஸ்போவில் ஹூண்டாய்;
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஏராளமான இரு சக்கர வாகன நிறுவனங்கள் மற்றும் கார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், ஹூண்டாய் நிறுவனமும், ஏராளமான கான்செப்ட் கார்களையும், புதிய கார் மாடல்களை காட்சிபடுத்தவும், அறிமுகமும் செய்தனர்.

இதர தொடர்புடைய செய்திகள்;
புதிய ஹூண்டாய் சான்ட்டா பீ சிகாகோ ஆட்டோ ஷோவில் அறிமுகம்... விரைவில் இந்தியா வருகை!
ஹூண்டாய் ஹேப்பி மூவ் சேவ் அவர் ஹெரிட்டேஜ் என்ற திட்டம் துவக்கம்
ஹூண்டாய் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








