மாருதி நிறுவனம் வருங்காலத்தில் வெளியிட உள்ள கார் மாடல்கள் - முழு விவரம்
மாருதி சுஸுகி நிறுவனம், வரும் காலத்தில் ஏராளமான புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.
மாருதி நிறுவனம், அறிமுகம் செய்ய உள்ள புதிய கார் மாடல்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;
விற்பனை, சந்தை மதிப்பு மற்றும் பிரான்ட் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு குறியீடுகளின் படி, இந்திய அளவில் மாருதி சுஸுகி நிறுவனம் தான் மிகப்பெரிய கார் நிறுவனமாக திகழ்கிறது.
இந்த நிறுவனம், விட்டாரா ப்ரெஸ்ஸா, பலேனோ போன்ற சிறந்த முறையில் விற்பனையாகும் கார்களை அறிமுகம் செய்துள்ளனர்.
மாருதி நிறுவனம், இந்திய மக்களின் நாடி துடிப்பை அறிந்து, சிறந்த தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. மாருதியின் வருங்கால திட்டங்கள் என்னவாக இருக்கும்? மாருதி நிறுவனம் விரைவில் இந்தியாவில் வழங்க உள்ள கார்கள் குறித்த தகவல்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மாருதி சுஸுகி இக்னிஸ்;
மாருதி சுஸுகி இக்னிஸ் தான், மாருதி நிறுவனம் அடுத்து அறிமுகம் செய்ய உள்ள மாடல் ஆகும். இது, அக்டோபர் அல்லது நவம்பர் பண்டிகை காலங்களின் போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
மாருதி சுஸுகி இக்னிஸ், ஸ்விப்ட் காருக்கு கீழாகவும், செலரியோ மற்றும் வேகன் ஆர் மாடலுக்கு மேலாகவும் வகைப்படுத்தபட்டுள்ளது.

மாருதி சுஸுகி இக்னிஸ், ஒரு புதிய செக்மென்ட்டை சேர்ந்ததாகும். இது ஹேட்ச்பேக் வகையை சேர்ந்ததாக இருக்கும் போதிலும், எஸ்யூவியின் அம்சங்களை கொண்டுள்ளது. இது மஹிந்திரா கேயூவி100 மாடலுடன் போட்டி போடும்.
இக்னிஸ், நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட கேபின் மற்றும் அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகம், விலை;
எதிர்பார்க்கப்படும் விலை ; 4 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் ரூபாய்
எதிர்பார்க்கப்படும் தேதி ; நவம்பர் 2016

மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ்;
மாருதி பலேனோ மாடலானது, மாருதி நிறுவனத்திற்கு மாபெரும் வெற்றி மாடலாக அமைந்துள்ளது. இது இதன் போட்டி மாடலான ஹூண்டாய் ஐ20-க்கு கடும் சவாலாக விளங்குகிறது.
பலேனோ, பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மன்ட்டில் வகைபடுத்தபட்டுள்ளது. இதற்கு, மேலும் வலு சேர்க்கும் வகையல் கூடுதல் தோற்றம் மற்றும் பவர் சேர்க்கப்பட்டுள்ளது.

டிசைன்;
டிசைன் பொருத்த வரை, எளிமையான பாடி கிட், முன் பக்கத்திலும், பக்கவாட்டிலும், பின் பக்கத்திலும் வழங்கபட்டுள்ளது. இதனால், இந்த பலேனோ மாடல் கூடுதலான ஸ்போர்ட்டியான தோற்றம் பெறுகிறது.
சுஸுகியின் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் இஞ்ஜின் தான், இந்த பலேனோ மாடலிலும் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ் மாடலின் பெயரில், ஆர்எஸ் என்பது ரேலி ஸ்போர்ட் என்பதை குறிக்கிறது. இதனை எடுத்து காட்டும் வகையில், ஆர்எஸ் (ரேலி ஸ்போர்ட்) பேட்ஜிங் இருக்கும்.

அறிமுகம், விலை;
எதிர்பார்க்கப்படும் விலை ; 5.5 லட்சம் ரூபாய் முதல் 8.5 லட்சம் ரூபாய்
எதிர்பார்க்கப்படும் தேதி ; நவம்பர் - டிசம்பர் 2016

மாருதி சுஸுகி விட்டாரா ப்ரெஸ்ஸா (பெட்ரோல்);
மாருதி நிறுவனம், காம்பேக்ட் எஸ்யூவி செக்மன்ட்டில் மிகவும் தாமதமாக பிரவேசம் செய்தது. ஆனாலும், விட்டாரா ப்ரெஸ்ஸா மூலம் நல்ல வெற்றியை பெற்று விட்டது.
சரியான தோற்றம் மற்றும் அளவுகோல்களுடன் அறிமுகமாகிய இந்த விட்டாரா ப்ரெஸ்ஸா அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது. இதனுடைய விற்பனை சாதனை, இதற்கு சான்றாக அமைந்துள்ளது.

மாருதி நிறுவனம், இந்த விட்டாரா ப்ரெஸ்ஸா மாடலை டீசல் மாடலில் மட்டுமே அறிமுகம் செய்திருந்தது, பெட்ரோல் மாடலில் அறிமுகம் செய்யவில்லை.
மாருதி நிறுவனம் வழங்கும் அனைத்து மாடல்களும், பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் கிடைக்கிறது. இதன் அடிப்படையில், விட்டாரா ப்ரெஸ்ஸா பெட்ரோல் மாடலில் விரைவில் வெளியாகினால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
பலேனோவில் உபயோகிக்கப்படும் அதே 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் இஞ்ஜின் தான், இந்த பெட்ரோல் மாடலிலான விட்டாரா ப்ரெஸ்ஸா மாடலிலும் பொருத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாருதி நிறுவனம், இந்த விட்டாரா ப்ரெஸ்ஸாவை, 1.4 லிட்டர் இஞ்ஜின் தேர்விலும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகம், விலை;
எதிர்பார்க்கப்படும் விலை ; 7 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய்
எதிர்பார்க்கப்படும் தேதி ; அக்டோபர் - நவம்பர் 2016

மாருதி சுஸுகி வேகன்ஆர் எம்பிவி;
டட்சன் நிறுவனம், கோ+ என்ற 7-சீட்டர் காரை அறிமுகம் செய்ததில் பெரிய வெற்றியை காணவில்லை. இந்த நிலையில்ம் மாருதி நிறுவனம், வேகன்ஆர் எம்பிவி என்ற 7-சீட்டர் காரை அறிமுகம் செய்ய உள்ளது.
எப்படி பார்த்தாலும், மாருதி வேகன்ஆர் வெற்றிகரமான மாடலாகவே விளங்குகிறது. மாருதி வேகன்ஆர் கொண்டுள்ள டால் பாய் டிசைன், பைசாவிற்கான மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் வெற்றிகரமான மாடலாக விளங்குகிறது.

மாருதி வேகன்ஆர் எம்பிவி, எர்டிகா மாடலுக்கு கீழாகவே வகைபடுத்தபட்டுள்ளது. இதன் விலை நிர்ணயம் தான், இதன் முக்கியமான விஷயமாக இருக்கும். இதை நன்கு உணர்ந்த மாருதி நிறுவனம், மாருதி வேகன்ஆர் எம்பிவியை சரியான விலையில் அறிமுகம் செய்யும்.
மாருதி வேகன்ஆர் எம்பிவிக்கு, ஆல்ட்டோ கே10 மாடலில் உள்ள 1.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் செலரியோ மாடலின் 793சிசி டீசல் இஞ்ஜின் பொருத்தப்படும்.

அறிமுகம், விலை;
எதிர்பார்க்கப்படும் விலை ; 4.5 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் ரூபாய்
எதிர்பார்க்கப்படும் தேதி ; 2016 இறுதியில்

மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஏஎம்டி;
மாருதி சுஸுகி ஸ்விப்ட் மாடலில் ஏஎம்டி வசதி நீண்ட காலத்திற்கு முன்னதாகவே அறிமுகம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
மாருதி நிறுவனம், 2016 மே மாதத்தின் போது, 12,355 மாருதி சுஸுகி ஸ்விப்ட் கார்களை விற்பனை செய்தது. இது அதிகமாக விற்பனையாகிய டாப் 5 மாடல்களில் ஒன்றாக இருந்தது.
எனினும், மாருதி சுஸுகி ஸ்விப்ட், அதன் சகோதர மாடலான பலேனோவிடம் இருந்து தான் போட்டியை எதிர்கொள்கிறது.

மாருதி நிறுவனம், தங்களின் ஒரு மாடலின் வெற்றி மற்றொரு மாடலின் வீழ்ச்சிக்கு காரணமாகி விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.
இதனால், மாருதி நிறுவனம் தங்களின் ஸ்விப்ட் மாடலை பல்வேறு அம்சங்களுடன், பல்வேறு வேரியன்ட்களில் அறிமுகம் செய்ய உள்ளது. அநேகமாக, இந்த ஏஎம்டி வசதியானது, டீசல் வேரியன்ட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.
இதன் இஞ்ஜின் விஷயத்தில் எந்த விதமான மாற்றங்களும் இருக்காது. 74 பிஹெச்பியை வெளியிடும் அதே 1.3-லிட்டர் டீசல் இஞ்ஜின் தான் இந்த மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஏஎம்டி மாடலில் பொருத்தப்படும்.

அறிமுகம், விலை;
எதிர்பார்க்கப்படும் விலை ; 6 லட்சம் ரூபாய் முதல் 7 லட்சம் ரூபாய்
எதிர்பார்க்கப்படும் தேதி ; 2016 இறுதி

மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 டீசல்;
மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் மாருதி ஆல்ட்டோ 800 தான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடலாக உள்ளது. ஆனால், சமீபத்தில் வெளியான ரெனோ க்விட் மற்றும் டட்சன் ரெடி-கோ ஆகிய மாடல்களிடம் இருந்து கடும் போட்டியை எதிர்கொள்கிறது.
இதனை சமாளிக்கும் விதமாக, மாருதி நிறுவனம் இந்த மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 மாடலை, டீசல் வேரியன்ட்டிலும் அறிமுகம் செய்ய உள்ளனர்.

செலரியோ மாடலில் காணப்படும் 793 சிசி இஞ்ஜின் தான், இந்த மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 டீசல் மாடலிலும் பொருத்தப்படும்.
இந்த இஞ்ஜின் 47 பிஹெச்பியையும், 125 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

அறிமுகம், விலை;
எதிர்பார்க்கப்படும் விலை ; 4 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய்
எதிர்பார்க்கப்படும் தேதி ; 2016 இறுதி

மாருதி சுஸுகி புதிய ஸ்விப்ட்;
சமீப காலமாக புதிய ஸ்விப்ட் மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இது விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
மாருதி நிறுவனம், இந்திய சந்தைகளுக்கான ஸ்விப்ட் மாடலை 2 முறை, பொலிவு கூட்டி வழங்க்யுள்ளனர். மாருதி ஸ்விப்ட், இந்தியாவில் தொடர்ந்து இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சிறந்த மாடல் என்ற பெருமையை தக்க வைத்து கொண்டுள்ளது.

எக்ஸ்டீரியர் பொருத்த வரை, புதிய ஸ்விப்ட், ரேப் அரவுண்ட் ஹெட்லேம்ப்கள், ஃபிளாட்டிங் ரூஃப் டிசைன், நியூ ஃபிரண்ட் கிரில் மற்றும் டிஆர்எல்-கள் ஆகிய அம்சங்கள் கொண்டிருக்கலாம்.
இன்டீரியர் பொருத்த வரை, புதிய ஸ்விப்ட், புதிய டேஷ்போர்ட், டச் ஸ்கிரீன் இன்ஃபோடேயின்மென்ட் சிஸ்டம், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் 3-ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள கொண்டிருக்கும்.
புதிய தலைமுறை மாருதி ஸ்விப்ட், 1.0-லிட்டர் பூஸ்டர்ஜெட் இஞ்ஜின் மற்றும் 1.3-லிட்டர் புதிய டீசல் இஞ்ஜின் கொண்டிருக்கலாம். இந்த மாடல், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் டிரான்ஸ்மிஷன் தேர்வுடன் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

அறிமுகம், விலை;
எதிர்பார்க்கப்படும் விலை ; 5 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் ரூபாய்
எதிர்பார்க்கப்படும் தேதி ; 2017 இறுதி

மாருதி சுஸுகி புதிய ஸ்விப்ட் டிசையர்;
மாருதியின் மிகவும் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றான மாருதி சுஸுகி ஸ்விப்ட் டிசையர் மாடலும் ஒன்றாகும். ஆனால் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் அம்சங்களில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்படும்.
மாருதி சுஸுகி புதிய ஸ்விப்ட் டிசையர் என அழைக்கப்பட உள்ள புதிய தலைமுறை ஸ்விப்ட் மாடலை போன்றே இருக்கும். இந்த 2 மாடல்களும் ஒரே டிசைன் சித்தாந்தம் பகிர்ந்து கொண்டிருக்கும். டிசையர் மாடலில், பூட் கூடுதலாக உள்ளது.

மாருதி சுஸுகி புதிய ஸ்விப்ட் டிசையர், புதிய தலைமுறை ஸ்விப்ட் மாடலின் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் இஞ்ஜின் அல்லது சுஸுகியின் புதிய டீசல் இஞ்ஜின் கொண்டிருக்கும்.

அறிமுகம், விலை;
எதிர்பார்க்கப்படும் விலை ; 5.50 லட்சம் ரூபாய் முதல் 9 லட்சம் ரூபாய்
எதிர்பார்க்கப்படும் தேதி ; 2017 இறுதி

இதர தொடர்புடைய செய்திகள்;
ஸ்விப்ட் தொடர்புடைய செய்திகள்
டிசையர் தொடர்புடைய செய்திகள்
மாருதி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








