இந்த ஆண்டில் ரிலீசாகும் புதிய எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் கார் மாடல்கள்!

By Saravana

நம் நாட்டில் எஸ்யூவி கார்களுக்கு வாடிக்கையாளர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் எஸ்யூவி வகையில் விற்பனைக்கு வந்த அனைத்து மாடல்களுமே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் மாடல்களுக்கான வரவேற்பை மனதில் வைத்து, பல புதிய மாடல்களை கார் நிறுவனங்கள் வரிசை கட்ட காத்திருக்கின்றன.

இந்தநிலையில், இந்த ஆண்டில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் வகை கார் மாடல்களை இந்த பட்டியலில் காணலாம். இவற்றில் பெரும்பாலான மாடல்கள் அடுத்த மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச வாகன கண்காட்சி திருவிழாவில் பார்வைக்கு வர இருக்கின்றன.

01. டட்சன் கோ க்ராஸ்

01. டட்சன் கோ க்ராஸ்

கடந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த வாகன கண்காட்சியில், டட்சன் பிராண்டின் புதிய க்ராஸ்ஓவர் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதன் கான்செப்ட் மாடலே, தயாரிப்பு நிலை மாடலை ஒத்த அம்சங்களை பெற்றிருந்தது. எனவே, அடுத்த மாத கண்காட்சியில் இந்த காரின் தயாரிப்பு நிலை மாடலை எதிர்பார்க்கலாம். டட்சன் கோ க்ராஸ் என்று அழைக்கப்படும் இந்த புதிய க்ராஸ்ஓவர் மாடல் குறைவான பட்ஜெட்டில் வருவது அனைவரின் புருவத்தை உயர்த்தியிருக்கிறது. டிசைனும் மிக சிறப்பாக அமைந்துள்ளது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் பொருத்தப்படும் வாய்ப்பு இருந்தாலும், உறுதியான தகவல் இல்லை. ரூ.4.5 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது.

02. ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட்

02. ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட்

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் அதிரிபுதிரி வெற்றியாளன் ரெனோ டஸ்ட்டர். ஆனால், புதிய போட்டியாளர்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் விற்பனையில் திணறி வருகிறது. இந்த நிலையில், நெருக்கடிகளை உடைத்தெறியும் விதத்தில், புதிய பொலிவுடன் கூடிய தோற்றம் மற்றும் கூடுதல் வசதிகளுடன் கூடிய ரெனோ டஸ்ட்டரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முக்கியமாக ரெனோ டஸ்ட்டரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் வருவதாக வெளியான தகவல், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மற்றபடி, எஞ்சின் ஆப்ஷன்களில் மாற்றமிருக்காது.

03. டாடா ஆஸ்பிரே

03. டாடா ஆஸ்பிரே

அர்த பழசு டிசைன் கார்களை கழற்றிவிட்டு, சிறப்பான டிசைன் கொண்ட கார் மாடல்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுக்கத் துவங்கியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். அந்த விதத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் மாடல் டாடா ஆஸ்பிரே என்ற புதிய மினி எஸ்யூவி மாடல். இந்த புதிய மினி எஸ்யூவி மாடல் டிசைனில் ஆஹா சொல்ல வைக்கும் என்று கூறலாம். தீவிர சாலை சோதனைகளில் இருக்கும் இந்த புதிய மினி எஸ்யூவி 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

04. மாருதி மினி எஸ்யூவி

04. மாருதி மினி எஸ்யூவி

மாருதி நிறுவனத்தின் முதல் மினி எஸ்யூவி மாடலாக வர இருக்கிறது. ஒருவழியாக தற்போது தயாரிப்பு நிலை மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 பேர் பயணிப்பதற்கான இடவசதியை கெண்டிருக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா டியூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மார்க்கெட்டை பதம் பார்க்க காத்திருக்கிறது.

