விரைவில் வரும் டாப்- 5 பட்ஜெட் ஆட்டோமேட்டிக்[ஏஎம்டி] கார்கள்!

Written By:

க்ளட்ச் பெடல் இல்லாமல் வரும் ஏஎம்டி என்ற புதிய ஆட்டோமேட்டிக் கார்களுக்கான வரவேற்பு எகிடுதகிடாக உள்ளது. இதையடுத்து, பட்ஜெட் விலையில் புதிய ஏஎம்டி வகை ஆட்டோமேட்டிக் கார்களை அறிமுகம் செய்வதில் கார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

அதில், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் 5 அசத்தலான ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட ஆட்டோமேட்டிக் கார்களின் விபரங்களை உங்களுக்கு வழங்குகிறோம். இதன்மூலம், உங்களது கார் வாங்கும் முடிவை தெளிவாக இறுதி செய்ய முடியும் என்று நம்புகிறோம்.

01. மாருதி டிசையர்

01. மாருதி டிசையர்

மாருதி டிசையர் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலின் ஸ்பை படங்களை சமீபத்தில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படித்திருப்பீர்கள். காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் நம்பர்-1 மாடலாக இருக்கும் மாருதி டிசையருக்கு, ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் வருகை கூடுதல் தெம்பை தரும். சிறப்பான எரிபொருள் சிக்கனம், சாதாரண கியரர்பாக்ஸ் மாடலைவிட ரூ.50,000 மட்டுமே கூடுதல் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வாடிக்கையாளர் மத்தியிலும் ஆவல் ஏற்பட்டிருக்கிறது. இந்த மாதத்திலேயே விற்பனைக்கு வந்துவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

02. டாடா ஸீக்கா

02. டாடா ஸீக்கா

டாடா ஸீக்கா காரும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாக வெளிவர இருக்கிறது. டாடாவிடமிருந்து வரும் ஓர் அட்டகாசமான பட்ஜெட் விலை கார் மாடலாக வருகிறது. மேலும், டாடா ஸீக்கா காரின் பெட்ரோல், டீசல் என இரண்டிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வரும் என்று தகவவல்கள் கூறுகின்றன. ஆனால், இரண்டிலும் ஏஎம்டி மாடல் வருமா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பட்ஜெட் விலையில் ஏஎம்டி மாடலை பார்ப்பவர்களுக்கு மிகச்சிறந்த சாய்ஸாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

03. டட்சன் ரெடி-கோ

03. டட்சன் ரெடி-கோ

டட்சன் ரெடி-கோ காரிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரெனோ க்விட் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய பட்ஜெட் கார் மாடல் ரூ.3 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதன் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் டாடா நானோ காருக்கு சரியான மாற்று சாய்ஸாக இருக்கும்.

04. மஹிந்திரா குவான்ட்டோ

04. மஹிந்திரா குவான்ட்டோ

மஹிந்திரா குவான்ட்டோ காம்பேக்ட் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவி மாடலிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வர இருக்கிறது. சிறப்பான இடவசதி, புதிய முக அமைப்பு, கூடுதல் வசதிகள் என்பதுடன், ஏஎம்டி கியர்பாக்ஸ் என்பதும் மஹிந்திரா குவான்ட்டோ ஃபேஸ்லிஃப்ட் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

05. ரெனோ க்விட்

05. ரெனோ க்விட்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ரெனோ க்விட் காரின் புதிய 1.0லி எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலும், ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே அதிரிபுதிரி வெற்றியை பதிவு செய்திருக்கும் ரெனோ க்விட் கார் ஏஎம்டி மாடலிலும் வருவதால், பலர் தங்களது கார் வாங்கும் முடிவை கூட ஒத்திபோட்டு வைத்துள்ளனர். சற்றே கூடுதலான விலையில் வரும் ரெனோ க்விட் காரின் ஏஎம்டி மாடல் வந்தால், ஆண் வாடிக்கையாளர்களை மட்டுமின்றி, பெண் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் முன்பதிவு செய்யும் வாய்ப்புள்ளது.

 
English summary
Upcoming Affordable Cars With AMT In India.
Story first published: Friday, January 1, 2016, 10:17 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark