2016-ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியாக உள்ள கார்கள் - முழு விவரங்கள்
2016-ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியாக உள்ள கார்களை பற்றி உங்களுக்கு தெரியுமா?
இந்திய வாகன சந்தைகளில் ஏராளமான கார் மாடல்கள் அறிமுகம் செய்யபட்டு வருகிறது. இதில் சில கார்கள் ஏற்கனவே அறிமுகம் செய்யபட்டது. சில கார் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யபட உள்ளது.
எந்த எந்த நிறுவனங்கள் என்ன கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது என வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

பென்ட்லீ பென்டைகா;
பென்ட்லீ பென்டைகா, உலகின் மிக வேகமான எஸ்யூவி என்ற சாதனையை படைத்துள்ளது. பென்டைகா எஸ்யூவி தான் பென்ட்லீ நிறுவனம் சார்பாக அறிமுகம் செய்யபட்ட முதல் எஸ்யூவி ஆகும்.
பென்ட்லீ பென்டைகா, 5,950 சிசி, ட்வி டர்போ, டபுள்யூ 12 இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் 608 பிஹெச்பியையும், அபாரமான என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி, வெரும் பவர் தொடர்பான அம்சம் மட்டும் கொண்டிருபதில்லை. இது மிகவும் சொகுசுமிக்க வெளிப்புற மற்றும் உட்புற அமைப்புகள் கொண்டுள்ளது.
இது சவுகரியமான அப்ஹோல்ஸ்ட்ரி, மிதக்கும் டிரைவர் பேனல் (ஃப்ளோட்டிங் டிரைவர் பேனல்) மற்றும் நன்கு ஃபினிஷிங் செய்யபட்ட ஃபினிஷிங் செய்யபட்ட கண்ட்ரோல்கள் உள்ளன. இந்திய வாகன சந்தைகளுக்கு என வெரும் 20 பென்ட்லீ பென்டைகா எஸ்யூவிகள் மட்டும் தான் ஒதுக்கபட்டிருந்தது. இவை அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டது.

அறிமுகம் செய்யபட்ட தேதி; 22 ஏப்ரல் 2016
விலை ; 3.85 கோடி ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா;
பழைய டொயோட்டா இன்னோவா, எம்பிவி செக்மண்ட்டில் தனக்கென ஒரு அளவுகோல் உருவாக்கியது. இந்த சாதனையை வேறு எந்த கார் தயாரிப்பாளர்களும் எதிர்கொள்ள முடியவில்லை.
டொயோட்டா நிறுவனம், தற்போது இதன் செக்மண்ட்டிலேயே மேலும் சிறந்த அம்சங்கள் கொண்ட புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியை அறிமுகம் செய்ய உள்ளனர். 2.4 லிட்டர் டீசல் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, 147 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டொயோட்டா நிறுவனம், 2.8 லிட்டர் டீசல் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியையும் வழங்க உள்ளது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வழங்கபட உள்ளது.
டிசைன் பொருத்த வரை, புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, கேம்ரி மற்றும் டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் ஆகியவற்றின் டிசைன் மொழியை பின்பற்றுகிறது. புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, பெரிய ஃப்ரண்ட் கிரில், எல்இடி டிஆர்எல் (டேடைம் ரன்னிங் லைட்கள்) மற்றும் வெளிபுறத்தில் செதுக்கபட்ட டிசைன் கொண்டுள்ளது.

அறிமுக தேதி; மே 3, 2016
எதிர்பார்க்கபடும் விலை ; 15 லட்சம் ரூபாய் - 20 லட்சம் ரூபாய்

ஹோண்டா பிஆர்-வி;
ஆட்டோமொபைல் துறையில், எஸ்யூவி செக்மண்ட் தான் மிகவும் முக்கியமான செக்மண்ட்டாக விளங்குகிறது.
இந்த நிலையில், ஹோண்டா நிறுவனம் இந்த செக்மண்ட்டில் தங்களது தடத்தை பதிக்க விரும்புகிறது.

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி பிரத்யேகமான 7-ஸீட்டர் இருக்கை அமைப்பு கொண்டதாக இருக்கும். இது தோற்றம் படி, எஸ்யூவியாக உள்ளது.
ஆனால், பயணிகள் அமரக்கூடிய வசதி படி, எம்பிவியாக உள்ளது.

அறிமுக தேதி; மே 6, 2016
எதிர்பார்க்கபடும் விலை ; 10 லட்சம் ரூபாய் - 13 லட்சம் ரூபாய்

டட்சன் ரெடி-கோ;
உயர்ந்த கார் போல் தோற்றம் கொண்ட டட்சன் ரெடி-கோ, சிறிய ஹேட்ச்பேக் கார் செக்மண்ட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. இது சந்தையில் உள்ள வேறு எந்த விதமான சிறிய கார்களை விடவும் நல்ல தோற்றம் கொண்டுள்ளது.
இதற்கு மிக நெருக்கமான போட்டி மாடலாக இருப்பது ரெனோ க்விட் கார் ஆகும்.