05. டாடா ஹெக்ஸா

05. டாடா ஹெக்ஸா

டாடா ஆரியா எம்பிவி காரை அடிப்படையாகக் கொண்டு மேம்படுத்தப்பட்ட எஸ்யூவி மாடலாக வருகிறது. இதுவும் சிறப்பான டிசைன் அம்சங்களை கொண்டிருப்பதோடு, அதிக வசதிகளை கொண்டு வாடிக்கையாளர்களை கவரும் என தெரிகிறது. இந்த எஸ்யூவியில் 2.2 லிட்டர் வேரிகோர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கும். 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கலாம். மேலும், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

06. சாங்யாங் டிவோலி

06. சாங்யாங் டிவோலி

மஹிந்திரா குழுமத்தின் கீழ் செயல்படும் தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிவோலி காம்பேக்ட் எஸ்யூவியும் விரைவில் இந்தியா வருகிறது. தற்போது சாலை சோதனைகளில் இருக்கும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல் ஸ்டைலிலும், வசதிகளிலும் பிரிமியம் காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக நிலை நிறுத்தப்படும். ரெக்ஸ்டனுக்கு அடுத்து சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து வரும் இரண்டாவது மாடல் டிவோலி. அடுத்த மாத வாகன கண்காட்சியில் இந்த புதிய மாடலை எதிர்பார்க்கலாம். ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

07. நிசான் எக்ஸ் - ட்ரெயில்

07. நிசான் எக்ஸ் - ட்ரெயில்

கடந்த 2014ம் ஆண்டு இந்தியாவில் நிசான் எக்ஸ்- ட்ரெயில் எஸ்யூவியின் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், புத்தம் புதிய நிசான் எக்ஸ் ட்ரெயில் எஸ்யூவியை இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்ய நிசான் திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய எஸ்யூவியில் 138 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் அளிக்க வல்ல 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும். டிசைன், சிறப்பான எஞ்சின் ஆகியவை இதனை முன்னிறுத்தும்.

08. ஃபோக்ஸ்வேகன் டிகுவான்

08. ஃபோக்ஸ்வேகன் டிகுவான்

அடுத்த மாதம் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போவில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய தலைமுறை டிகுவான் எஸ்யூவி மிகச்சிறந்த இடவசதி, கட்டுமானத் தரம், வசதிகள் கொண்டதாக இருக்கும். 7 பேர் செல்லும் வசதி கொண்ட இந்த எஸ்யூவி பெட்ரோல், டீசல் மாடல்களில் எதிர்பார்க்கப்படுகிறது. பிரிமியம் எஸ்யூவி செக்மென்ட்டில் நிலைநிறுத்தப்படும்.

09. ஹோண்டா பிஆர்வி

09. ஹோண்டா பிஆர்வி

ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா அடங்கிய காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் நிலைநிறுத்தப்பட இருந்தாலும், இது 7 சீட்டர் எஸ்யூவி மாடலாக இருக்கும். எனவே, அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஹோண்டா சிட்டி காரில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. சிறந்த மைலேஜ், அதிகம் பேர் பயணிக்கும் வாய்ப்பு, ஹோண்டா எஞ்சின் போன்ற அம்சங்கள் இதனை முன்னிலைப்படுத்தும்.

10. ஜாகுவார் எஃப் ஃபேஸ்

10. ஜாகுவார் எஃப் ஃபேஸ்

ஜாகுவார் நிறுவனத்தின் பிரிமியம் எஸ்யூவி மாடல். இந்த ஆண்டின் பிற்பாதியில் இந்த சொகுசு எஸ்யூவி மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஜாகுவார் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக, அடுத்த மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலும் இந்த புதிய மாடலை காணலாம்.

11. ஜீப் செரோக்கீ

11. ஜீப் செரோக்கீ

ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் கீழ் செயல்படும் அமெரிக்காவின் ஜீப் பிராண்டு எஸ்யூவிகள் இந்தியா வருவது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதற்காக, அந்த நிறுவனத்தின் பிரத்யேக இணையதளமும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஜீப் செரோக்கீ எஸ்ஆர்டி மற்றும் ஜீப் ரேங்லர் அன்லிமிடேட் மாடல்கள் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

12. ஃபோர்டு எண்டெவர்

12. ஃபோர்டு எண்டெவர்

புதிய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியும் இந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. முற்றிலும் புதிய தோற்றம், நவீன தொழில்நுட்ப வசதிகள், இடவசதியில் வாடிக்கையாளர்களை கவரும். டொயோட்டா ஃபார்ச்சூனருடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
we pick 12 SUVs and crossover that will be launched in India this year.
Story first published: Saturday, January 2, 2016, 17:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X