டட்சன் ரெடி-கோ, ரெனோ க்விட் காரில் இருந்து பெறபட்ட 800 சிசி இஞ்ஜின் தான் உபயோகிக்கபடுகிறது.
இந்த இஞ்ஜின், 53 பிஹெச்பியையும், 72 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

உத்தேச அறிமுக தேதி; மே 2016
எதிர்பார்க்கபடும் விலை ; 2.5 லட்சம் ரூபாய் - 3.5 லட்சம் ரூபாய்

மாருதி சுஸுகி இக்னிஸ்;
மாருதி நிறுவனம், பலேனோ ரூபத்தில் ஒரு சிறந்த காரை அறிமுகம் செய்தது. இதையடுத்து, மாருதி நிறுவனம் பண்டிகை காலத்தின் போது, இக்னிஸ் மாடலின் ரூபத்தில் சிறிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை அறிமுகம் செய்ய உள்ளனர்.
மாருதி சுஸுகி இக்னிஸ் சிறிய பிரிமியம் ஹேட்ச்பேக், மாருதியின் பிரிமியம் நெட்வர்க்கான நெக்ஸா மூலம் அறிமுகம் விற்பனை செய்யபட உள்ளது.

மாருதி இக்னிஸ் பிரிமியம் ஹேட்ச்பேக், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் ஆகிய 2 இஞ்ஜின் தேர்வுகளில் வெளியாக உள்ளது.
எக்ஸ்டீரியர் தோற்றம் படி, மாருதி இக்னிஸ் நவீனமான மற்றும் ரெட்ரோ மற்றும் ஆகிய 2 விதமான தோற்றங்களையும் கொண்டுள்ளது. இது இளைய தலைமுறையினரை இலக்கு வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும்.

உத்தேச அறிமுக தேதி; அக்டோபர் 2016
எதிர்பார்க்கபடும் விலை ; 5 லட்சம் ரூபாய் - 6 லட்சம் ரூபாய்

ஃபோக்ஸ்வேகன் அமியோ;
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்கும் அமியோ, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டு, பின்னர் அறிமுகம் செய்யபட்டது.
ஃபோக்ஸ்வேகன் அமியோ, போலோ பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது. மேலும், அமியோ காரின் பெரும்பாலான கூறுகள், போலோ மாடலில் இருந்து பகிர்ந்து கொள்ளபடும்.

இதை நீங்கள் போலோ காம்பேக்ட் செடான் என்று அழைத்து கொள்ளலாம். இந்த மாடலில் உள்ள அம்சங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
எனினும், இதில் உபயோகிக்கபடும் போலோ இஞ்ஜினில் இருந்து அதிகம் எதிர்பார்க்கபடுகிறது.

உத்தேச அறிமுக தேதி; அக்டோபர் 2016
எதிர்பார்க்கபடும் விலை ; 6 லட்சம் ரூபாய் - 8.5 லட்சம் ரூபாய்

டாடா நெக்ஸன்;
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், காம்பேக்ட் எஸ்யூவி செக்மண்ட்டில் சற்று மந்தமாகவே இருந்து வந்தது. எனினும், இந்த டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி, டாடா நிறுவன தயாரிப்புகளின் விற்பனைக்கு பெரிய வலிமை சேர்க்க உள்ளது.
முதற்கட்ட தோற்றங்களின் படி, டாடா நெக்ஸன் நிச்சயம் ஈர்க்கும் வகையில் உள்ளது என கூறலாம். டாடா தயாரிப்புகளின் ஆர்வலர்கள் வேறு எந்த விதமான காம்பேக்ட் எஸ்யூவியை வாங்குவதை காட்டிலும், இந்த டாடா நெக்ஸன் காருக்காக கட்டாயம் காத்திருப்பார்கள் என தெரிகிறது.

டாடா நெக்ஸன், அதன் இணை மாடல்களான டாடா போல்ட் மற்றும் டாடா ஸெஸ்ட் கார்களின் பிளாட்ஃபார்மில் வடிவமைக்கபட்டுள்ளது.
டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவிக்கு, புதிய 1.5 லிட்டர் டர்போ சார்ஜ்ட் டீசல் இஞ்ஜின் பொருத்தபட உள்ளது.

உத்தேச அறிமுக தேதி; டிசம்பர் 2016
எதிர்பார்க்கபடும் விலை ; 7 லட்சம் ரூபாய் - 10 லட்சம் ரூபாய்

ஹூண்டாய் டுஸான்;
மூன்றாம் தலைமுறை ஹூண்டாய் டுஸான், இந்தியாவில் பண்டிக்கைகாலத்தின் போதோ அல்லது அதற்கு முன்னதாகவோ இந்தியாவில் பிரவேசம் செய்யும்.
டிசைன் படி, ஹூண்டாய் நிறுவனத்தின் பிரத்யேக டிசைன் அம்சமான புளூயிடிக் சித்தாந்தம் உள்ளது. மேலும், ஹூண்டாய் டுஸான், சான்ட்டா பீ மாடலின் பல்வேறு அம்சங்களை ஏற்று கொண்டுள்ளது.

ஹூண்டாய் டுஸான் முதன்மையில் எஸ்யூவியாக இருக்கும். இது காம்பேக்ட் எஸ்யூவி செக்மண்ட்டில் போட்டி போடாது.
ஹூண்டாய் டுஸான் காரில், அனேகமாக 1.4 லிட்டர் டீசல் இஞ்ஜின் பொருத்தபடலாம். இது குறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

உத்தேச அறிமுக தேதி; செப்டம்பர் 2016
எதிர்பார்க்கபடும் விலை ; 18 லட்சம் ரூபாய் - 20 லட்சம் ரூபாய்

மாருதி பலேனோ ஆர்எஸ்;
மாருதி நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தபட்சம் 2 மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக உறுதி செய்துள்ளது.
ஏற்கனவே பண்டிகை தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களின் போது மாருதி சுஸுகி இக்னிஸ் அறிமுகம் செய்யபடும் என அறிவித்துள்ளது. இந்த நிலையில், மாருதி பலேனோ ஆர்எஸ் மாடலை, இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.

டிசைன் படி, மாருதி பலேனோ ஆர்எஸ், பலேனோ ஆர்எஸ் மாடலை போன்றே இருக்கும். மாருதி பலேனோ ஆர்எஸ் மாடலில் சைட் ஸ்கர்ட்ஸ் மற்றும் மைனர் பாடி கிட் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கபட்டு, கூடுதல் ஸ்போர்ட்டியான டிசைன் வழங்கபட்டுள்ளது.
மாருதி பலேனோ ஆர்எஸ் மாடலுக்கு 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் இஞ்ஜின் பொருத்தபடலாம். இந்த இஞ்ஜின் 110 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

உத்தேச அறிமுக தேதி; டிசம்பர் 2016
எதிர்பார்க்கபடும் விலை ; 7 லட்சம் ரூபாய் - 9 லட்சம் ரூபாய்

ஜீப் கிராண்ட் செரோக்கீ எஸ்ஆர்டி மாடல்;
ஜீப் கிராண்ட் செரோக்கீ எஸ்ஆர்டி மாடல் தொடர்பான ஏராளமான ஸ்பை படங்கள், இணையதளங்களில் வெளியாகியுள்ளன. இது விரைவில் அறிமுகம் செய்யபடும் என தகவல்கள் வெளியாகின்றது.
உற்பத்தி நிலையிலான ஜீப் கிராண்ட் செரோக்கீ எஸ்ஆர்டி எஸ்யூவி, அதிக பிரிமியம் தன்மை கொண்டதாக இருக்கும். இதில் ஹீட்டட் மற்றும் வெண்டிலேட்டட சீட்கள், எலக்ட்ரிக் டெயில்கேட் மற்றும் 20 இஞ்ச் குரோம் அல்லாய் வீல்கள் உள்ளிட்ட ஏராளமான சொகுசு அம்சங்கள் பொருத்தபட்டிருக்கும்.

ஜீப் கிராண்ட் செரோக்கீ எஸ்ஆர்டி எஸ்யூவி, 3.0 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டதாக இருக்கும். இது 237 பிஹெச்பியையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.
இதன் இஞ்ஜின், 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டிருக்கும்.

உத்தேச அறிமுக தேதி; மே - ஜூன் 2016
எதிர்பார்க்கபடும் விலை ; 35 லட்சம் ரூபாய் - 50 லட்சம் ரூபாய்

இதர தொடர்புடைய செய்திகள் - 1;
விரைவில் இந்தியா வரும் 14 புதிய மோட்டார்சைக்கிள்கள் - முழு விவரங்கள்
இந்தியாவில் டாப்-10 இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் - முழு விவரங்கள்
150சிசி மார்க்கெட்டில் அதிக மைலேஜ் தரும் டாப் 10 பைக் மாடல்கள்!

இதர தொடர்புடைய செய்திகள் - 2;
விரைவில் விற்பனைக்கு வரும் புதிய கார் மாடல்கள் - சிறப்புத் தொகுப்பு
பண்டிகை காலத்தில் ரிலீசாகும் புதிய கார் மாடல்கள் - ஒரு பார்வை
போக்குவரத்து நெரிசலை குறைக்க மடக்கக்கூடிய சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்

இதர தொடர்புடைய செய்திகள் - 3;
இந்த ஆண்டு ரிலீஸ் பட்டியலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் டாப் 10 கார்கள்!
விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய பைக் மாடல்கள் - சிறப்புத் தொகுப்பு
இந்த ஆண்டில் அறிமுகமாகும் புதிய கார்கள்- சிறப்புத் தொகுப்பு

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








